காத்தான்குடி அஹமட் வீதி பகுதியில் வீடொன்றில் இருந்த பெண்ணை துப்பாக்கி காட்டி மிரட்டி தங்க நகை மற்றும் பணத்தை இனம்தெரியாத நபர் ஒருவர் கொள்ளையடித்து சென்றுள்ளார்.
சந்தேக நபர் துப்பாக்கியாலும் கைகளாலும் பெண்ணை தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தாக்குதலில் காயமடைந்த 32 வயதுடைய பெண் காத்தான்குடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபர் பெண்ணின் பையிலிருந்த தங்கப் பொருட்களையும் 20 இலட்சம் ரூபா பணத்தையும் திருடிக்கொண்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தக் கொள்ளைச் சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளில்,ஆரியம்பதி கிழக்கைச் சேர்ந்த 43 வயதுடைய ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.என்பது குறிப்பிடத்தக்கது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக