வீடொன்றில் மனைவியை எரித்துக் கொன்ற கணவனுக்கு 9 வருடங்களின் பின்னர், விசாரணைகள் மற்றும் சாட்சியங்களின் அடிப்படையில் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து
நேற்று தீர்ப்பளித்துள்ளது
கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 20 ஆம் திகதி மானிப்பாய் காக்கைதீவில் உள்ள வீடொன்றில் மனைவியின் மீது மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துக் கொன்ற குற்றச்சாட்டில், அவருடைய
கணவர் கைது
செய்யப்பட்டிருந்தார். 2019 ஆம் ஆண்டு முதல் மேல் நீதிமன்றில் விசாரணைகள் இடம்பெற்று வந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது.
என்பது குறிப்பிடத்தக்கது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக