siruppiddy

18

siruppiddy

unkal

unkal

புதன், 19 ஜூன், 2024

துரித உணவகத்தில் டெல்லியில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு ஒருவர் பலி

டெல்லியில் Burger King துரித உணவகத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ஒருவர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேற்கு டெல்லியின் ரஜோரி கார்டனில் Burger King துரித உணவகம்
 ஒன்று இயங்கி வருகிறது. இங்கு நேற்றிரவு கையில் துப்பாக்கியுடன் மர்ம நபர்கள் திடீரென நுழைந்தனர். அங்கிருந்த நபர் ஒருவரை குறைந்தது 15 முறை
 துப்பாக்கியால் சுட்டனர்.
பின்னர் வெளியே காத்திருந்த தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து தாக்குதல்தாரிகள் அங்கிருந்து தப்பிச்சென்றனர்.
குண்டு காயம்பட்ட படுகாயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக அறிவித்தனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் கொல்லப்பட்ட நபரின் பையில் இருந்து பேருந்து பயணச்சீட்டு, போன் சார்ஜரை மட்டும் கைப்பற்றினர். ஆனால் செல்போன், அடையாள அட்டைகள் கிடைக்கவில்லை.

இந்த நிலையில், பலியானவரின் பெயர் அமன் என்றும், ஒரு கும்பல் போட்டியே கொலைக்கு வழிவகுத்ததாகவும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
என்பது குறிப்பிடத்தக்கது 




 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக