siruppiddy

18

siruppiddy

unkal

unkal

ஞாயிறு, 23 ஜூன், 2024

நாட்டில் பேருந்து ஒன்றுடன் முச்சக்கரவண்டி மோதியதில் இருவர் உயிரிழப்பு இருவர் வைத்தியசாலையில்

நாட்டில் பஸ் ஒன்றும் முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அனுராதபுரம் - பாதெனிய வீதியில் தலாவ எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் இன்று (23-06-2024) காலை இந்த பயங்கர விபத்து
 இடம்பெற்றுள்ளது.
19 மற்றும் 24 வயதுடைய இரு இளைஞர்களே உயிரிழந்துள்ளனர். விபத்துக்குள்ளான முச்சக்கரவண்டியில் நான்கு பேர் பயணித்தமை 
என்பது குறிப்பிடத்தக்கது 
உல்லாசப் பயணத்திற்காக இரத்தினபுரியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த பஸ்ஸுடன் முச்சக்கரவண்டி மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தலாவ பொலிஸார் 
தெரிவித்தனர்.
விபத்தில் இருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும், தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.என்பது குறிப்பிடத்தக்கது 





 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக