siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வியாழன், 14 நவம்பர், 2024

நாட்டில் வில்கமுவ பிரதேசத்தில் பஸ் விபத்தில் மூவர் உயிரிழப்பு முப்பத்தி ஒன்பது பேர் காயம்

நாட்டில் மாத்தளை வில்கமுவ பிரதேசத்தில் இடம்பெற்ற பஸ் விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 39 பேர் 
காயமடைந்துள்ளனர்.
தம்புள்ளை – மஹியங்கனை வீதியில் மாத்தளை எலவகந்த பிரதேசத்தில் இன்று மாலை 7.30 மணியளவில் பஸ்ஸொன்று பள்ளத்தில் வீழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
எதிர்திசையில் பயணித்த வேன் மீது மோதியதில் பஸ் பள்ளத்தில் விழுந்துள்ளது.
இந்த விபத்தில் தனியார் பேருந்தில் இருந்த 37 பேரும் (37) வேனில் பயணித்த 5 பேரும் (05) காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் வில்கமுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் பேருந்தில் பயணித்த இருவர் மற்றும் வேனில் பயணித்த ஒருவரும் உயிரிழந்துள்ளனர். என்பது குறிப்பிடத்தக்கது


0 கருத்துகள்:

கருத்துரையிடுக