நாட்டில் கல்கமுவ - எஹெடுவெவ பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட கத்தொருவ பிரதேசத்தில் காட்டு யானைகளைப் புகைப்படம் எடுக்க முயன்ற மூவர் காட்டு யானை தாக்கி காயமடைந்துள்ளனர்.
இந்த சம்பவம் 31-10-2024.வியாழக்கிழமை அன்று மாலை
இடம்பெற்றுள்ளது.
அநுராதபுரம் - திரப்பனை மற்றும் கத்தொருவ ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் யுவதி ஒருவரும் இரு இளைஞர்களுமே
காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் மீகலேவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.என்பதாகும்-
0 கருத்துகள்:
கருத்துரையிடுக