siruppiddy

18

siruppiddy

unkal

unkal

திங்கள், 6 ஏப்ரல், 2026

முதியவரை மோதி விட்டு யாழில். தப்பியோடிய மோட்டார் சைக்கிள் ஓட்டி - விபத்தில் சிக்கிய முதியவர் உயிரிழப்பு

யாழில் மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கி காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 
அத்தியடி பகுதியை சேர்ந்த சேவியர் சவுந்தரநாயகம் (வயது 70) என்பவரே உயிரிழந்துள்ளார் 
குறித்த முதியவர் நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு வீட்டிற்கு அருகில் உள்ள கடையொன்றுக்கு தனது துவிச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்த வேளை, பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் வந்தவர்கள் முதியவரை மோதிவிட்டு அவ்விடத்தில் இருந்து 
தப்பி சென்றுள்ளனர்.
முதியவர் வீட்டிற்கு திரும்பி சென்று தான் விபத்துக்குள்ளான விடயத்தினை வீட்டாருக்கு தெரிவித்த பின்னர் , சிறிது நேரத்தில்
 மயங்கி சரிந்துள்ளார். 
உடனடியாக வீட்டார் அவரை யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை சிகிச்சை பலனின்றி
 உயிரிழந்துள்ளார். 
குறித்த விபத்து சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில் , அப்பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவான காட்சிகளின் அடிப்படையில் மோட்டார் சைக்கிள் ஓட்டியை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர். என்பதும்  குறிப்பிடத்தக்கது.

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


0 கருத்துகள்:

கருத்துரையிடுக