siruppiddy

18

siruppiddy

unkal

unkal

சனி, 15 ஆகஸ்ட், 2026

லண்டனில் உலகின் முதல் பாதசாரி கார் மோதி உயிரிழந்த 1896 இல் நடந்த சோக வரலாறு

உலகின் முதல் பாதசாரி  கார் மோதி  1896 ஆகஸ்ட் 17 அன்று லண்டனில் 44 வயதான பிரிட்ஜெட் டிரிஸ்கோல் (Bridget Driscoll) சாலையைக் கடக்கும்போது மோட்டார் கார் மோதி உயிரிழந்தார். அப்போது மோட்டார் வாகனங்கள் மக்களுக்கு மிகவும் புதுமையானவை. 
விபத்தை ஏற்படுத்திய கார் சோதனை ஓட்டத்தில் ஈடுபட்டிருந்ததாகவும், அதன் வேகம் தொடர்பாக விசாரணையில் பல்வேறு சாட்சியங்கள் முன்வைக்கப்பட்டதாகவும் வரலாற்றுப் பதிவுகள் 
குறிப்பிடுகின்றன.
இந்த மரணம் தொடர்பான விசாரணையின் முடிவில், அது தற்செயலான மரணம் எனத் தீர்மானிக்கப்பட்டது. பிரிட்ஜெட் டிரிஸ்கோல், பிரிட்டனில் பெட்ரோல் இயந்திர மோட்டார் கார் மோதி உயிரிழந்த முதல் பாதசாரியாக வரலாற்றில் பதிவாகியுள்ளார்.
அந்த விசாரணையை நடத்திய அதிகாரி, “இதுபோன்ற சம்பவம் மீண்டும் ஒருபோதும் நிகழக்கூடாது” என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தியதாகவும் வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.
130 ஆண்டுகளுக்கு முன்பு புதுமையாக இருந்த மோட்டார் வாகனம், சாலைப் பாதுகாப்பின் அவசியத்தை உலகிற்கு உணர்த்திய ஒரு சோகமான வரலாற்றையும் உருவாக்கியது. என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html


0 கருத்துகள்:

கருத்துரையிடுக