siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வியாழன், 16 நவம்பர், 2023

கட்டுநாயக்க விமான நிலையத்தில் போலி வீசாவில் கனடா செல்ல முயன்றவர் கைது

போலி கனேடிய வீசாவைப் பயன்படுத்தி டுபாய் ஊடாக கனடாவுக்கு தப்பிச் செல்ல முயன்ற இலங்கையர் ஒருவர், குடிவரவு மற்றும் குடியகல்வு எல்லை அமலாக்கப் பிரிவின் அதிகாரிகள் குழுவினால்,16-11-2023. இன்று காலை கைது செய்யப்பட்டார்.
இவர் மட்டக்களப்பை வசிப்பிடமாக கொண்ட 37 வயதுடைய தமிழர் ஆவார்.
16-11-2023.இன்று காலை 08.15 மணிக்கு டுபாய்க்கு புறப்படவிருந்த எமிரேட்ஸ் எயார்லைன்ஸின் ரிகே-653 விமானத்தில் பயணிப்பதற்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.
அவர் சமர்ப்பித்த ஆவணங்களில் கனேடிய விசா குறித்து சந்தேகம் கொண்ட விமான அதிகாரிகள், அவரை குடிவரவு மற்றும் எல்லை அமலாக்க அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். தொழில்நுட்ப
 சோதனையில் இந்த விசா போலியானது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதனையடுத்து, இவரை கைது செய்த குடிவரவு எல்லை 
அமலாக்கப் பிரிவு அதிகாரிகள், அவர்களிடம் நடத்திய
 விசாரணையில், இந்த விசாவை தயார் செய்ய தரகரிடம் 30 இலட்சம் ரூபாய் கொடுத்ததாகவும், மேலும் 30 இலட்சத்தை கனடா சென்ற பிறகு தருவதாக ஒப்புக்கொண்டதாகவும் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட இந்த நபர் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
என்பதும் குறிப்பிடத்தக்கது   

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>





புதன், 15 நவம்பர், 2023

நாட்டில் கஹதுடுவ பகுதியில் பேருந்து ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளான சொகுசு வான்

நாட்டில் கஹதுடுவ பொல்கசோவிட்ட சந்தியில் பஸ் ஒன்றும் சொகுசு வான் ஒன்றும் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. 
இந்த விபத்தில் காயமடைந்த பள்ளி மாணவி உள்பட 6 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  
மத்தேகொடையிலிருந்து வந்த வேன், கொழும்பு நோக்கித் திரும்புவதற்குத் தயாரான போது கெஸ்பேவயிலிருந்து கொழும்பு நோக்கி அதிவேகமாகச் சென்ற தனியார் பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 
விபத்தின் பின்னர் பேருந்தின்  சாரதியும் நடத்துனரும் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்று கஹதுடுவ பொலிஸில் 
சரணடைந்துள்ளனர்.  
இந்த விபத்தில் வேனின் சாரதி மற்றும் பயணி ஒருவரும், பாடசாலை மாணவி ஒருவரும், பேருந்தில் பயணித்த மூன்று பெண்களும் 
காயமடைந்துள்ளனர்.  
. விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கஹதுடுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.என்பதும் குறிப்பிடத்தக்கது 





 

செவ்வாய், 14 நவம்பர், 2023

லண்டனில் தீபாவளி கொண்டாட்டத்தின் போது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த வர்கள் உயிரிழப்பு

மேற்கு லண்டனில் உள்ள ஹவுன்ஸ்லோவில் உள்ள ஆப்கானிஸ்தானை சேர்ந்த குடும்பம் வசித்து வந்தது. கடந்த.12-11-2023. ஞாயிற்றுக்கிழமை  தீபாவளி அன்று இரவு 10.30 மணியளவில் இவர்கள் வசிக்கும் அடுக்கு மாடி குடியிருப்பில் தீடிரென தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென இரண்டு 
மாடிகளுக்கும் பரவியது.
இதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்ததாக காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர். அந்த வீட்டில் சீமா ராத்ரா என்ற பெண் தனது மூன்று குழந்தைகளுடன் இறந்துள்ளார். 
விபத்தில் சிக்கி படுகாயங்களுடன் உயிர் தப்பிய குழந்தைகளின் தந்தை ஆரோன் கிஷன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், அதே குடும்பத்தைச் சேர்ந்த மற்றொரு நபரும் தீ விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். 
தீ விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வாகனங்கள் விரைந்து தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். தீபாவளி கொண்டாட்டத்தின்போது அப்பகுதியில் அதிகளவில்
 பட்டாசு சத்தம் இருந்ததாகவும், அதனால் தீ விபத்திற்கு பட்டாசு வெடித்தது காரணமாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
 இதுகுறித்து, தலைமை கண்காணிப்பாளர் சீன் வில்சன் கூறுகையில், " இது ஒரு பயங்கரமான சம்பவம். இந்த சம்பவத்தின் பின்னணியில் உள்ள காரணத்தைக் கண்டறிய லண்டன் தீயணைப்புப் படை அயராது உழைக்கும்" என்று கூறினார்
.என்பதும் குறிப்பிடத்தக்கது    





 

திங்கள், 13 நவம்பர், 2023

புதிய கொரோனா தொற்று அமெரிக்காவில் வேகமாக பரவி வருகிறது

புதிய HV.1, மிகவும் தொற்றுநோயான கோவிட்-19 மாறுபாடு அமெரிக்கா முழுவதும் பரவி வருகிறது. இதுவே உலகளவில் ஆதிக்கம் செலுத்துவதாக விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அக்டோபர் மாத இறுதியில் இருந்து அனைத்து COVID-19 வழக்குகளில் கால் பகுதிக்கும் அதிகமானவர்களுக்கு HV.1 தொற்று பரவியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான அமெரிக்க மையங்களின் தரவுகளின்படி, அக்டோபர் 28 அன்று முடிவடைந்த இரண்டு வார காலப்பகுதியில் புதிதாக கண்டறியப்பட்ட அனைத்து 
வழக்குகளிலும் 25.2% மாறுபாடு காரணமாக பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய நிலைமைகளைக் கருத்தில் கொண்டு சாத்தியமான குளிர்கால எழுச்சியை சமாளிக்கும் வகையில் நடவடிக்கைகளை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
என்பதும் குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

ஞாயிறு, 12 நவம்பர், 2023

மத்திய இத்தாலியில் புகலிட மையத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில்பலர் பாதிப்பு

மத்திய இத்தாலியில் புகலிடக் கோரிக்கையாளர்கள் குடியிருப்பு கட்டிடத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 31 பேர் காயமடைந்துள்ளதாக தீயணைப்புப் படை தெரிவித்துள்ளது. 
அநேகமாக வாயு கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது. 
ஆபத்தான நிலையில் இருந்த ஒருவர் ஹெலிகாப்டர் மூலம் ரோம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தற்போது கோமா நிலையில் இருப்பதாக அன்சா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
  என்பதாகும்

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



சனி, 11 நவம்பர், 2023

யாழ் நல்லூர் கந்தன் ஆலய வீதிகளை விரத உற்சவத்தை முன்னிட்டு மூட நடவடிக்கை

நடை பெறவுள்ள  கந்த சஷ்டி விரத உற்சவத்தை முன்னிட்டு நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தை சூழவுள்ள வீதிகளில் எதிர்வரும்.14-11-2023. செவ்வாய்க்கிழமை முதல் போக்குவரத்து தடை விதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாநகர சபை ஆணையாளர் த.ஜெயசீலன் அறிவித்துள்ளார்.
அதன்படி, ஆலயத்தை சூழவுள்ள வீதிகளில் 
எதிர்வரும் .14-11-2023.செவ்வாய்க்கிழமை  முதல்.17-11-2023. வெள்ளிக்கிழமை வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரையிலான
 ஒரு மணிநேரமும், 18-11-2023.சனிக்கிழமை  சூர சம்ஹார நிகழ்வன்று
 பகல் 12 மணி முதல் இரவு 7 மணி வரையிலும், மறுநாள்.19-11-2012.
 ஞாயிற்றுக்கிழமை  மாலை 5 மணி முதல் 6 மணி வரையிலும் வீதி தடை போடப்பட்டு, அவ்வீதியின் ஊடான போக்குவரத்து
 தடை செய்யப்பட்டிருக்கும்.
எனவே, அந்த வீதியால் வாகனங்களில் பயணிப்போர், போக்குவரத்து தடை விதிக்கப்படும் நேரங்களில் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு ஆணையாளர் அறிவித்துள்ளார்.என்பதும் குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



வெள்ளி, 10 நவம்பர், 2023

பிரான்ஸ் பரிஸில் சுப்பர் மார்க்கட்டொன்று தீக்கிரையாகியுள்ளது

பரிசில்  09-11-2023.அன்று  வியாழக்கிழமை காலை ஏற்பட்ட தீவிபத்தில் Auchan பல்பொருள் அங்காடி தீக்கிரையாகியுள்ளது. 15 ஆம் வட்டாரத்தின் rue Lecourbe வீதியில் உள்ள கட்டிடம் ஒன்றே  09-11-2023.அன்று  காலை 5.30 மணி அளவில் 
தீப்பிடித்து எரிந்துள்ளது.
 உடனடியாக தீயணைப்பு படையினர் அழைக்கப்பட்டு தீ கட்டுப்படுத்தப்பட்டது. இச்சம்பவத்தில் நாலவர் மூச்சுத்திணறலுக்கு உள்ளானார்கள். நான்கு தீயணைப்பு வாகனங்களில் தண்ணீர் பயன்படுத்தப்பட்டு
 தீ அணைக்கப்பட்டது.
அப்பகுதியில் பிரபலமாக உள்ள Auchan பல்பொருள் அங்காடி முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளது. என்பதும் குறிப்பிடத்தக்கது  

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>



வியாழன், 9 நவம்பர், 2023

ஒன்பது வருடங்களின் பின்னர் கிளிநொச்சி நீதிமன்றில் சந்தேக நபருக்கு மரண தண்டனை

பெண்​ணொருவரை கொலை செய்தார் என குற்றஞ்சாட்டப்பட்டிருந்த சந்தேகநபரை குற்றவாளியாக இனங்கண்ட கிளிநொச்சி மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. 
மாத்தளை பகுதியைச் சேர்ந்த இராஜசுலோஜனா என்ற பெண்ணை, 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் 12ம் திகதி கத்தியால் குத்திப் படுகொலை 
செய்து கிணற்றுக்குள் தள்ளிவிட்டதாக பொலிஸ் தரப்பில்
 தெரிவிக்கப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த கிளிநொச்சி பொலிஸார் மற்றும் குற்றத்தடுப்பு பிரிவினர் சடலம் மீட்கப்பட்ட பகுதிக்கு அயலில் உள்ள சிவில் பாதுகாப்புத் திணைக்கள அலுவலகத்தில் பணியாற்றிய படுகொலைச் செய்யப்பட்ட பெண்ணின் காதலனை
 கைது செய்தனர். 
அத்துடன் படுகொலைக்கு பயன்படுத்திய கத்தி, அந்த பெண், இறுதியாக வைத்திருந்த தொலைபேசி மற்றும் உடைகள் என்பவற்றை நீதிமன்றில் சமர்ப்பித்தனர். என்பதும் குறிப்பிடத்தக்கது..


புதன், 8 நவம்பர், 2023

ஆஸ்திரேலியாவி ஹோட்டலின் உணவருந்தும் பகுதியில் புகுந்த கார் ஐந்து பேர் மரணம்

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ளது டேல்ஸ்ஃபோர்டு. நகரப் பகுதியில் இருந்து வெகுதூரத்தில் உள்ள இந்த கிராமப் பகுதியான டேல்ஸ்ஃபோர்டில் பிரபல 
ஹோட்டல் ஒன்று உள்ளது.
இந்த ஹோட்டலில் சலையோரமாக திறந்த வெளியில் அமர்ந்து உணவருந்தும் இடம் உள்ளது. நேற்று மாலை இந்தப் பகுதியில ஏராளமானோர் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். 
ஞாயிற்றுக்கிழமை என்பதால் கூட்டம் அதிகமாக இருந்தது. அப்போது திடீரென வேகமாக வந்த பி.எம்.டபிள்யூ சொகுசு கார், இந்த பகுதிக்குள் புகுந்தது. இதில் ஒரு பையன், இரண்டு ஆண்கள், ஒரு பெண் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 
காயம் அடைந்த ஏழு பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அதில் ஒரு இளம்பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து 
விசாரணை நடத்தினர். 
அப்போது, காரை ஓட்டிவந்தது 68 வயது நபர் எனத் தெரியவந்துள்ளது. அவர் மது அருந்தி கார் ஓட்டவில்லை என போலீசார் 
தெரிவித்தனர். 
போதைப்பொருள் எடுத்துக் கொண்டாரா என்பதை தெரிந்துகொள்ள அவரது ரத்த மாதிரி எடுக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பபட்டுள்ளதாகன போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காரை வேகமாக ஓட்டி வந்ததுதான் விபத்து காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.என்பதும் குறிப்பிடத்தக்கது     




 

செவ்வாய், 7 நவம்பர், 2023

சீரற்ற காலநிலை காரணமாக கொழும்பு - பதுளை ஊடான போக்குவரத்து தடை

இலங்கையில் தொடர்ச்சியாக நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக பதுளை - கொழும்பு பிரதான வீதியில் பாறைகள் சரிந்து 
விழுந்துள்ளது. 
இதன்காரணமாக குறித்த பகுதியூடான போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் 
தெரிவித்துள்ளனர். 
பதுளை அல்தும்முல்லை பிரதேசத்தில் மண்பாறைகள் சரிந்து விழுந்துள்ளமை  என குறிப்பிடுள்ளனர் 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>


திங்கள், 6 நவம்பர், 2023

ஆணொருவரின் சடலம் யாழ்.தனியார் விடுதி ஒன்றிலிருந்து மீட்பு

யாழிலுள்ள தனியார் விடுதியொன்றில் இருந்து ஆணொருவரின் 
சடலம் 06-11-2023.இன்றைய தினம் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்னிலங்கையைச் சேர்ந்த லால் பெரேரா வயது 61 என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 
அவர் கடந்த 3 நாட்களாக குறித்த விடுதியில் தங்கியிருந்துள்ளார் எனவும் தெரிய வந்துள்ளது
இந்நிலையில் அவரது சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்,போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்பதும் குறிப்பிடத்தக்கது   



ஞாயிறு, 5 நவம்பர், 2023

இலங்கை பேக்கரி சங்கம் தெரிவித்துள்ளது. பாண் விலை அதிகரிக்கப்படாதாம்

இலங்கையில் எரிவாயு விலை அதிகரிப்பு மற்றும் சீனி அதிகரிப்பு காரணமாக பேக்கரி தொழிலை முன்னெடுக்க முடியாதுள்ளதாக அகில இலங்கை பேக்கரி சங்கம் தெரிவித்துள்ளது.
பேக்கரி பொருட்களின் விற்பனை ஏற்கனவே 25விழுக்காடு குறைந்துள்ளதாக அதன் தலைவர் தெரிவித்துள்ளார்.எரிவாயுவின் விலை அதிகரித்தாலும் பேக்கரி பொருட்களின் விலை அதிகரிக்கப்படாது என மேலும் தெரிவித்தார்.
என்பதும் குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



சனி, 4 நவம்பர், 2023

திருமதி கயூரன் ஜனனி அவர்களின் அந்தியேட்டி வீட்டுக்கிருத்தியம் 31ம் நாள் .05.11.23

மறைவு-06-10-2023
யாழ் பூநகரியை பிறப்பிடமாகவும்  நவற்கிரியை வதிவிடமாகவும் கொண்ட. திருமதி கயூரன் ஜனனி
அவர்களின்  அந்தியேட்டி வீட்டுக்கிருத்தியம் 31ம் நாள் வீட்டுக்கிருத்தியம் 05-11-2023 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11 மணியளவில் நவற்கிரியில் அவரது இல்லத்தில் நடைபெறும் 
அன்னார் கயூரன் அவர்களின் பாசமிகு மனைவியும் 
மார்க்கண்டு அன்னலக்சுமி தம்பதிகளின் அன்பு மகளும்  திரு திருமதி நிர்மலநாதன் (சிவம் )சுதமதி(சுதம் ) ஆகியோரின் அன்பு மருமகளும் கேசிகன்  அவர்களின் அன்புத்  தாயாரும் ஆவர் 
  அன்னாரின் 31ம் நாள் அந்தியேட்டி கிரியை.03-11-2023.வெள்ளிக்கிழமை அன்று  கிரீமலை  தித்தக்கரையிலும் 
 ஆத்மா சாந்திப்பிரத்தனை நிகழ்வுகள் 05-11--2023, ஞாயிற்றுக்கிழமை அன்று  பிற்பகல்,11,மணி அளவில்  அன்னாரின் நவற்கிரியிலுள்ள இல்லத்தில் ஆத்மா சாந்திப்பிரத்தனையும்  அதனைத்  தொடர்ந்து நடைபெறும் 
மதியபோசன நிகழ்விலும்  கலந்து கொள்ளுமாறு  அன்புடன் அழைக்கின்றோம்
எமக்கு ஆறுதல் கூறி உறுதுணையாக
 இருந்தவர்களுக்கும், எல்லா வழிகளிலும் உதவிகள் புரிந்தோர்களுக்கும் அன்புத் தெய்வத்தின் மரணச்செய்தி கேட்டு நேரில் ஓடிவந்தவர்களுக்கும் அயல் ஊரில் இருந்து வந்தவர்களுக்கும்,
 தொலைபேசி மூலம் அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும்,
 கண்ணீர் அஞ்சலி செலுத்தியோருக்கும் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு 
கேட்டுக்கொள்கின்றோம்.
எம்மையெல்லாம் நீங்காத நினைவில் தவிக்கவிட்டு
எம்மை விட்டு பிரிந்து 31 நாள் ஆகிவிட்டதே
இறைவனின் பாதவடிவில் நிரந்தர இளைப்பாற்றிக்காகச்
சென்ற எங்கள் அன்புத் தெய்வமே எங்கள் அப்பாவே - 31 நாள் அல்ல ஓர் ஆயிரம் ஆண்டுகள் சென்றாலும்
நாம் உம்மை மறவோம்
தாங்காத துயரோடு தவிக்கின்றோமே
உம் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம். உம்மை மறக்க முடியாமல் உங்கள் பிரிவால் வாடும்
பாசமிகு கணவர் அன்பு மகன் சகோதரர்கள். மருமக்கள், பேரப்பிள்ளைகள், 
 அன்னாரின் இழப்புச் செய்தியைக் கேட்டு உடன் வந்து எமக்கு ஆறுதல் வார்த்தைகள் கூறியவர்களிற்கும், எம்முடன் சேர்ந்து துன்பதுயரங்களை பகிர்ந்து கொண்டவர்களிற்கும், இறுதிக்கிரியைகளில் கலந்து கொண்டவர்களிற்கும், வெளிநாட்டில் இருந்து 
எமது துக்கத்தில் பங்கெடுத்த அனைத்து உள்ளங்களுக்கும்,  கண்ணீர் அஞ்சலிகள் வெளியிட்டவர்களிற்கும், 
தொலைத்தொடர்பு சாதனங்கள் மூலமாகவும் அனுதாபங்களை தெரிவித்தவர்களிற்கும் மற்றும் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
>>>>> 
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் 
.அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய
 இறைவனை பிரார்த்திக்கின்றோம்
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!!! 
  வீட்டுமுகவரி  
நவற்கிரி புத்தூர் 
 இங்கனம் -குடும்பத்தினர் 




 


 

வெள்ளி, 3 நவம்பர், 2023

மாத்தளை பிரதேசத்தில் தந்தையால் பதின்நான்கு வயது மகளுக்கு கத்திக்குத்து

மாத்தளை பிரதேசத்தில் தனது 14 வயது மகளை கத்தியால் குத்தி காயப்படுத்திய தந்தை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கத்திக்குத்துக்குள்ளானவர் மாத்தளை - பலாபத்வல பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி ஆவார்.
தந்தையால் சிறுமியின் கைகள், காது மற்றும் நெற்றி பகுதி என்பன கத்தியால் குத்தப்பட்ட நிலையில் சிறுமி மாத்தளை போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்..
என்பதும் குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>



வியாழன், 2 நவம்பர், 2023

அந்தியேட்டி கிரியை 31ம் நாள் அமரர் செல்வராஜா அகிலேஸ்வரன் ( அருள் ) 03.11.2023

தோற்றம்-24-09-1982 . மறைவு-04-10.2023
.யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் ஆவரங்காலையும்  நவற்கிரியை வதிவிடமாகவும் கொண்ட.அமரர் செல்வராஜா அகிலேஸ்வரன் (அருள் )   
  அவர்களின் அந்தியேட்டி கிரியை 31ம் நாள் 03-11-2023.-வெள்ளிக்கிழமை அன்று அன்னார். காலஞ்சென்ற நாகநாதி சின்னத்தங்கம் தம்பதிகளின் 
அன்புப் பேரனும் திரு செல்வராஜா காலஞ்சென்ற இந்திராணி (பச்சை) அவர்கனின் பாசமிகு மகனும் ஆவர் எமக்கு ஆறுதல் கூறி 
உறுதுணையாக
 இருந்தவர்களுக்கும், எல்லா வழிகளிலும் உதவிகள் புரிந்தோர்களுக்கும் அன்புத் தெய்வத்தின் மரணச்செய்தி கேட்டு நேரில் ஓடிவந்தவர்களுக்கும் அயல் ஊரில் இருந்து வந்தவர்களுக்கும்,
 தொலைபேசி மூலம் அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும்,
 கண்ணீர் அஞ்சலி செலுத்தியோருக்கும் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்களுக்கும் நன்றிகள்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு 
கேட்டுக்கொள்கின்றோம் எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் ..ஆத்மா சாந்தி அடைய 
இறைவனைப்பிராத்திக்கின்றோம் 
  ஓம் சாந்தி ! சாந்தி  சாந்தி!!!
வீட்டுமுகவரி  
நவற்கிரி புத்தூர் 
தகவல் குடும்பத்தினர் 


புதன், 1 நவம்பர், 2023

கட்டுப்பாட்டை இழந்து பிரேசிலில் விமான விபத்து குழந்தை உள்பட பன்னிரண்டு பேர் உயிரிழப்பு

பிரேசிலின் அமேசானாஸ் மாநிலத்தில் உள்ள என்விரா என்ற நகரத்துக்கு சிறிய ரக விமானம் புறப்பட்டு சென்றது. இந்த விமானத்தில் ஒரு குழந்தை உள்பட 12 பேர் பயணம் செய்தனர்.
புறப்பட்ட சிறிது நேரத்தில் அந்த விமானம் விபத்தில் சிக்கியது. அங்குள்ள ஏக்கர் மாநிலத்தின் தலைநகரான ரியோபிரான்சிகோ விமான நிலையத்தின் அருகில் அந்த விமானம் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து 
நொறுங்கியது. 
இந்த விபத்தில் விமானத்தில் இருந்த ஒரு குழந்தை உள்பட 12 பேரும் பலியாகி விட்டனர். விபத்துக்கான காரணம் என்னவென்று
 தெரியவில்லை.
இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 பிரேசிலில் கடந்த 2 மாதங்களில் நடந்த 2- வது விமான விபத்து இது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த மாதம் நடந்த விமான விபத்தில் 12 பயணிகள் மற்றும் 2 விமான ஊழியர்கள் பலியானார்கள்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



செவ்வாய், 31 அக்டோபர், 2023

சீனாவில் உலகை அச்சுறுத்தும் எட்டு வகை வைரஸ்கள் கண்டுபிடிப்பு

உலகில் கடந்த 2019-ம் ஆண்டின் இறுதியில் பரவத் தொடங்கிய கொரோனா வைரசின் தாக்கம் இன்னும் ஓய்ந்தபாடில்லை. உலகம் 
முழுவதும் பேரழிவை ஏற்படுத்திய 
கொரோனாவால் 
லட்சக்கணக்கான வீடுகளில் மரண ஓலம் கேட்டது. ஏராளமானோர் உயிரிழந்தனர், கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர்.
 2-வது அலை, 3-வது அலை என அலை அலையாய் வந்து 
அச்சுறுத்திய கொரோனா பின்னர் படிப்படியாக 
கட்டுக்குள் வந்தது. 
எனினும் அந்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் மக்கள் மீளவில்லை. தற்போது இயல்பு நிலைக்கு திரும்பினாலும் கொரோனா குறித்த அச்சம் மக்களிடம் இன்னமும் உள்ளது. இந்த நிலையில் மற்றொரு அதிர்ச்சி தகவலை சீன விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர். 
தெற்கு சீனாவில் அமைந்துள்ள வெப்பமண்டல தீவான ஹைனானில் இதுவரை கண்டிராத 8 வைரஸ்களை சீனாவின் ஆராய்ச்சியாளர்கள் 
கண்டறிந்துள்ளனர். இந்த ஆய்வை சீன மருத்துவ அறிவியல் அகாடமி மற்றும் பீக்கிங் யூனியன் மருத்துவக் கல்லூரியின் 
ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டனர். இந்த வைரஸ் இனங்கள் பெருகினால் மனிதர்களைத் தாக்கும் அபாயம் உள்ளது என்றும் வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 
கொரோனா தொற்றுக்கு காரணமான சார்ஸ்-கோவி-2 உடன் தொடர்புடைய வைரசும் இதில் அடங்கும். 341 வகையான பூச்சிகளில் இருந்து எடுக்கப்பட்ட 682 மாதிரிகளில் இந்த வைரஸ்களை அவர்கள் 
அடையாளம்
 கண்டுள்ளனர். இதுகுறித்து விஞ்ஞானி ஒருவர் கூறும்போது "
ஹைனானில் வசிக்கும் கொறித்துண்ணி பூச்சிகளிடமிருந்து 700-க்கும் மேற்பட்ட மாதிரிகளை நாங்கள் ஆய்வு செய்தோம், மேலும் 8 வைரஸ்களைக் கண்டறிந்தோம். 
வைரஸ்களில் ஒன்று, கொரோனா வைரஸின் அதே குடும்பத்தைச் சேர்ந்தது. இந்த வைரஸ்கள் கொறித்துண்ணி பூச்சிகளில் காணப்பட்டன, இந்த வைரஸ் எப்போதாவது பரவத்தொடங்கினால் மனிதர்களை 
அதிகமாக பாதிக்கும் வாய்ப்புள்ளது" என்று தெரிவித்தார் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட வைரஸ்களில், ஒன்று கோவிஎச்.எம்.யு-1 எனப்படும் புதிய கொரோனா வைரஸ் என அடையாளம் 
காணப்பட்டது. 
இது கொரோனாவுக்கு காரணமான அதே குழுவைச் சேர்ந்தது. கூடுதலாக, பல புதிய நோய்க்கிருமிகள் வெவ்வேறு வைரஸ் வகைகளில் கண்டறியப்பட்டன. விஞ்ஞானிகள் கண்டுபிடித்த வைரஸ்களில் மஞ்சள் காய்ச்சல்
 மற்றும் டெங்கு போன்ற வைரஸ்களுடன் தொடர்புடைய 
இரண்டு புதிய பூச்சி வைரஸ்கள், ஒரு புதிய ஆஸ்ட்ரோவைரஸ், இது வயிற்றுப் பூச்சிகள் போன்ற தொற்றுநோய்களை ஏற்படுத்துவதாக 
அறியப்படு கிறது.
2 புதிய பார்வோ வைரஸ்கள், இது காய்ச்சலைப் போன்ற அறிகுறிகளுக்கு வழிவகுக்கும். 2 புதிய பாப்பிலோமா வைரஸ்கள், அவை பிறப்புறுப்பு மருக்கள் மற்றும் மனிதர்களில் சில புற்றுநோய்கள் போன்ற நிலைமைகளுடன் தொடர்புடைய வைரஸ்கள். 
ராட்சத எலி மற்றும் சிக்கிம் எலி ஆகிய 2 எலி இனங்களில் புதிய பூச்சி வைரஸ்கள் மற்றும் பார்வோ வைரஸ்கள் இருப்பதும் ஆய்வில் 
தெரிய வந்துள்ளது.என்பதும் குறிப்பிடத்தக்கது   

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



திங்கள், 30 அக்டோபர், 2023

வேகக் கட்டுப்பாட்டையிழந்து சாந்தசோலை சந்தியில் பாலத்திற்குள் பாய்ந்த சொகுசு கார்

வவுனியா - ஏ9 வீதியில் பயணித்த சொகுசு கார் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து. .30-10-2023.இன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
வவுனியாவில் இருந்து கனகராயன்குளம் 
நோக்கி ஏ9 வீதியால்
 சென்ற சொகுசு காரானது பிறிதொரு வாகனத்தை முந்திச் செல்ல முற்பட்டபோது வேகக் கட்டுப்பாட்டை இழந்து 
சாந்தசோலை சந்தியில் அமைந்துள்ள பாலத்திற்குள் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த காரில் பிரித்தானியாவில் இருந்து வருகை தந்த நபர் ஒருவரும், சாரதியும் பயணித்த நிலையல், அவர்கள் மயிரிழையில் உயிர் தப்பியதாக கூறப்படுகிறது.
அதேநேரம் பாலத்திற்குள் விழுந்த காரை பாரம் தூக்கியின் துணையுடன் மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.என்பதும் குறிப்பிடத்தக்கது 


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>



ஞாயிறு, 29 அக்டோபர், 2023

பண்ணை பகுதியில் முச்சக்கர வண்டி வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்து நால்வர் காயம்

யாழில் முச்சக்கர வண்டியொன்று.  20-10-2023.இன்று விபத்திற்குள்ளானதில் குழந்தை உட்பட நால்வர் காயமடைந்துள்ளனர். 
வேகமாக சென்றுகொண்டிருந்த முச்சக்கரவண்டி வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி கடலை அண்மித்த பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக பொலிஸார் 
கூறியுள்ளனர். 
ஊர்காவற்றுறையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கரவண்டி யாழ்ப்பாணம், பண்ணை பகுதியில் வைத்தே விபத்துக்குள்ளாகியுள்ளது. 
முச்சக்கரவண்டியில் சாரதி உட்பட 5 பேர் பயணித்த நிலையில்,  அவர்களில் 4 பேர் விபத்தில் காயமடைந்ததாகவும் அவ்வாறு காயமடைந்தவர்களில் 3 பெண்கள் ஒரு குழந்தை அடங்குவதாகவும் 
கூறப்படுகிறது. 
யாழ்ப்பாணம் பொலிஸார் இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். என்பதும் குறிப்பிடத்தக்கது  

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

நாட்டில் புத்தளத்தில் திருமண நிகழ்வில் கலந்துகொண்ட யுவதி உயிரிழந்துள்ளார்.

நாட்டில் புத்தளத்தில் உள்ள விழா மண்டபம் ஒன்றில் நடைபெற்ற திருமண விருந்தில் கலந்து கொண்ட யுவதி ஒருவர் திடீர் சுகவீனமடைந்து 
உயிரிழந்துள்ளார். 
புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 
ஆனமடுவ நகரைச் சேர்ந்த 20 வயதுடைய எச்.எம் அயோத்தி தேஷானி விஜேவர்தன என்பவரே உயிரிழந்துள்ளார். திருமண 
விருந்தில் உணவுக்காக கிடைத்த இறைச்சி வகையை 
சாப்பிட்டதால் ஏற்பட்ட ஒவ்வாமையே மரணத்திற்கு காரணம் எனக் கூறப்படுகிறது. 
யுவதியின் மரணம் தொடர்பில் விசாரணைகளை வழங்கிய புத்தளம் ஆதார வைத்தியசாலையின் உதவி சட்ட வைத்திய அதிகாரி 
குலேந்திர பிரேமதாச, மரணம் தொடர்பான மேலதிக 
பரிசோதனைகளுக்காக
 உடல் உறுப்புகளை அரசாங்க மரண விசாரணை அதிகாரிக்கு அனுப்பி வைக்க  ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
என்பதும் குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



சனி, 28 அக்டோபர், 2023

உடுப்பிட்டி யில் வெளிநாடு செல்ல முகவருக்கு பணம் வழங்கி ஏமார்ந்த இளைஞன் உயிர்மாய்ப்பு

உடுப்பிட்டி யில் வெளிநாடு செல்வதற்காக முகவரிடம் பெரும்தொகை பணத்தினை கொடுத்து ஏமார்ந்து இளைஞன் தவறான முடிவெடுத்து 
உயிர் மாய்த்துள்ளார். 
யாழ்ப்பாணம் - உடுப்பிட்டி பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர் மாய்க்க முயன்ற நிலையில் வீட்டில் 
இருந்தோரால் காப்பாற்றப்பட்டு வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் 
உயிரிழந்துள்ளார். 
அதனை அடுத்து உடற்கூற்று பரிசோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சடலம் ஒப்படைக்கப்பட்டது. 
அதன் போது மேற்கொள்ளப்பட்ட மரண விசாரணையின் போது , வெளிநாடு ஒன்றுக்கு செல்வதற்காக முகவர் ஒருவரிடம் பெரும் தொகை பணத்தினை கொடுத்திருந்தார். 
பணத்தினை வாங்கிய நபர் நீண்ட நாட்களாக பயண ஒழுங்குகளை செய்யாது காலம் தாழ்த்தி வந்தமையால் இளைஞன் மன விரக்தியில் இருந்ததாகவும், அதனாலயே தவறான முடிவெடுத்து உயிர் மாய்த்ததாக உறவினர்கள் தெரிவித்திருந்தனர். என்பதும் குறிப்பிடத்தக்கது


வெள்ளி, 27 அக்டோபர், 2023

ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் மங்கோலியாவில் ஏழு பேர் பலி

மங்கோலியா தலைநகர் உலன் பாடோரின் சோங்கினோகைர்கான் நகரில் உள்ள ஒரு வீட்டில் இருந்து அதிக அளவில் புகை வெளியேறியது. சிறிது நேரத்தில் வீடு தீப்பிடித்து எரிந்தது, தகவல் கிடைத்ததும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர்.
கட்டுங்கடங்காமல் பற்றி எரிந்த தீயை அணைக்க வீரர்கள் போராடினர். நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு தீயை அவர்கள் 
அணைத்தனர். 
இருப்பினும் தீயில் அந்த வீடு முழுவதுமாக எரிந்தது. இந்த பயங்கர விபத்தில் குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
குளிர் காலத்தின் காரணமாக, பெரும்பாலான வீடுகளில் அறையை சூடாக்க தீ மூட்டம் போட்டு வருகிறார்கள். அவ்வாறு தீ மூட்டம்போடும் முயற்சி விபரீதமாக மாறியதாக போலீசார் விசாரணையில் தெரிந்தது.
என்பது குறிப்பிடத்தக்கது


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>



வியாழன், 26 அக்டோபர், 2023

காவலில் உள்ள எட்டு இந்தியர்களுக்கு கத்தாரில் மரண தண்டனை விதிப்பு

கத்தாரில் கைது செய்யப்பட்டு, காவலில் உள்ள  எட்டு இந்தியர்கள் வழக்கில் தீர்ப்பு வெளியாகியுள்ளது. இந்திய கடற்படையில் பணியாற்றி 
ஓய்வுபெற்ற 8 இந்தியர்களுக்கு மரண தண்டனை 
விதிக்கப்பட்டுள்ளது. 
இஸ்ரேலுக்கு உளவு பார்த்த புகாரில் கைதான 8 இந்தியர்களுக்கு மரண தண்டனையை கத்தார் நீதிமன்றம் விதித்துள்ளது. 8 இந்தியர்களும் பணி புரிந்த நிறுவனம் நீர்முழ்கி கப்பல்கள் தொடர்பான திட்டத்தில் 
இணைந்திருந்தது.
உளவு பார்த்ததாக குற்றச்சாட்டப்பட்டுள்ள 8 இந்தியர்களும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் தனிமை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த சமயத்தில், அவர்களுக்கு மரண தண்டனை விதித்தது கத்தார் நீதிமன்றம். 
இதுதொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம்
 வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அல் தஹ்ரா நிறுவனத்தைச் சேர்ந்த 8 இந்திய ஊழியர்கள் சம்பந்தப்பட்ட வழக்கில் கத்தாரின் 
முதன்மை நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளதாக எங்களுக்கு முதல் தகவல் கிடைத்துள்ளது.
8 இந்தியர்களுக்கு மரண தண்டனை விதித்துள்ள கத்தார் நீதிமன்றம் தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது. விரிவான தீர்ப்பு கிடைத்ததும் உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 8 பேரின் குடும்ப உறுப்பினர்கள்,
 வழக்கறிஞர்களுடன் நாங்கள் தொடர்பில் இருக்கிறோம். 
அனைத்து சட்ட விருப்பங்களையும் ஆராய்ந்து வருகிறோம்
. இந்த வழக்குக்கு நாங்கள் அதிக முக்கியத்துவம் 
கொடுத்து வருகிறோம்.
அதை தொடர்ந்து பின்பற்றி வருவதாகவும், தூதரக உதவி மற்றும் சட்ட உதவிகளை நாங்கள் தொடர்ந்து வழங்குவோம் என்றும் 8 பேருக்கு 
விதித்துள்ள மரண தண்டனை தொடர்பாக கத்தார் 
அரசுடன் பேச இருப்பதாகவும் எனவும் 
தெரிவித்துள்ளது.
 மேலும், இந்த வழக்கின் நடவடிக்கைகள் ரகசியமாக இருப்பதால், இந்த நேரத்தில் மேற்கொண்டு எந்த கருத்தையும் கூறுவது சரியாக இருக்காது எனவும் குறிப்பிட்டுள்ளது.என்பதும் குறிப்பிடத்தக்கது


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

புதன், 25 அக்டோபர், 2023

இலங்கையில் இருவேறு பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் பலி

எம்பிலிப்பிட்டிய மொரகெட்டிய பிரதான வீதியில் இலுக்கட்டிய பிரதேசத்தில் இன்று (25.10) காலை சாலையோரம் நடத்துச் சென்ற மூவர் மீது கார் ஒன்று மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளத. 
இதில்  படுகாயமடைந்த நிலையில் ஆண் ஒருவரும் பெண்ணொருவரும் எம்பிலிப்பிட்டிய மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர். 58 மற்றும் 71 வயதுடைய 
இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் 
தெரிவித்தனர்.  
விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய காரின் சாரதியை கண்டுபிடிக்க விசாரணைகள் இடம்பெற்று வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 இதேவேளை, இன்று காலை பமுனுகம, போபிட்டிய
 பிரதேசத்தில், ஜா கால்வாயில் இருந்து பொப்பிட்டிய நோக்கிச் சென்ற லொறி ஒன்று வீதியைக் கடந்த பாதசாரி மீது மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 
27 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். மேற்படி சம்பவங்கள் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>