siruppiddy

18

siruppiddy

unkal

unkal

புதன், 1 நவம்பர், 2023

கட்டுப்பாட்டை இழந்து பிரேசிலில் விமான விபத்து குழந்தை உள்பட பன்னிரண்டு பேர் உயிரிழப்பு

பிரேசிலின் அமேசானாஸ் மாநிலத்தில் உள்ள என்விரா என்ற நகரத்துக்கு சிறிய ரக விமானம் புறப்பட்டு சென்றது. இந்த விமானத்தில் ஒரு குழந்தை உள்பட 12 பேர் பயணம் செய்தனர்.
புறப்பட்ட சிறிது நேரத்தில் அந்த விமானம் விபத்தில் சிக்கியது. அங்குள்ள ஏக்கர் மாநிலத்தின் தலைநகரான ரியோபிரான்சிகோ விமான நிலையத்தின் அருகில் அந்த விமானம் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து 
நொறுங்கியது. 
இந்த விபத்தில் விமானத்தில் இருந்த ஒரு குழந்தை உள்பட 12 பேரும் பலியாகி விட்டனர். விபத்துக்கான காரணம் என்னவென்று
 தெரியவில்லை.
இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 பிரேசிலில் கடந்த 2 மாதங்களில் நடந்த 2- வது விமான விபத்து இது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த மாதம் நடந்த விமான விபத்தில் 12 பயணிகள் மற்றும் 2 விமான ஊழியர்கள் பலியானார்கள்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக