நடை பெறவுள்ள  கந்த சஷ்டி விரத உற்சவத்தை முன்னிட்டு நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தை சூழவுள்ள வீதிகளில் எதிர்வரும்.14-11-2023. செவ்வாய்க்கிழமை முதல் போக்குவரத்து தடை விதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாநகர சபை ஆணையாளர் த.ஜெயசீலன் அறிவித்துள்ளார்.
அதன்படி, ஆலயத்தை சூழவுள்ள வீதிகளில் 
எதிர்வரும் .14-11-2023.செவ்வாய்க்கிழமை  முதல்.17-11-2023. வெள்ளிக்கிழமை வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரையிலான
 ஒரு மணிநேரமும், 18-11-2023.சனிக்கிழமை  சூர சம்ஹார நிகழ்வன்று
 பகல் 12 மணி முதல் இரவு 7 மணி வரையிலும், மறுநாள்.19-11-2012.
 ஞாயிற்றுக்கிழமை  மாலை 5 மணி முதல் 6 மணி வரையிலும் வீதி தடை போடப்பட்டு, அவ்வீதியின் ஊடான போக்குவரத்து
 தடை செய்யப்பட்டிருக்கும்.
எனவே, அந்த வீதியால் வாகனங்களில் பயணிப்போர், போக்குவரத்து தடை விதிக்கப்படும் நேரங்களில் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு ஆணையாளர் அறிவித்துள்ளார்.என்பதும் குறிப்பிடத்தக்கது








 
 
 
 
 
 
 
 
 
 
0 கருத்துகள்:
கருத்துரையிடுக