வேகக்கட்டுப்பாடு இன்றி இடம்பெரும் விபத்துகள் யாழ் மாவட்டத்தில் கடந்த வருடம் அதிகளவாக இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன் அடிப்படையில், கடந்த ஆண்டில் மாத்திரம் யாழ்.குடாநாட்டில் 337 விபத்துக்கள் யாழ் மாவட்ட பொலிஸ்
பிரிவினரால் உறுதிப்படுத்தப்பட்டு அறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ளதாக, யாழ் மாவட்ட மோட்டார் திணைக்களத்தின் விபத்து இணைப்பிரிவு தெரிவித்துள்ளது.
இவ்வாறு இடம்பெற்றும் விபத்துக்களினால் 22.2 சதவீதமானவர்கள் உயிரிழப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இவ்வாறு, இடம்பெறும் விபத்துக்களில் பெரும்பாலானவை மோட்டார் சைக்கிள் விபத்தாக காணப்படுவதாக
கூறப்படுகின்றது.
அதுமட்டுமல்லாமல் இந்த ஆண்டின் ஆரம்பத்திலேயே 8 பாரிய விபத்துக்கள் பதிவாகியுள்ளதாக அந்த திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக