மனிதர்களின் வேலைகளை திருடும் எந்திர மனிதன் எனப்படும் ரோபோக்கள் வரி செலுத்த வேண்டும் என மைக்ரோசொப்ட் கணிணி நிறுவன அதிபரும், உலகின் முதலாவது பணக்காரருமான பில்கேட்ஸ்வலியுறுத்தியுள்ளார்.
ரோபோக்கள் தற்போது அனைத்து துறைகளிலும் பயன்படுத்தப்படுகின்றதனால் மனிதர்கள் செய்யும் வேலைகள் ரோபோக்களால் திருடப்படுகின்றன எனவும் எனவே, பணியில் அமர்த்தப்படும் ரோபோக்களுக்கு வரிகள் வசூலிக்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மனிதர்களுக்கு அதிக சம்பளம் கொடுக்க வேண்டிய நிலையினை தவிர்ப்பதற்காகவே நிறுவன உரிமையாளர்கள் ரோபோக்களை பயன்படுத்துகின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தொழிற்சாலைகளில் மனிதர்கள் வேலை செய்யும் போது வருமான வரி, சமூக பாதுகாப்பு வரி உள்ளிட்ட பலவகையான வரிகள் விதிக்கப்படுகின்றன எனச் சுட்டிக்காட்டியுள்ள அவர் அதே போன்று தொழிற்சாலைகளில் பணியில் ஈடுபடுத்தப்படும் ரோபோக்களுக்கும் வரிகள் விதிக்கப்பட்டு அவை வசூலிக்கப்பட வேண்டும் எனத்
தெரிவித்துள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக