இத்தாலி நாட்டில் வெரோன நகரில் இடம்பெற்ற ரயில் விபத்தொன்றில் இலங்கைப் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக
தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 05.02.2017. ஆம் திகதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
வென்னப்புவ – சால்ஸ் வில்லியம் மாவத்தையைச் சேர்ந்த 31 வயதான ஜீவன் சஞசய் தமலே என்ற இளைஞர் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக இத்தாலி பொலிஸார் தெரிவித்துள்னர்.
பலத்த காயங்களுக்கு இலக்காகிய இளைஞர் விபத்து நடந்த இடத்திலேயே பலியாகி உள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.
குடும்ப சூழ்நிலை காரணமாக பல வருடங்களாக இத்தாலி சென்று தொழிலில் ஈடுபட்டிருந்த நிலையில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
குறித்த விபத்து தொடர்பாக வெரோனா நகர போலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த இளைஞனின் உடல் தற்போது வெரோனா மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளார்
இளைஞனின் சடலத்தை இலங்கைக்கு கொண்டுவருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக
குறிப்பிடப்படுகின்றது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக