கொழும்பு- பதுளை பிரதான ரயில் பாதையில் ஸ்ரெதன் பகுதியிலும் மல்லிகைப்பூ பகுதியிலும் 08.02.2017 அன்று பகல் 12.00 மணியளவில் தீயினால் பல ஏக்கர் எரிந்து நாசமடைந்துள்ளதாக பொலிஸார்
தெரிவித்தனர்.
தற்போது இப்பிரதேசங்களில் நிலவி வரும் கடும் வெயில் மற்றும் கடும் காற்று வீசுவதனால் தீயினைக் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வருவதற்கு முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக
தெரிவிக்கப்படுகிறது.
மகாவலி ஆற்றுக்கு நீர் வழங்கும் நீர்போசணை பிரதேசமான பகுதியில் இத்தீ ஏற்பட்டுள்ளதால் எதிர்காலத்தில் கடும் நீர்ப்பற்றாக்குறை ஏற்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
வேகமாக பரவி வரும் தீ காரணமாக அரியவகை மூலிகைகள் விலங்கினங்கள் நீரூற்றுக்கள் போன்றன அழிந்து போயிருக்கலாம் என அச்சம் தெரிவிக்கப்படுகிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக