siruppiddy

18

siruppiddy

unkal

unkal

திங்கள், 14 ஆகஸ்ட், 2017

விரைவில் புதிய மின்சார ரயில் இலங்கையில் சேவை!

இலங்கையில் மின்சார புகையிரதசேவையினை அறிமுகப்படுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக
 தெரிவிக்கப்படுகின்றது.
பாணந்துறை, பொல்காவலை, கோட்டை, நீர்கொழும்பு, களனி வெளி பகுதிகளில் 158 கிலோ மீற்றர்களை கொண்ட புகையிரத பாதைகளில் இந்த மின்சார புகையிரத சேவைகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
தற்போது இதற்கான கேள்விப்பத்திரங்களை
 சமர்ப்பிக்க ஆறு நாடுகள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த திட்டத்திற்காக 60 கோடி அமெரிக்க டொலர்கள் செலவாகும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>



0 கருத்துகள்:

கருத்துரையிடுக