வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஓட்டமாவடியில் இரண்டு தொலைபேசி வர்த்தக நிலையைங்களை உடைத்து திருடியதாக சந்தேகிக்கப்படும் ஒருவர் வாழைச்சேனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய குற்றப் புலனாய்வு பிரிவு பதில் பொறுப்பதிகாரி ரி.
மேமன் தெரிவித்தார்.
ஓட்டமாவடி பிரதேசத்தை சேர்ந்த குறித்த நபர், வாழைச்சேனை ஓட்டமாவடி பிரதேசத்திலுள்ள இரண்டு தொலைபேசி வர்த்தக நிலையங்களை உடைத்து திருடியுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.
குறித்த நபரிடமிஇருந்து நான்கு தொலைபேசிகள் மற்றும் கையடக்க தொலைபேசியின் உதிரிபாகங்கள் சிலவும்
கைப்பற்றப்பட்டுள்ளன.
வாழைச்சேனை பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து குற்றப் புலனாய்வு பிரிவு பதில் பொறுப்பதிகாரி ரி.மேமன் தலைமையிலான குழுவினர் சந்தேக நபரை கைது செய்துள்ளதுடன் சந்தேக நபரிடம் இருந்து பொருட்களையும் கைப்பற்றியுள்ளனர்.
சந்தேக நபரை வாழைச்சேனை நீதவான் நீதிமன்றில் நேற்று ஆஜர்ப்படுத்திய போது பதில் நீதவான் ஹபீப் றிபான் சந்தேக நபரை பதிநான்கு நாட்களுக்கு விளக்க மறியலில் வைக்குமாறு
உத்தரவிட்டார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக