siruppiddy

18

siruppiddy

unkal

unkal

ஞாயிறு, 27 ஆகஸ்ட், 2017

தந்தை, மகன் மினுவாங்கொடவில் அடித்துக் கொலை!

மினுவாங்கொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கமன்கெதர பிரதேசத்தில் இரு சடலங்களை பொலிசார் மீட்டுள்ளனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை மகன் ஆகியோரின் சடலங்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.
இன்று (26.08.2017) காலை மினுவாங்கொட, கமன்கெதர பிரதேசத்தில் உள்ள இரு வீடுகளைச் சேர்ந்தவர்களுக்கிடையில் காணப்பட்ட தனிப்பட்ட பிரச்சினை காரணமாக இடம்பெற்ற கைகலப்பின்போது இக்கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை மற்றும் அவரது இரு மகன்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சடலங்கள் பிரேதப் பரிசோதனைக்காக தற்பொழுது மினுவாங்கொட வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மினுவாங்கொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக