கொழும்பு - கண்டி பிரதான வீதியின் கம்பஹா - கலகெடிஹேன பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீ பரவல் காரணமாக குறித்த எரிபொருள் நிரப்பு நிலையம் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.
எரிபொருள் ஏற்றி வந்த பவுசர் ஒன்றில் ஏற்பட்ட தீ, எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கும் பரவியுள்ளது.
இதன்காரணமாக, கண்டி - கொழும்பு வீதியில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.
சம்பவத்தை அடுத்து, கம்பஹா மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினால் தீ பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
சம்பவத்தில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என தெரிவித்த கம்பஹா பொலிசார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக