siruppiddy

18

siruppiddy

unkal

unkal

ஞாயிறு, 6 ஆகஸ்ட், 2017

காடுகளில் தீ வைப்பதற்கு காரணமாக யாராக இருந்தாலும் சுட்டுத்தள்ளுங்கள்! இராணுவத்தினருக்கு உத்தரவு

உலகில் காடுகளை பாதுகாப்பதில் அரசாங்கங்களும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் அதிக சிரத்தை எடுத்துவருகின்றன.
ஒவ்வொரு தனி மனிதனும் மரங்களைப் பாதுகாப்பதில் உரித்துடையவர்களாகின்றார்கள். மரம் வளர்ப்போம், இயற்கையை பேணுவோம் என்பது இன்றைய காலகட்டத்திற்கு தேவையான ஒன்றாக அமைந்திருக்கிறது.
மரங்களை அழிப்பதனால் இயற்கையாக கிடைக்கும் மழை பொய்த்துப் போய்விடுகின்றது. இதனால் விவசாயத்திற்குத் தேவையான நீர் மட்டுமன்றி, குடிநீர்க்காகவும் அலைய வேண்டியிருக்கிறது.
மரங்கள் பூமித்தாயின் சொத்து. அதனை அழிப்பதற்கு யாருக்கும் உரிமையில்லை. பல்வேறு நாடுகளில் மரங்களை வெட்டுவதற்கு அனுமதியில்லை.
தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் மரங்களை வெட்டுவதற்கான சந்தர்ப்பம் ஏற்படுமாயின், அதற்கு முறையான அனுமதி பெறப்படுவதுடன், வெட்டப்பட்ட மரங்களுக்கு நிகராக மற்றொரு கன்று நாட்டப்பட வேண்டும் என்பது சட்டமாக்கப்பட்டும் இருக்கின்றன
 பல நாடுகளில்.
இயற்கையைப் பாதுகாப்பது என்பது எதிர்கால சந்ததியினருக்கான வாழ்க்கைக்குமானது. ஆனால் சில தனி நபர்களின் அசமந்தப் போக்கினாலும், அசட்டையீனங்களினாலும் மரங்கள் 
அழிக்கப்படுகின்றன.
வெளிநாடுகளில் தனிநபர் சண்டையினை மையப்படுத்தி காடுகளுக்கு தீ வைப்பது சகஜமான ஒன்றாக இருக்கிறது. இது தொடர்பாக பல காடுகள் தீக்கு இரையாகியிருக்கின்றன.
மனிதர்களால் மாத்திரமன்றி இயற்கையின் வறட்சியினால் காட்டுத் தீ ஏற்படுவதும் உண்டு.
அதேபோன்று இந்தோனேசியாவில் உள்ள காடுகளில் அடிக்கடி தீப்பிடித்து பெருமளவில் சேதம் ஏற்படுகிறது. குறிப்பாக வறட்சியான காலங்களில் ஏற்படும் காட்டுத் தீயானது, அருகில் உள்ள சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகள் வரை பரவும்.
இந்த ஆண்டின் கோடைக்காலம் தொடங்கும் முன்பே, காடுகளில் தீப்பிடிக்கும் சம்பவம் மிக அதிகமாக உள்ளதாக அந்நாட்டு அனர்த்த முகாமைத்துவ அமைச்சு தெரிவித்திருக்கிறது.
ஜூலை 27-ம் திகதி நிலவரப்படி 173 இடங்கள் தீப்பிடிக்கும் அபாயம் உள்ள பகுதியாக அவதானிக்கப்பட்டுள்ளது. பின்னர் படிப்படியாக இந்த எண்ணிக்கை உயர்ந்து ஜூலை 30-ம்திகதி 239 இடங்கள் மிகவும் வெப்பம் அதிகம் உள்ள பகுதியாக கண்டறியப்பட்டது.
பல்வேறு பகுதிகளில் பற்றி எரியும் காட்டுத்தீயை கட்டுப்படுத்த இராணுவம் உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறை ஊழியர்களுடன் தேசிய பேரிடர் தடுப்பு முகமையும் போராடி வருகின்றது.
எனினும், தீயை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியவில்லை. 5 மாகாணங்களில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, காடுகளில் சிலர் வேண்டுமென்றே தீ வைப்பதாகவும் அதிகாரிகளுக்கு தகவல் வந்துள்ளது. எனவே, அதுபோன்ற செயலில் யாராவது ஈடுபட்டால் அவர்களை சுட்டுத் தள்ளும்படி ஜாம்பி மாகாண இராணுவ அதிகாரி இன்று உத்தரவிட்டுள்ளார்.
இதேபோல் தெற்கு சுமத்ரா மாகாணத்திலும் இதேபோன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் 
வெளியாகி உள்ளது.
செப்டம்பர் மாதத்தில் காட்டுத் தீயின் உக்கிரம் மேலும் அதிகமாக இருக்கும் என தேசிய பேரிடர் தடுப்பு முகமை எச்சரிக்கை விடுத்துள்ளது. நாட்டில் உள்ள அத்தனை வளங்களையும் பாதுகாக்க வேண்டியது 
மனிதனது கடமையாகும்.
ஆனால் மனிதர்கள் தங்களின் அசிங்கத்தை காடுகளில் காட்டுவது முறையற்றது என்று சூழலியலாளர்கள் கருத்து வெளியிடுகின்றார்கள்.
இந்நிலையில் இராணுவ அதிகாரியின் இந்த உத்தரவிற்கு அமைய கண்காணிப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>0 கருத்துகள்:

கருத்துரையிடுக