யாழ்ப்பாணத்தில் பிறந்து இரண்டே மணித்தியாலங்களான சிசு வொன்று உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
மல்லாகம் பகுதியை சேர்ந்த ஜெயக்குமார் கல்பனா என்பவ ருக்கு நேற்று முன்தினம் மாலை 6 மணியள வில் தெல்லிப்பழை வைத்தியசாலையில் ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.
எனினும் குறித்த குழந்தையானது சுவாசிக்க முடியாது சிரமப்பட்டதையடுத்து உடனடியாக இரவு 8 மணியள வில் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பட்டிருந்தது
ஆனால் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படும் போதே குறித்த குழந்தை உயிரிழந்துவிட்டதாக யாழ். போதனா வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்துள்ளன.
இதனை தொடர் ந்து குறித்த மரணம் தொடர்பாக திடீர் மரண விசாரணை அதிகாரி விசாரணைகளை மேற் கொண்டதையடு த்து சிசுவின் சடல மானது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. .
0 கருத்துகள்:
கருத்துரையிடுக