மண்ணில் : 17 யூன் 1963 — விண்ணில் : 26 சனவரி 2018
திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், யாழ். அச்சுவேலியை வசிப்பிடமாகவும், சுவிஸ் Lausanne ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த மகாலிங்கம் செல்வகுமார் .(சுவிஸ் குமார்) அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.
வாழ்வியல் தத்துவம் நாங்கள்
அறியாது தவிக்கின்றோம்
பிறப்பும் இறப்பும் உலக
இயக்கத்தின் கட்டாயம்,
ஆனால் பாசமும் பந்தமும்
பிரிவில்லாத் தொடர் வலைகள்!
ஆண்டவன் படைப்பினை
ஆழமாய் பார்த்தாலும்!
பாசமாய் உங்களின்
பண்பினை நினைகின்றோம்!
நேசமாய் உங்களின்
புன்னகையை ரசிக்கின்றோம்!
கனவுகள் நிறைவேறும் காலமதில்
காலனவன் உங்களை அழைத்துவிட்டான்
உங்கள் கனவுகளை கலைத்து விட்டான்
காலத்தின் மடியில் துயில் கொள்ளும்
உங்களை தினம் தினம் நினைத்து
ஒன்று கூடி நாங்கள் உறவாடும் போது
எங்கள் மத்தியில் நீங்களும் வந்து
உறவாடுவீர்கள் என்று நம்புகின்றோம்!
அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
அன்னாரின் அந்தியேட்டிக்கிரியை 25-02-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணிமுதல் பி.ப 03:00 மணிவரை Paroisse de Bellevaux / st luc Aloys Fauquez 21 Case Postale129, 1000 Lusanne18, Switzerland எனும் முகவரியில் நடைபெறவுள்ளது. எங்கள் அன்புத் தெய்வம் நோயுற்றிருந்த
வேளை ஓடோடி வந்தவர்களுக்கும் எமக்கு 7
ஆறுதல் கூறி உறுதுணையாக
இருந்தவர்களுக்கும், எல்லா வழிகளிலும் உதவிகள் புரிந்தோர்களுக்கும் அன்புத் தெய்வத்தின் மரணச்செய்தி கேட்டு நேரில் ஓடிவந்தவர்களுக்கும் அயல் நாடுகளில் இருந்து வந்தவர்களுக்கும்,
தொலைபேசி மூலம் அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும்,
கண்ணீர் அஞ்சலி செலுத்தியோருக்கும் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்களுக்கும் நன்றிகள் பல கூறி நிற்கின்றோம். இந்த அழைப்பிதழை ஏற்று தங்கள் குடும்பசகிதம் வருகை தந்து மதிய போசன நிகழ்விலும் கலந்துகொள்ளும் வண்ணம் அன்புடன் அழைக்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை இணையங்களின்
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
துயருறும் குடும்பத்தினருக்கு
ஆழ்ந்த அனுதாபங்களை
தெரிவித்து கொள்ளுகின்றோம்
.அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய
இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
தகவல்
மனைவி, பிள்ளைகள்
தொடர்புகளுக்கு
சாந்தி(மனைவி) — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41216467302
இராசகுமார் சேகர் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41784035850
இந்திரன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41763667463
சிங்கன் — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41798548726
0 கருத்துகள்:
கருத்துரையிடுக