யாழ். தெல்லிப்பளை பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் சமுர்த்தி உத்தியோகத்தரொருவரால் கொழும்பு வெளிவிவகார அமைச்சில் கடமையாற்றும் பெண் அதிகாரிக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
இந்த சம்பவத்தை தொடர்ந்து கொழும்பு வெளிவிவகார அமைச்சில் கடமையாற்றும் பெண் அதிகாரி உடல் நிலை பாதிக்கப்பட்டு வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில்
அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் அச்சுறுத்தல் விடுத்த குறித்த சமுர்த்தி உத்தியோகத்தரை பொலிஸார் கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரியவருகிறது. இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குறித்த சமுர்த்தி உத்தியோகத்தர், வெளிவிவகார அமைச்சில் கடமையாற்றும் உத்தியோகத்தருடன் முகநூல்
மூலம் நட்பாகியுள்ளார்.
இதனையடுத்து சமுர்த்தி உத்தியோகத்தரின் உறவினர் ஒருவர் கனடா செல்ல விசா எடுப்பதற்கு முயற்சி மேற்கொண்டுள்ளார்.
எனினும் அமைச்சின் உத்தியோகத்தர், அவரது கோவைகளை யாழில் உள்ள தனது நண்பர் ஒருவரிடம் கொடுத்து அனுப்புமாறும், அமைச்சின் கணக்குக்கு உரிய தொகையை வைப்பிலிடுமாறும்
பணித்துள்ளார்.
இவையனைத்தையும் உடனடியாக நிறைவேற்றிய சமுர்த்தி உத்தியோகத்தர் சட்ட ரீதியாக அமைச்சின் அலுவலர் இவரது விடயத்தை கையாண்டு, உரிய கனடா தூதுவராலயத்திற்கு அமைச்சினூடாக ஆவணங்களை சமர்ப்பித்துள்ளார்.
எனினும் தூதுவராலயம் இவரது ஆவணங்கள் தவறானவை, போலியானவை என கூறி ஆவணங்களை தூதுவராலயம் சமுர்த்தி உத்தியோகத்தரின் வீட்டு விலாசத்திற்கு திருப்பி அனுப்பியது.
இதனையடுத்து முகநூலில் நட்பாக இருந்த வெளிவிவகார அமைச்சு உத்தியோகத்தரை தொலைபேசியூடாக அச்சுறுத்தியதோடு, தனது உறவினர் மற்றும் நண்பர்கள் மூலமும் பல தடவைகள் கொலை அச்சுறுத்தலையும் விடுத்துள்ளார்.
இது தொடர்பில் விசாரணை நடத்த அமைச்சு அதிகாரிகள் சமுர்த்தி உத்தியோகத்தரை கொழும்பு அமைச்சுக்கு அழைத்த போதும் அவர் கொழும்பிற்கு வராது தொடர்ச்சியாக அந்த உத்தியோகத்தரை அச்சுறுத்தியுள்ளார்.
இதனையடுத்து வெளிவிவகார அமைச்சின் அதிகாரியினால் சமுர்த்தி உத்தியோகத்தரை கைது செய்யுமாறு கோரி பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக