siruppiddy

18

siruppiddy

unkal

unkal

திங்கள், 26 பிப்ரவரி, 2018

தாயார் மகன் வெளிநாடு சென்ற விரக்தியில் தூக்கிலிட்டு தற்கொலை

கோண்டாவில் மேற்கில் வளவு ஒன்றில் இருந்து மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.சடலமாக மீட்கப்பட்டவர் அப்பகுதியைச் சேர்ந்த 54 வயதுடையவர் என கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.
இவரது மகன் வெளிநாடு சென்றதால் சிலநாட்களாக இவர் விரக்தியடைந்த நிலையில் காணப்பட்டார். மாமரத்தில் இவர் தூக்கில் தொங்கியுள்ள நிலையில் இவரது கணவரும் பிள்ளைகளும் இவரை முதலில் கண்டு பொலிஸாருக்கு தகவல் 
வழங்கியிருந்தனர்.
சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டு யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தினர். இறப்பு விசாரணைகளை வைத்தியசாலையின் திடீர் இறப்பு அலுவலர் நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.உடற்கூற்று பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


0 கருத்துகள்:

கருத்துரையிடுக