மட்டக்களப்பு மாவட்டத்தின் இரு வேறு இடங்களில் ஆண்கள் இருவரின் சடலங்கள் நேற்று (சனிக்கிழமை) மாலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு - கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள அம்பிளாந்துறை வடக்கைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தையான குமாரசிங்கம் செந்தில்குமரன் (வயது 36) மற்றும் மட்டக்களப்பு
- நகர பொலிஸ் பிரிவிலுள்ள இரத்தினம் வீதி கருவேப்பங்கேணியைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தையான கிறிஸ்டி ஜோயல் ஜோதிராஜ் (வயது 38) ஆகியோரின் சடலங்களே தத்தம் வீடுகிளிலிருந்து
மீட்கப்பட்டுள்ளன.
மேலும் இந்த இருவரும் தூக்கில் தொங்கிய நிலையிலேயே சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் இச்சம்பவங்கள் பற்றிய மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மட்டக்களப்பில் சமீப காலமாக வயது வித்தியாசமின்றி தற்கொலைகளும் அகால மரணங்களும் அதிகரித்துள்ளமை
குறிப்பிடத்தக்கது
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக