ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா மணிக்கவத்தை தோட்டபகுதியில் கொழுந்து பறித்து கொண்டிருந்த 12 பெண் தொழிலாளர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார்
தெரிவித்தனர் .
குறித்த பெண் தொழிலாளர்கள் தேயிலை கொழுந்து பறித்து கொண்டிருந்த வேலையில் மரம் ஒன்றில் இருந்த குளவி கழைந்து பெண் தொழிலாளர்களை தாக்கியதாக காயங்களுக்கு உள்ளான தொழிலாளர்கள்
தெரிவித்தனர்.
காயங்களுக்கு உள்ளானவர்கள் தொடர்ந்தும் டிக்கோயா கிழங்கன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றமை
குறிப்பிடத்தக்கது..
0 கருத்துகள்:
கருத்துரையிடுக