சப்ரகமுகாலியிலிருந்து ஹம்பாந்தோடடை ஊடாகபொத்துவில் வரையான கடற்பரப்புகளில் கரையோரத்தை அண்டிய பகுதிகளில் 2 – 2.5 மீற்றர் உயரம் வரை (இது கரைக்கு வரும் அலைகளின் உயரம் அல்ல) மேலெழும்பக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
வ, மேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம்
தெரிவித்துள்ளது.
இலங்கையின் இன்றைய வானிலை தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதன்படி, வடமேல் மாகாணத்தில் ஓரவு மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும்.ஊவா மாகாணத்திலும், அம்பாறை மாவட்டத்தின் சில இடங்களிலும், இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை, திருகோணமலை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மணித்தியாலத்திற்கு 40 முதல் 50 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று
அதிகரித்து வீசக்கூடும்.
இந்த நிலையில், மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை தவிர்ப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளும் புத்தளத்திலிருந்து மன்னார் மற்றும் காங்கேசந்துறை ஊடாக திருகோணமலை வரையான கடற்பரப்புகளும் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும்.
நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.
கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக