siruppiddy

18

siruppiddy

unkal

unkal

புதன், 1 செப்டம்பர், 2021

நாட்டில் வவுனியா மாவட்டத்தில் பரசிட்டமோல்ட் மருந்துக்குத் தட்டுப்பாடு

கோவிட் தொற்று காரணமாக வவுனியா மாவட்டத்தில் பரசிட்டமோல்ட் மருந்துக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் கோவிட் தொற்று வேகமாக அதிகரித்து வரும் நிலையில் தொற்றாளர்களை வீடுகளில் வைத்து சிகிச்சையளிக்கும் முறையும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
அத்துடன் காய்ச்சல் உள்ளவர்களை பரசிட்டமோல்ட் மாத்திரைகளைப் பயன்படுத்துமாறு சில மருத்துவர்கள் அறிவுரை 
கூறியுள்ளனர்
இதற்கமைவாக வவுனியா மாவட்டத்தில் பலரும் பரசிட்டமோல்ட் மருந்துகளை அதிகளில் கொள்வனவு செய்து வீடுகளுக்குக் கொண்டு செல்வதனால் பல தனியார் மருந்தங்களில் குறித்த தட்டுப்பாடு 
ஏற்பட்டுள்ளது.
இதனால் தனியார் மருந்தகங்களுக்குச் செல்லும் பலரும் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்வதையும் அவதானிக்க முடிகிறது.
அத்துடன், விற்றமின் சி மற்றும் விற்றமின் டீ மருந்துக்கான தட்டுப்பாடும் வவுனியாவில் கடந்த சில நாட்களாக நிலவி வருகின்றமை
 குறிப்பிடத்தக்கது.

நிலாவரை.கொம் செய்திகள் >>>





0 கருத்துகள்:

கருத்துரையிடுக