siruppiddy

18

siruppiddy

unkal

unkal

ஞாயிறு, 31 அக்டோபர், 2021

நாட்டில் உள்நாட்டு சந்தையில் அதிகரித்து காணப்பட்ட மஞ்சள் தூளின் விலை வீழ்ச்சி

நாட்டில் மஞ்சள் தூளின் விலை 7000 ரூபாவிலிருந்து 4500 ரூபாவாக வீழ்ச்சியடைந்துள்ளது.இதுவரையில் உள்நாட்டு சந்தையில் அதிகரித்து காணப்பட்ட மஞ்சள் தூளின் விலையானது, உள்ளூர் அறுவடைகள் சந்தைக்கு கிடைக்கப்பெற்றதையடுத்து வீழ்ச்சியடைந்துள்ளது.அவ்வாறே விதை மஞ்சள் கிலோவொன்றின் விலை 1000 ரூபாவிலிருந்து 500 ரூபாவாக குறைவடைந்துள்ளதாக சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன.வெவ்வேறு பயிர்ச்செய்கையில் ஈடுபடும் விவசாயிகளில் பெரும்பாலானோர் மஞ்சள் செய்கையிலும் ஈடுபட்டுள்ளதாக...

காந்தகஹ சந்தியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழப்பு

எல்பிட்டிய, மாபலகம வீதியின் காந்தகஹ சந்தியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.லொறி ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.விபத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் உயிரிழந்துள்ளனர்.சம்பவத்தில் 30 மற்றும் 35 வயதுடைய இருவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.சம்பவம் தொடர்பில் லொறியின் ஓட்டுனர் கைது...

சனி, 30 அக்டோபர், 2021

நாட்டிடை அண்மித்த வளிமண்டலத்தில் தொடர்ந்தும் நிலைகொண்டுள்ள தாழமுக்கம்

இலங்கையை அண்மித்த வளிமண்டலத்தில் தொடர்ந்தும் தாழமுக்கம் நிலைகொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.இதன் காரணமாக வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.இன்றைய தினத்திற்கான காலநிலை தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளதுதன்படி, ஏனைய இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழை பெய்யக்கூடும். வடக்கு, வடமத்திய, வடமேல்,...

வெள்ளி, 29 அக்டோபர், 2021

கொழும்பில் தனியாக வசித்து வந்த நபர் சடலமாக மீட்ப்பு

தனியாக வசித்து வந்த நபர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொழும்பு, பிலியந்தலை தும்போவில பிரேதேசத்திலுள்ள வீட்டில் தனியாக வசித்து வந்த நபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.சம்பவத்தில் சரத் தந்தநாராயன என்ற 60 வயது நபரே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளார்.குறித்த நபரின் தொலைபேசி இலக்கம் செயலிழந்து காணப்பட்டதால், அவருடன் பணியாற்றிய ஊழியர் ஒருவர் வீட்டிற்கே சென்ற பார்த்தபோது உயிரிழந்த நிலையில் காணப்பட்டதாக பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.உயிரிழந்த...

புதன், 27 அக்டோபர், 2021

யாழ் பண்டத்தரிப்பு பகுதியில் கோடரி வெட்டு தாக்குதலில் இருவர் படுகாயம்

இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பண்டத்தரிப்பு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட கோடரி வெட்டு தாக்குதலில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்இன்று இரவு இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,உறவினர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாகவே குறித்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாகத் தெரியவந்துள்ளதுகாயமடைந்த இருவரும் தெல்லிப்பழை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இத் தாக்குதலை நடாத்திய சந்தேகநபர் தலைமறைவாகியுள்ளார்.இச்சம்பவம்...

வடமராட்சி, கப்புது வீதியில்,இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் மரணம்

யாழ் –வடமராட்சி, கப்புது வீதியில், 26-10-2021.அன்றிரவு  இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.சம்பவத்தில் 40 வயதுடைய பொன்னுத்துரை காண்டீபன் எனும் இரண்டு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்தவர் ஆவார். குறித்த நபர், தனது தாயாரின் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது, வேகக் கட்டுப்பாட்டை இழந்ததில் விபத்துஏற்பட்டதாக கூறப்படுகின்றது.இதன்போது மோட்டார் சைக்கிள், பால வேலைக்காக குறுக்காக கட்டப்பட்ட சமிஞ்கையையும் தாண்டி...

ஞாயிறு, 24 அக்டோபர், 2021

படுகாயமடைந்த நிலையில் ஒருவர் மட்டு போதனா வைத்தியசாலையில்

மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதி கல்லடி விபுலானந்த இசை நடன பல்கலைக்கழகத்துக்கு முன்னால் இன்று (24) காலையில் இலங்கை போக்குவரத்து பஸ்வண்டி மோட்டர் சைக்கிள் மோதி இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி காவல்துறையினர் தெரிவித்தனர்.இதனையடுத்து சாரதியை கைது செய்ததுடன் பஸ் வண்டியை காவல் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாணைகளை காத்தான்குடி போக்குவரத்து...

இரண்டு சடலங்கள் பண்டாரவளையில் மீட்பு

பண்டாரவளை- நாயபெத்த தோட்டம், கோணமுட்டாவ வீதியின் தேயிலைத் தோட்டத்தில் உள்ள வடிகான் ஒன்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர், தெற்கு கெபில்லவெல- பண்டாரவளை என்ற முகவரியைச் சேர்ந்த 37 வயதுடைய ஒருவர் என பண்டாரவளைகாவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.இதேவேளை பண்டாரவளை- மீரியகஹ சந்தியில் உள்ள வடிகானுக்கு அருகிலிருந்து மற்றுமொரு ஆணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.எனினும் இந்த சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்றும்,...

புதன், 20 அக்டோபர், 2021

நாடு பூராக மீண்டும் மின்வெட்டு வெளியான முக்கிய செய்தி

நாட்டில் டிசம்பருக்குப் பின்னர் 12 மணிநேர மின்வெட்டு ஏற்பட வாய்ப்பிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக ரனவக்க தெரிவித்துள்ளார்.மேலும், டிசம்பர் மாதத்திற்குள் இலங்கைக்கு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்படாவிட்டால், சபுகஸ்கந்த கச்சா சுத்திகரிப்பு நிலையம் மூடப்படும்.அதேநேரம், 200 மெகாவாட் மின் உற்பத்தி நிலையங்கள் மூடப்படும்.நிலக்கரியை இறக்குமதி செய்யாவிட்டாலும் நாட்டின் மின்சாரத்தின் உற்பத்தியில் 45 வீத அளவு இழக்கப்படும்.அப்படியானால், நாடு கண்டிப்பாக...

திங்கள், 18 அக்டோபர், 2021

நாட்டில் கோழி முட்டையின் விலை சடுதியாக அதிகரிப்பு

உள்நாட்டு சந்தையில் முட்டை விலை அதிகரித்துள்ளதுஎன அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க (Sarath Ratnayake) தெரிவித்துள்ளார்.அதன்படி ஒரு முட்டையின் விலை 14 ரூபா முதல் 17 ரூபா வரை இருந்த போதிலும், தற்போது 20 ரூபா முதல் 21 ரூபா வரை அதிகரித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.சீமெந்து, காஸ், கோதுமை மா, மற்றும் பால்மா உட்பட மூலப் பொருள்கள்உள்ளடங்கலாக பிரைட்ஸ் றைஸ், கொத்து, தேநீர், பாண் மற்றும் பணிஸ்...

சனி, 16 அக்டோபர், 2021

பாரிய மாற்றம் தங்கத்தின் விலையில் வெளியான இன்றைய நிலவரம்

தங்கம் விலையானது வாரத்தின் முதல் நாளான திங்கள் முதல் விலை ஏற்ற இறக்கத்துடனே இருந்து வந்த நிலையில் இன்று அதிரடியாக குறைந்துள்ளதனால் தாங்கம் வாங்குபவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 4465 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று மாலை இதன் விலை ரூ. 4515ஆக இருந்த நிலையில் இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 50 குறைந்துள்ளது.அதன்படி, நேற்று மாலை நிலவரப்படி ரூ. 36,120-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு...

வெள்ளி, 15 அக்டோபர், 2021

இலங்கைக்கு வெளிநாட்டில் இருந்து வந்த இளைஞர் உயிரிழந்துள்ளார்.

யாழ்சாவகச்சேரி விபத்தில் வெளிநாட்டிலிருந்து திரும்பிய இளைஞர்  மரணமைடைந்துள்ள சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தில் சங்கத்தானை, சாவகச்சேரியைச் சேர்ந்த நிரோஷ் (வயது 24) எனவரே உயிரிழந்துள்ளார்.யாழ்ப்பாணம் தென்மராட்சியின் சாவகச்சேரியில் 14-10-2021.அன்று மாலை விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த இளைஞரே.15-10-2021.ö இன்று அதிகாலை உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.சாவகச்சேரியின் மடத்தடிப் பகுதியில் டிப்பர் வாகனமும் மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்டதில்...

வியாழன், 14 அக்டோபர், 2021

மாஓயாவில் வாய் பிலாஸ்டர் ஒன்றினால் மூடப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட சடலம்

வரகாபொல பிரதேசத்தில்  நபர் ஒருவரின் சடலம் சந்தேகத்திற்கு இடமான முறையில் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.குறித்த சடலம்13.10-2021.புதன்கிழமை மதியம் வரகாபொல துல்ஹிரிய பிரதேசத்தின் மாஓயாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.மேலும் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட நபரின் வாய் பிலாஸ்டர் ஒன்றினால் மூடப்பட்டிருந்ததாக பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.தேவேளை சடலம் மீட்கப்பட்ட இடத்திற்கு அருகில் இருந்து அடையாள அட்டை ஒன்று...

புதன், 13 அக்டோபர், 2021

நாட்டில் மீண்டும் சீனியின் விலை சடுதியாக அதிகரித்துள்ளது

சீனிக்கான கட்டுப்பாட்டு விலையை அரசாங்கம் நடைமுறைப்படுத்தியுள்ள போதிலும் சீனியின் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.கொழும்பில் மொத்த விலை 130 ரூபாய் என்றும் சில்லறை விலை 12-10-2021.அன்று வரை 138 ரூபாவாக உயர்ந்துள்ளது என்று கோட்டை மொத்த வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.நுகர்வோர் விவகார அதிகாரசபை செப்ரெம்பர் 2 ஆம் திகதி வெளியிட்ட கட்டுப்பாட்டு விலை தொடர்பான வர்த்தமானி அறிவித்தலில் வெள்ளைச் சீனி சில்லறை விலை 122 ரூபாய் மற்றும் ஒரு கிலோ பொதி...

செவ்வாய், 12 அக்டோபர், 2021

நாட்டில் பெரிய வெங்காயத்தின் விலை அதிகரிக்கப்படலாம்

நாட்டில் பல அதியாவசிய பொருட்களின் விலை உயர்வடைந்துள்ள நிலையில் , தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் இன்று பெரிய வெங்காயத்தின் கிலோ விலை 150 ரூபா வரை அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றதுஇறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்திற்காக 40 ரூபா வரி விதிக்கப்பட்டதே இதற்கு காரணம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.அவ்வாறு இறக்குமதி வெங்காயத்தின் மீதான வரி தாக்கம் உள்நாட்டு வெங்காயத்தின் கேள்வியை அதிகளவில் அதிகரிக்கச் செய்ததினால் விலையும் உயர்ந்துள்ளது.இந்நிலை...

ஏற்பட்ட விபத்தில் கந்தளாயில் பொலிஸ் அதிகாரி சம்பவ இடத்தில் பலி

கந்தளாய் பிரதேசத்தில் உள்ள புகையிரத கடவையில் கார் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து புகையிரத கடவையில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.காரில் பயணித்த பொலிஸ் எஸ்.ஐ ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றைய எஸ்.ஐ படுகாயமடைந்த நிலையில் கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கந்தளாய் தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இச்சம்பவம் நேற்றிரவு (11) 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.இவ்வாறு உயிரிழந்தவர் கந்தளாய் தலைமையக பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் நெலுவ-எல்லகாவ...

திங்கள், 11 அக்டோபர், 2021

அடிக்கடி நீங்கள் பீட்சா சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா!!!

தற்போதைய காலக்கட்டத்தில் அமர்ந்த நிலையிலே நீண்ட நேரம் மனதளவில் உழைப்பவர்கள், பீட்சாவை முக்கிய உணவாகச் சாப்பிட்டுவிட்டு, பல நோய்களுக்கு வழியமைக்கின்றனர். பீட்சா பல மணிநேரத்துக்குப் பசியை அடக்குமே? நிச்சயமாக, அடுத்த வேளைக்கான பசி உணர்வையும் சேர்த்து அடக்கி, செரிமானம் சார்ந்த நோய்களை உண்டாக்கும். பசியை அடக்குவதோடு சேர்த்து மலத்தையும் அடக்கும்.மலத்தை இளக்கும் வகையிலான உணவுகளை சாப்பிடப் பழகிவிட்ட நமக்கு, மலத்தை குடலிலேயே கட்டிப்போடும் பீட்சா,...

யாரேனும் வீட்டில் இறந்தால் ஓராண்டு கோயிலுக்குச் செல்லக்கூடாதா?

வீட்டில் யாரேனும் இறந்தால் ஓராண்டு கோயிலுக்குச் செல்லலாகாது இப்பழக்கம்_சரியா?தவறான_வழக்கம் சந்ததிகளைத் துன்பத்தில் ஆழ்த்தி விடும்!எவரேனும் இறந்துவிட்டால் அக்குடும்பத்தினர் ஒரு வருடத்திற்குக் கோலம் போட கூடாது , மலைத் தலத்திற்கும் போகக் கூடாது,பண்டிகைகளை கொண்டாடக் கூடாது என்றதவறான வழக்கங்கள் தற்போது நிலவி வருகின்றது.இறப்பு_நேரிட்ட நாளிலேயே கூட அக்குடும்பத்தினர் கோயிலுக்குச் சென்று வழிபடுவதிலும் ,வீட்டில் கோலம் இடுவதிலும் எவ்விதத் தவறும் இல்லை,சாஸ்திர...

சனி, 9 அக்டோபர், 2021

தோட்டக்காட்டு பகுதியில் நடந்த பயங்கர விபத்தில் உயிர் தப்பிய ஐவர்

மன்னார்  காவல் துறை பிரிவுக்குட்பட்ட தோட்டக்காட்டு பகுதியில் சில தினங்களுக்கு முன்னர் இடம் பெற்ற மோதல் சம்பவத்தை தொடர்ந்து .09-2021.இன்றைய தினம் சனிக்கிழமை காலை மன்னார்  காவல் துறை நிலையத்தில் சரணடையச் சென்றவர்கள் மீது மன்னார்  காவல் துறை நிலைய நுழைவாயிலில் வைத்து டிப்பர் வாகனத்தினால் மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளனர்.குறித்த டிப்பர் வாகனம் மோதியதில் மன்னார் பொலிஸ் நிலைய நுழை வாயிலில் நின்ற 5 பேர் பலத்த காயங்களுக்கு உள்ளான...

புதன், 6 அக்டோபர், 2021

நாட்டில் சீனிக்கு ஏற்படப்போகும் பாரிய தட்டுப்பாடு வெளியான அதிர்ச்சி செய்தி

இலங்கையில் காணப்படும் டொலர் நெருக்கடி காரணமாக இந்திய விநியோகஸ்தர்கள், இலங்கை சீனியை வழங்க தயங்குவதாக சீனி இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.டொலர் தட்டுப்பாடு காரணமாக சீனி இறக்குமதிக்கான ஆவணங்களை ஏற்க இலங்கையின் தனியார் வங்கிகள் தயக்கம் காட்டி வருவதாகவும்அவர்கள் கூறியுள்ளனர்.சீனியை இறக்குமதி செய்ய அரசாங்கம் மீண்டும் அனுமதியை வழங்கியுள்ள போதிலும் டொலர் தட்டுப்பாடு காரணமாக இறக்குமதியாளர்கள் கடும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.இந்தியாவில் சீனி...

செவ்வாய், 5 அக்டோபர், 2021

மரண அறிவித்தல் திரு செல்வராஜா சரவணபவான் 05.10.2021

இறப்பு-05 10 2021யாழ் .சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும், திரு செல்வராஜா சரவணபவான் அவர்கள் இன்று 05.10.2021 செவவாய்க்கிழமை இன்று இறைபதம் அடைந்தார்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின்  கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு   ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தித்து...

மறந்தும் இறந்தவர்களை வைத்துகொண்டு கூடவீட்டில் இவற்றை செய்யாதீங்க.

ஒருவன் இவ்வாறு தந்தையின் மரபிற்குப் பத்துப் பேர்களும் உள்ளார்கள். ஒருவன் மரித்தும் பிதுரர்களோடு சேர்த்தும் நான்காம் பாட்டன் முதல் தியாசகன் ஆகிறான்.மூன்றாம் லேபகன் பந்தியில் வருவோனாகிறான். புத்திரன் சிரார்த்தம் செய்தால் மாண்டுபோன தந்தை மகிழ்ந்து அந்தப் புத்திரனுக்கு ஒரு புத்திரனை தருகிறான்.சிரார்த்தம் செய்வதில் பிதுரர்களுக்குத் திருப்தியுண்டாலதன்றி செய்பவனுக்கு மிக்க பயன் உண்டு. உயிர் நீங்கிய பிறகு தேகத்தை வைத்திருக்க கூடாது. அதனால் உடனே சம்ஸ்காரம்...