கொக்குவில் –கேணியடிப் பகுதியில் 07-11-2021.நேற்று இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்தில் குறித்த பகுதியினைச் சேர்ந்த உதயகுமார் ரதீபன் என்னும் இளைஞரே காயமடைந்துள்ளார்.மோட்டார் சைக்கிலில் வந்த மூவரே குறித்த இளைஞர் மீது வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது காயமடைந்த நிலையில் குறித்த இளைஞர் அங்கிருந்து மீட்கப்பட்டு சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை
நடத்தி வருகின்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக