பிரித்தானியா தலைநகரான லண்டனில் இலங்கை தமிழ் குடும்பம் ஒன்று தீ விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ள சம்பவம் லண்டன் வாழ் தமிழர்கள் மத்தியில் பெரும் சேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் 18-11-2021.அன்றைய தினம் இரவு லண்டன் பெக்ஸ்லி ஹீத் பகுதியில் இரவு 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.மேலும் இச்சம்பவத்தில் தாயும், மகளும் மற்றும் மகளின் கை குழந்தை, 5 வயது சிறுவன் என நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போது அவர்களின் புகைப்படங்கள் வெளியாகி பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில் சம்பவம் இடம்பெற்ற இடத்தில் தற்போது, அயலவர்கள் வெள்ளை இனத்தவர்கள் என்று பலர் வந்து பூ கொத்துகளை வைத்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக