நாட்டில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் கன மழை மற்றும் வெள்ளத்தினால் வட மாகாணத்தில் 96 குடும்பங்களைச் சேர்ந்த 366 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
பலத்த மழையால் யாழ்ப்பாண மாவட்டமே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஊர்காவற்றுறை, தெல்லிப்பழை, பருத்தித்துறை, சங்கானை ஆகிய பகுதிகளில் 54 குடும்பங்களைச் சேர்ந்த 209 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஐந்து வீடுகள் சேதமடைந் துள்ளதாகவும் அந்த நிலையம்
தெரிவித்துள்ளது.
மன்னாரில் நானாட்டான் மற்றும் மாந்தை மேற்கில் 40 குடும்பங்களைச் சேர்ந்த 152 பேரும், முல்லைத்தீவு மாவட்டம் துணுக்காய் பகுதியில் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 5 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நிலையம் தெரிவிக்கிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக