பல்கேரியாவின் மேற்கு பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த பேருந்து ஒன்று தீ விபத்துக்களாகியதில் 12 சிறுவர்கள் உட்பட 46 பேர் உயிரிழந்துள்ளதாக உள்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பல்கேரிய தலைநகருக்குத் தென் மேற்கே அமைந்துள்ள பொஸ்னெக் கிராமத்திற்கருகில் இன்று இச்சம்பவம் பதிவாகியுள்ளது.
பேருந்து தீப்பிடித்த வேளை அதிலிருந்து தப்பிக்கக் குதித்த ஏழு பேர் தீக்காயங்களுடன் வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தில் நான்கு வயதுடைய இரட்டை சகோதரர்களும் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.
குறித்த பேருந்து துருக்கியிலிருந்து வடக்கு மாசிடோனியா நோக்கிப் பயணித்ததாக நம்பப்படுகின்றது. இந்த விபத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக