siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வியாழன், 30 ஜூன், 2022

கேரளாவில் பல் துலக்காமல் முத்தம் கொடுத்த மனைவியை கொலைசெய்த கணவன்

இந்திய கேரளா மாநிலத்தில் பல் துலக்காமல் குழந்தைக்கு முத்தம் கொடுத்ததால் ஏற்பட்ட தகராறில் மனைவியை கணவன் குத்திக் கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கேரளா மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்தவர் அவினாஷ். இவரது மனைவி தீபிகா. இவர்களுக்கு ஒன்றைரை வயதில் குழந்தை உள்ளது. இந்நிலையில் காலை எழுந்ததும் அவினாஷ் குழந்தையை கொஞ்சுவது வழக்கம்.நேற்றும் அதுபோல் குழந்தைக்கு முத்தம் கொடுத்து கொஞ்சியுள்ளார். இதை பார்த்த தீபிகா பல் துலக்காமல் குழந்தைக்கு...

புதன், 29 ஜூன், 2022

நாட்டில் வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு

நாட்டில் தற்போது நிலவும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு சில வர்த்தக வங்கிக் கிளைகள் பரிவர்த்தனைகளுக்கான திறக்கும் நேரத்தை மாற்றியமைத்துள்ளன.தனால், வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களை முடிந்தளவு இணையவழியில் வங்கி பரிவர்த்தனை (Digital or Internet Banking) நடவடிக்கைளை முன்னெடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளது.எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக துறைமுகம், சுகாதாரம், அத்தியவசிய உணவுப்பொருள் விநியோகம் உள்ளிட்ட சில அத்தியாவசிய சேவைகளுக்காக எரிபொருளை விநியோகிக்குமாறு...

செவ்வாய், 28 ஜூன், 2022

நாட்டில் லங்கா ஐஓசி நிறுவனம் வெளியிட்ட மகிழ்ச்சி தகவல்

தாம் அனைவருக்கும் எரிபொருளை தொடர்ந்து விநியோகிப்பதாக லங்கா ஐஓசி நிறுவனத்தின் முகாமையாளர் குப்தா அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.அத்தியாவசிய சேவைகளுக்கே எரிபொருள் விநியோகிக்கப்படும் என நேற்றைய தினம் அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டிருந்தது.இந்த நிலையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் இந்தக் கட்டுப்பாடுகளின் கீழ் நேற்று நள்ளிரவு முதல் அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் எரிபொருள் விநியோகிக்கும் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.இந்த நிலையில், தாம்...

ஞாயிறு, 26 ஜூன், 2022

மரணஅறிவித்தல் திருமதி சுப்பிரமணியம் சின்னமணி (சின்னம்மா) 26.06.22

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் நவற்கிரியை வசிப்பிடமாககொண்ட திருமதி சுப்பிரமணியம் சின்னமணி (சின்னம்மா ) அவர்கள் 26-06-2022.ஞாயிற்றுக்கிழமை இன்று  இறைபதம் அடைந்தார் அன்னார் காலம்சென்ற  திரு சுப்பிரமணியம் அவர்களின் பாசமிகு மாணவியரும் காலம் சென்றவர்களான  தம்பு மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மகளும் காலம்சென்றவர்களான ஆறுமுகம் கந்தையா சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும் சென்றவர்களான  துரைராஜா செல்வராஜா ஞானமணி வித்திலமணி...

வெள்ளி, 24 ஜூன், 2022

தென்னமெரிக்கா வெனிசுலாவில் விமானம் விபத்து: 6 பேர் உயிரிழப்பு

தென்னமெரிக்கா நாடான வெனிசுலாவில் தனியார் விமானம் விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்தனர்.லியர்ஜெட் 55சி என்ற தனியார் விமானம் வெனிசுலா தலைநகர் நோக்கி சென்ற போது விபத்துக்குள்ளானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.தொடர்பு துண்டிப்பதற்கு 29 நிமிடங்கள் முன் வரை விமானம் வானில் பறந்ததாகவும், கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகி இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.4 பயணிகள் உள்பட 6 பேர் விமானத்தில் பயணித்துள்ளனர்.   இது தொடர்பான மேலதிக செய்திகளை உள்ளடக்கி...

வியாழன், 23 ஜூன், 2022

நாட்டில் மீண்டும் சத்தம் சந்தடி இன்றி உச்சம் தொட்ட விலைவாசி

 நாட்டில் மேலும் சில அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் மீண்டும் சடுதியாக உயர்ந்துள்ளன.நாம் அன்றாடம் பயன்படுத்தப்படும் சவர்க்காரம், பற்பசை, பிஸ்கட் வகைகள், நூடில்ஸ் உள்ளிட்ட பல பொருட்களின் விலைகளே சத்தம் சந்தடி இன்றி அதிகரித்துள்ளன.கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் 135 ரூபாவாக காணப்பட்ட சவர்க்காரத்தின் விலை, தற்போது 185 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.அத்துடன் நடுத்தர அளவான பற்பசை ஒன்றின் விலை 185 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் 160 கிராம்...

புதன், 22 ஜூன், 2022

மரணஅறிவித்தல் திரு சண்மும் றங்கேசேஸ்வரன்(வரன் ) 22.06.22

தோற்றம் -02-06-1976-மறைவு -22-06-2022.யாழ் தோப்பு அச்சுவேலியைப்  பிறப்பிடமாகவும் தற்போது  பிரான்சில் வசித்து வந்த திரு சண்மும் றங்கேசேஸ்வரன் (வரன் )அவர்கள் 22-06-2022. புதன்கிழமை  அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார் திரு ஐயம்பிள்ளை சண்முகம் காலம் சென்ற இராசலட்சுமி  (சின்னவள் )அவர்களின் பாசமிகு மகனுமாவார் காலஞ்சென்றவர்களான ஐயம்பிள்ளை தங்கம்மா  செல்லத்துரை பார்வதியின் பேரனும் பமிலாவின் அன்புக்கணவரும் காலஞ்சென்ற...

ஞாயிறு, 19 ஜூன், 2022

ரொறன்ரோவில் தீ வைப்புச்சம்பவம் உயிருடன் கொளுத்தப்பட்ட இளம் பெண்

கனடா – ரொறன்ரோவில் இடம்பெற்ற தீ வைப்புச் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.பகல்வேளை பேருந்து ஒன்றில் பயணித்த இளம் பெண் ஒருவர் உயிருடன் தீ வைத்து கொளுத்தப்பட்ட சம்பவமே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மிகவும் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட குறித்த பெண் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனுடன் தொடர்புடைய 35 வயதான நபர் கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் ரொறன்ரோ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.இது ஒரு தற்செயலான தாக்குதல் சம்பவம்...

சனி, 18 ஜூன், 2022

மரண அறிவித்தல் திரு விஜயாலயன் மதியழகன் 14.06.22

மண்ணில்-18 01 1994-விண்ணில்-14-06-2022முல்லைத்தீவு முள்ளியவளையைப் பிறப்பிடமாகவும், கனடா Ottawa நகரை வசிப்பிடமாகவும் கொண்ட விஜயாலயன் மதியழகன் அவர்கள் 14-06-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.அன்னார், மதியழகன் இராஜதுரை, விஜயராணி மதியழகன் தம்பதிகளின் சிரேஸ்ட புத்திரரும்,கார்த்திகா கதீசன் அவர்களின் அன்புச் சகோதரரும்,கதீசன் அருளானந்தம் அவர்களின் மைத்துனரும், கவினிகா அவர்களின் பாசமிகு மாமனாரும்,காலஞ்சென்ற இராஜதுரை பொன்னம்பலம்(Srilankan parliament...

வெள்ளி, 17 ஜூன், 2022

இடம்பெற்ற விபத்தில் கனடாவில் இலங்கை தமிழ் இளைஞன் பலி

கனடாவில் பொலிஸ் அதிகாரியாக கடமையாற்றிய இலங்கை தமிழ் இளைஞன் ஒருவர்((15-06-2022) நேற்றுமுன்தினம் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்துள்ளார்.28 வயதான விஜயாலயன் மதியழகன் என்பவரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.இவர் கனேடிய இராணுவத்தில் பல வருடங்கள் பணியாற்றிய நிலையில், இரண்டு வருடங்களுக்கு முன்னர் பொலிஸ் சேவையில் இணைந்துள்ளார்.விபத்தில் படுகாயங்களுக்குள்ளான அவர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை...

வியாழன், 16 ஜூன், 2022

உந்துருளியில் சென்ற இரு பெண்களை யாழில் மோதித் தள்ளிய வாகனம்

யாழ். நகரில் மோட்டார் சைக்கிளில் சென்ற இரு பெண்களை மோதித் தள்ளிவிட்டு வாகனம் ஒன்று தப்பிச் சென்றுள்ளது. இதில், அந்தப் பெண்கள் இருவரும் படுகாயமடைந்துள்ளனர்.16-06-2022.இன்று புதன்கிழமை காலை 7.30 மணியளவில் யாழ். நகரின் மார்ட்டின் வீதிக்கு அண்மையாக உள்ள பிரதான வீதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.படுகாயங்களுக்கு இலக்கான இரு பெண்களும் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.மோதிய வாகனம் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ள நிலையில், அதன் இலக்கத்...

செவ்வாய், 14 ஜூன், 2022

டென்னிஸ் போட்டிகளில் பெருமை சேர்த்த யாழ்.மாவட்ட சிறுவர்கள்

இலங்கை டென்னிஸ் சம்மேளனத்தின் அனுசரணையுடன் நடாத்தப்பட்ட STR Cool Tennis இன் 10 வயதிற்க்கு உட்ப்பட்ட தனி நபர்களுக்கான டென்னிஸ் போட்டிகளில் யாழ்.மாவட்ட வீரர்கள் முதன் முறையாக தமது வெற்றிகளை பதிவு செய்துள்ளனர்.கடந்த யூன் 10ஆம்,11ஆம் மற்றும் 12ஆம் திகதிகளில் இலங்கை டென்னிஸ் சம்மேளனத்தில் இப் போட்டிகள் நடைபெற்றன.இதில் 8 வயதிற்கு உட்பட்ட ஆண்களுக்கான ஒற்றையர் போட்டியில் புனித பத்திரிசியார் கல்லூரி மாணவன் ஜெ.நர்ஸ்வின் காலிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.இதன்போது...

திங்கள், 13 ஜூன், 2022

ஆலடித் தெரு பகுதியில் லண்டன் பெண் மரணத்தில் ஏற்பட்டுள்ள சந்தேகம்

வவுனியா, ஆலடித் தெரு பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.இந்த சம்பவம் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதென வவுனியா பொலிஸ் குற்ற விசாரணை பிரிவு அதிகாரிகள்  12-06-2022.அன்று  தெரிவித்துள்ளனர்.32 வயதான சிந்துஜா என்ற உயிரிழந்த பெண்ணின் கணவர் மற்றும் அவரது இரண்டு குழந்தைகளும் லண்டனில் வசிக்கின்றனர். மேலும் இறந்த பெண் சில காலமாக அவர்களைப் பிரிந்து வாழ்ந்து வருவதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.லண்டனில் இருந்து...

ஞாயிறு, 12 ஜூன், 2022

இலங்கையில் எரிபொருளை வழங்க புதிய நடைமுறை

இலங்கையில் ஜூலை முதலாம் திகதி முதல் எரிபொருளை வழங்க புதிய திட்டமொன்றை நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.இதன்படி, எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வாடிக்கையாளர்களை பதிவு செய்து, வாராந்தம் உத்தரவாத அடிப்படையில் எரிபொருள் வழங்கவுள்ளதாக வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த எதிர்பார்த்துள்ளதாக அவர் தனது ட்விட்டர் பதிவொன்றின் ஊடாக குறிப்பிட்டுள்ளார்.போதிய அளவான எரிபொருள்...

சனி, 11 ஜூன், 2022

இலங்கை மக்களுக்குமுகக்கவசங்கள் அணிவது தொடர்பான அறிவிப்பு

இலங்கை மக்களுக்கு முகக் கவசங்களை தொடர்ந்தும் பயன்படுத்துமாறு இலங்கை மக்களுக்கு மருத்துவ நிபுணர்களின் ஒன்றியத்தினால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.முகக் கவசங்களை அணியும் பழக்கத்தை கைவிட வேண்டாம் எனவும், குறிப்பாக உள்ளரங்க நிகழ்வுகளில் முகக் கவசங்கள் அணியுமாறும் கோரியுள்ளனர்.வயோதிபர்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் தேவையின்றி சுவாசப் பிரச்சினைகளை எதிர்நோக்க நேரிடுவதனை தடுக்க இவ்வாறு முகக் கவசம் அணியுமாறு கோரப்பட்டுள்ளது.மேலும்,...

வியாழன், 9 ஜூன், 2022

நாட்டில் அரிசிக்கு கட்டுப்பாட்டு விலை – வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு

அரிசிக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயம் செய்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.இலங்கை நுகர்வோர் விவகார அதிகார சபையினால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இதன்படி, ஒரு கிலோ நாடு அரிசி 220 ரூபாவிற்கும், ஒரு கிலோ சம்பா அரிசி 230 ரூபாவிற்கும், ஒரு கிலோ கீரி சம்பா அரிசி 260 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்பட வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் உச்சபட்ச சில்லறை விலையை விடவும் கூடுதல் தொகைக்கு விற்பனை செய்யும் வர்த்தகர்களை...

புதன், 8 ஜூன், 2022

வாழைச்சேனையில் ஆறு நாட்கள் உணவின்றி தெருவில் உயிரிழந்த நபர்

வாழைச்சேனை செங்கலடி புதிய வீதி கொம்மாந்துறையைச் சேர்ந்த பிள்ளையான் கணேசமூர்த்தி (69 வயது) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.பொது மைதானத்திற்கு அருகில் முதியவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லசந்த பன்டார தெரிவித்தார்.குறித்த நபர் வீட்டிலிருந்து வெளியேறி சுமார் ஆறு நாட்கள் உணவின்றி தவித்து வந்துள்ள நிலையில், பசியின் காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.சடலம் வாழைச்சேனை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு...

செவ்வாய், 7 ஜூன், 2022

அக்கரப்பத்தனையில் விறகு தேடச் சென்ற இளம் யுவதிகளைக் காணவில்லை

விறகு தேடச் சென்ற இரண்டு யுவதிகளை கடந்த 06 நாட்களாக காணவில்லை என அக்கரபத்தனை பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு காணாமல் போனவர்கள் அக்கரப்பத்தனை சென்மார்கட் தோட்டத்தில் வசிக்கும் சிவக்குமார் ரூபிகா (வயது 15), சிவலிங்கம் ஸ்ரீதேவி (வயது 18) ஆகிய இரண்டு யுவதிகள் என பொலிஸார் தெரிவித்தனர்.கடந்த 2ஆம் திகதி காலை 11 மணியளவில் வீட்டில் இருந்து விறகு சேர்க்க சென்றவர்கள் மீண்டும் வீடு திரும்பவில்லை என்றும், இதுவரை இவர்களை கண்டுபிடிக்க...

மரண அறிவித்தல் திரு அருள்தாசன் யேசுதாசன் (அருள், ஜோன்சன்)05.06.22

பிறப்பு-19 -12-1966-இறப்பு-05- 06- 2022 நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன்என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான் -யோவான்: 11:25 யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி, சுவிஸ் சூரிச்(Zürich)ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அருள்தாசன் யேசுதாசன் அவர்கள் 05-06-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்ற சுவாந்தக்குரூஸ் யேசுதாசன், பெலிசிற்றம்மா(கனகமணி) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பீற்றர்...

திங்கள், 6 ஜூன், 2022

நாட்டின் சில பிரதேசங்களில் சிறுவர்களுக்கு புதிய வைரஸ் பெற்றோர்களுக்கு எச்சரிக்கை

கொழும்பு உள்ளிட்ட நாட்டின் சில பிரதேசங்களில் சிறுவர்களுக்கு புதிய வைரஸ் காய்ச்சலொன்று உருவாகி வருவதாகவும் அது தொடர்பில் பெற்றோர் மிகுந்த கவனம் செலுத்துவது அவசியம் எனவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.6 மாதம் முதல் 12 வயது வரையிலான சிறுவர்களுக்கு இந்த காய்ச்சல் ஏற்படுவதாகவும் இது ஒருவரிலிருந்த மற்றவருக்கு பரவக்கூடியது என்றும் எனினும் இது ஆட்கொல்லி நோயல்ல என்பதையும் சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.அதேவேளை, அவ்வாறான சிறுவர்களை ஆரம்ப பாடசாலை,...

சனி, 4 ஜூன், 2022

தெற்கு ஜெர்மனியில் தடம்புரண்ட ரயில்… நால்வர் மரணம், 30 பேர் காயம்

தெற்கு ஜெர்மனி வட்டாரத்தில் உள்ள ski resort பகுதியில் ரயில் ஒன்று தடம்புரண்டதில் நால்வர் மாண்டதாக மீட்புச்சேவை அதிகாரிகள் தெரிவித்தனர்.30 பேர் காயமடைந்ததாகவும் 15 பேர் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருவதாகவும் கூறினர்.விபத்து நேர்ந்தபோது சுமார் 60 பேர் ரயிலில் இருந்ததாக நம்பப்படுகிறது.ரயிலில் பல பள்ளி மாணவர்கள் இருந்தனர் என்று செய்தித்தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.விபத்துக்கான காரணம் குறித்த விசாரணைகள் நடந்துவருவதாகக் காவல்துறை தெரிவித்தது.மாண்டவர்களின்...