siruppiddy

18

siruppiddy

unkal

unkal

ஞாயிறு, 31 டிசம்பர், 2023

ஐக்கிய அரபு இராஜ்ஜியம் இலங்கை கைதிகளுக்கு அரச மன்னிப்பு வழங்கியது

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) முழுவதும் வெவ்வேறு சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மொத்தம் 44 இலங்கையர்களுக்கு அரச கட்டளையினால் மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.ஐக்கிய அரபு எமிரேட்ஸின் 52வது தேசிய தினமான டிசம்பர் 02 ஆம் திகதி அனுசரிக்கப்பட்ட ஐக்கிய அரபு எமிரேட்ஸின் 52 வது தேசிய தினத்தின் போது இந்த இலங்கை கைதிகள் அரச உத்தரவின் மூலம் மன்னிப்பு பெற்றதாக அபுதாபியில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளியுறவு அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக...

சனி, 30 டிசம்பர், 2023

கொடிகாமம் பகுதியைச் சேர்ந்த தாய் இரண்டாவது குழந்தை பிறந்து சில நாட்களில் உயிரிழந்தார்

கொடிகாமம் பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் இளம் தாய்,இரண்டாவது குழந்தை பிறந்து சில நாட்களில் உயிரிழந்துள்ளார்.குழந்தை பிறந்து சில நாட்களில் இளம் தாய் மாரடைப்பு காரணமாக உயிரிழந்த துயரச் சம்பவம் இடம் பெற்றுள்ளது.கொடிகாமம் பகுதியைச் சேர்ந்த கணேசமூர்த்தி தனுஷா வயது 33 என்ற இரண்டு பிள்ளைகளின் தாயார் இவ்வாறு உயிரிழந்துள்ளார். சடலம் உடல் கூற்று சோதனைக்காக யாழ் போதனா வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது&nb...

வெள்ளி, 29 டிசம்பர், 2023

அதிகரிக்கும் டெங்கு தொற்று:மன்னாரில் பிராந்திய சுகாதார பணிப்பாளர் விடுத்துள்ள கோரிக்கை

மன்னாரில் கழிவகற்றல் செயன்முறை ஸ்தம்பிதம் அடைந்துள்ளமையினாலும் மழையுடனான காலநிலை நிலவி வருகின்றமையினாலும் டெங்கு அபாயம் அதிகரித்துள்ளதாகவும் எனவே பொதுமக்கள் அவதானமாக செயல்படுவதுடன் டெங்கு அறிகுறிகள் காணப்படும் பட்சத்தில் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெறுமாறு மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி. வினோதன் கோரிக்கை விடுத்துள்ளார். மன்னாரில் வைத்து இன்று (29) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவர் இவ்வாறு தெரிவித்தார்....

வியாழன், 28 டிசம்பர், 2023

கப்டன் விஜயகாந் உடல்நிலை குறைவு காரணமாக இன்று காலமானார்

 கப்டன் விஜயகாந் நடிகரும் அரசியல்வாதியுமானவர்.28-12.2023. இன்றைய தினம் காலமானார் உடல்நிலை குறைவு காரணமாக உயிரிழந்திருந்தமை மக்கள் மனதில் பெரும் துன்பமாய் அமைந்துள்ளது.தமிழ் திரையுலகில் முக்கியமானவர் விஜயகாந்த். அவர் ஒரு நடிகராகவும், அரசியல்வாதியாகவும் தனது பங்களிப்பிற்காக அறியப்படுகிறார். 1970களின் பிற்பகுதியில் தமிழ்த் திரையுலகில் தனது வாழ்க்கையைத் தொடங்கிய விஜயகாந்த், அதன்பிறகு ஏராளமான படங்களில் நடித்து, "கேப்டன் பிரபாகரன்" திரைப்படத்தில்...

புதன், 27 டிசம்பர், 2023

மயங்கி விழுந்த நிலையில் பண்டாரவளையில் தாதி ஒருவர் உயிரிழப்பு

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பணியாற்றிய தாதி ஒருவர் துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளார். பண்டாரவளை மகுலெல்ல பிரதேசத்தை சேர்ந்த 24 வயதான சதுனிகா சமரவீர என்ற தாதியே துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளார். விடுமுறைக்காக பண்டாரவளையில் உள்ள தனது வீட்டிற்குச் சென்றிருந்த அவர், அங்கு உல்லாசப் பயணமாகச் செல்லத் தயாரான நிலையில், திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து அவர் வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும்...

செவ்வாய், 26 டிசம்பர், 2023

போதனா வைத்தியசாலையில் பல்கலைகழக மாணவியின் மரணம் குறித்து சகோதரி தெரிவித்த தகவல்

தரமற்ற ஊசியை செலுத்தியதாலும் சரியான முறையில் சிகிச்சை வழங்காததினாலுமே தனது தங்கை உயிரிழந்துள்ளதாக உயிரிழந்த யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவியின் உடன் பிறந்த சகோதரி குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கலைப்பீட மாணவி குணரத்தினம் சுபீனா அவர்கள் உடல் சுகயீனம் காரணமாக தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேலதிக சிகிச்சைக்காக $அவர் யாழ்ப்பாணம் போதனை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட பின்னர் கடந்த 23 ஆம் திகதி இரவு...

திங்கள், 25 டிசம்பர், 2023

கொரோனா அச்சம் வடக்கில் இல்லை டெங்கின் தாக்கம் அதிகரித்ப்பு சுகாதார பணிப்பாளர் தகவல்

வடக்கில் கொரோனா அச்சம் இல்லை எனவும், ஆனால் டெங்கின் தாக்கம் அதிகரித்து செல்வதனால், டெங்கு தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என வடமாகாண சுகாதார சேவைகள் பதில் பணிப்பாளரும், யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளருமான த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.  அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், கொரோனா தொற்று எவையும் நீண்டகாலமாக வடமாகாணத்தில் பதிவாகவில்லை. ஆனால் அண்மைய நாட்களாக டெங்கு நோய் தொற்றுக்கு உள்ளாவோரின் எண்ணிக்கை அதிகரித்து செல்கின்றன.  தினமும்...

ஞாயிறு, 24 டிசம்பர், 2023

பல்கலைக்கழக மாணவி யாழ் போதனா வைத்தியசாலையில் மரணம் .

யாழ் பல்கலைக்கழக மாணவியொருவர் யாழ் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். குணரத்தினம் சுபீனா என்ற 25 வயது மதிக்கத்தக்க மாணவியே உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தில் இறுதியாண்டில் கல்வி கற்கும் குறித்த மாணவி காய்ச்சல் காரணமாக தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.  இந்நிலையில் குறித்த மாணவி சிகிச்சை பலனின்றி.23-12-2023....

சனி, 23 டிசம்பர், 2023

நிகழ்ந்த கார் விபத்தில் பிரான்சில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பலி

பிரான்சில் 22-12-2023.வெள்ளிக்கிழமை அன்று  இரவு பிரான்ஸ் Yvelinesல்  மாவட்டத்தில் இடம்பெற்ற வீதி விபத்து ஒன்றில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பலியாகியுள்ளனர். Bailly எனும் நகருக்கு அருகே ஊடறுத்துச் செல்லும் 307 இலக்க சாலையில் இந்த விபத்து 22-12-2023ஆம் திகதி இடம்பெற்றது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் Peugeot 206 மகிழுந்தில் பயணித்துக்கொண்டிருந்த நிலையில், திடீரென மகிழுந்து கட்டுப்பாட்டை இழந்து மற்றொரு மகிழுந்துடன்...

வெள்ளி, 22 டிசம்பர், 2023

நாட்டில் மாத்தளையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பெரிய வெங்காயம் கண்டுபிடிப்பு

நாட்டில் இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்தை களஞ்சியசாலைகளில் பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்வதாக கிடைத்த தகவல் தொடர்பில் நுகர்வோர் அதிகார சபை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இதேவேளை, மாத்தளை மாவட்ட நுகர்வோர் அதிகார சபை தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்துக்கு அருகில் அமைந்துள்ள தனியார் களஞ்சியசாலையொன்றை சோதனையிட்டதில் பாகிஸ்தான், இந்தியா, துருக்கி மற்றும் ஈரான் ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பெருந்தொகையான வெங்காயம்...

வியாழன், 21 டிசம்பர், 2023

கொழும்பு நீதிமன்றம் பேஸ்புக் நிறுவனத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது

கணினி இணையத்தை பயன்படுத்தி பௌத்த மதத்தை அவமதிக்கும் வகையில் பதிவுகள் இடப்பட்டுள்ள சமூக வலைத்தள கணக்குகள் குறித்த அனைத்துத் தகவல்களையும் வழங்குமாறு பேஸ்புக் நிறுவனத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைக்கு அனுமதியளித்து கொழும்பு மேலதிக நீதவான் டி. என். எல். இளங்கசிங்கவினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இணையத்தைப் பயன்படுத்தி 'புஸ் புத்தா',...

புதன், 20 டிசம்பர், 2023

இலங்கை மக்களுக்கு சுகாதாரத்துறை விடுத்துள்ள எச்சரிக்கை

நாட்டில் தற்போது டெங்கு, இன்புளுவன்சா மற்றும் பல வைரஸ் நோய்கள் பரவி வருவதால் பொது மக்களை அவதானமாக இருக்குமாறு ரிட்ஜ்வே மருத்துவமனையின் சுவாச நிபுணர் சன்ன டி சில்வா தெரிவித்துள்ளார்.இதனால், கொரோனா காலத்தில் பின்பற்றப்பட்ட சுகாதார பழக்கவழக்கங்களைக் மீண்டும் பின்பற்றுவதன் மூலம், வைரஸ் நோய் தொற்றுக்கள் பலவற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும் என குறிப்பிட்டுள்ளார்.தற்போது பரவி வரும் வைரஸ்கள், கொவிட் வைரஸ் குழுக்களா என்பதை உறுதிப்படுத்தும் சோதனைகள்...

செவ்வாய், 19 டிசம்பர், 2023

கிரிபத்கொடவில் அண்மையில் விடுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூடு பெண் உட்பட நால்வர் கைது

நாட்டில்  கிரிபத்கொடவில் உள்ள இரவு விடுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் பெண் ஒருவர் உட்பட நான்கு பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்டுள்ள யுவதி உட்பட நால்வரும் 20 மற்றும் 25 வயதுடைய ராகம மற்றும் முகத்துவாரம் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.களனி விசேட பணியகத்திற்கு கிடைத்த தகவலின் படி, ராகம பொலிஸாரினால் இந்த குழுவினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்ட போது அவர்களிடம் இருந்து 5,200 மில்லிகிராம்...

திங்கள், 18 டிசம்பர், 2023

கிளிநொச்சியில் இடைவிடாது தொடரும் மழையால் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்கள்

கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வரும் நிலையில் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சி அக்கரையான் செல்லும் பிரதான பாதையில் வீதியை குறுக்கரத்து வெள்ளம் பாய்வதினால் அப்பகுதியூடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.  அத்துடன் இரணைமடு குளத்தின் வான் கதவுகள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ள நிலையில் பெரியகுளம், கண்டாவளை, நாகேந்திரபுரம், முரசுமோட்டை, ஜயங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்....

ஞாயிறு, 17 டிசம்பர், 2023

நாட்டில் கல்முனையில் இடம்பெற்ற சிறுவர்களின் மரணம் தொடர்பில் தீவிர விசாரணை

 கல்முனை பிராந்தியத்தில் இரு சிறுவர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களினால் மரணங்களை எதிர்கொண்டனர்.  இதற்கமைய இவ்விரு மரணங்கள் தொடர்பில் கிழக்கு மாகாண சிரேஸ்ட பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி அஜித் ரோகண தலைமையில் விசாரணை முன்னேற்றம் தொடர்பில் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் ஆராயப்பட்டுள்ளது.  மேலும் கிழக்கு மாகாண சிரேஸ்ட பொலிஸ் மா அதிபரின் பணிப்புரைக்கமைய அம்பாறை பிரதி பொலிஸ் மா அதிபர் தமயந்த விஜய ஸ்ரீ உட்பட பொலிஸ் அத்தியட்சகர்...

சனி, 16 டிசம்பர், 2023

நாட்டில் விஜேராம மாவத்தையில் பெண் மரணம் பொலிஸார் விசாரணை

கொழும்பு, 07 விஜேராம மாவத்தையில் உள்ள வீடொன்றில் பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.குறித்த பெண் அந்த வீட்டில் தனியாக வசித்து வந்ததாக தெரியவந்துள்ளது. மித்ராணி பெர்னாண்டோ ஸ்மின் என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்த பெண்ணின் சடலம் அவர் வசித்த வீட்டின் மாடியில் கிடந்ததாகவும் அவரது வாய் மற்றும் மார்புப் பகுதியில் இரத்தக் கறை காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இது கொலையா அல்லது சாதாரண...

வெள்ளி, 15 டிசம்பர், 2023

முசாபர்கரில் குழந்தைகளை கொன்று சதையை உண்ட நபர் கைது

பஞ்சாபில் உள்ள முசாபர்கரில் குழந்தைகளை கொன்று அவர்களின் சதையை சாப்பிட்டதாக ஒருவரை பாகிஸ்தான் போலீசார் கைது செய்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.முசாபர்கரின் கான் கர் பகுதியில் இருந்து ஐந்து நாட்களுக்கு முன்பு மூன்று குழந்தைகள் கடத்தப்பட்டதாக உள்ளூர் காவல்துறை தெரிவித்துள்ளது. அந்த மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகளில் இருவரை கொடூரமாக கொன்று அவர்களின் இறைச்சியை சாப்பிட்டதாக கூறப்படுகிறது.எவ்வாறாயினும், உள்ளூர்வாசிகள் வழங்கிய தகவலின் பேரில்...

வியாழன், 14 டிசம்பர், 2023

கிளிநொச்சியில் உள்ள பிரபல உணவகத்திற்கு சீல் வைத்த சுகாதார பிரிவினர்

உணவுக்குள் இலையான் இருந்த காரணத்தினால் கிளிநொச்சியில் உள்ள உணவகம் ஒன்றிக்கு சுகாதார பிரிவினர் சீல் வைத்துள்ளனர். சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய குற்றச்சாட்டில் குறித்த உணவகத்திற்கு நீதிமன்ற உத்தரவுப்படி சுகாதார பிரிவினர் சீல்வைத்து பூட்டிள்ளனர். ஏ9 வீதி பரந்தனில் உள்ள பிரபல உணவகமே இவ்வாறு  13-12-2023.அன்று  சீல் வைத்து மூடப்பட்டது. சில தினங்களுக்கு முன்னர் உணவகத்தில் வழங்கிய உணவுக்குள் இலையான் இருந்துள்ளது. இது...

புதன், 13 டிசம்பர், 2023

உடுவிலை சேர்ந்த இளம் பெண் திருமணம் முடித்து ஒருவருடதில் உயிரிழப்பு

யாழில் திருமணமாகி ஒருவருடமே ஆன இளம் குடும்பப் பெண் ஒருவர்.13-12-2023. இன்று  உயிரிழந்துள்ளார். உடுவில் கற்பகப் பிள்ளையார் கோவிலடியைச் சேர்ந்த சண்முகநாதன் துசிந்தினி என்ற 26 வயதுடைய யுவதியே இவ்வாறு உயிரிழந்தார். குறித்த பெண்ணின் கணவர் புலம்பெயர் தேசத்தில் வசிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த யுவதி கடந்த 11ஆம் திகதி நோய்வாய்ப்பட்ட நிலையில்,  தெல்லிபாப்பா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். இந்நிலையில், மேலதிக...

இந்தியாவில் ரயில் பயணத்தின் போது இளம் வயது மருத்துவர் உயிரிழப்பு

இந்தியாவில் ரயில் பயணத்தின் போது இளம் வயது மருத்துவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானாவை சேர்ந்தவர் 26 வயதான மயங்க் அகர்வால். இவர் டெல்லியில் மருத்துவராக பணியாற்றி வந்தார். மயங்க் அண்மையில் மெட்ரோ ரயிலில் பயணித்தார். பயணத்தின் போது அவர் ரயிலிலேயே சரிந்து விழுந்தார். அருகிலிருந்தவர்கள் மயங்கை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் அவர் மாரடைப்பால் உயிரிழந்ததை மருத்துவர்கள்...

செவ்வாய், 12 டிசம்பர், 2023

நாட்டில் சமையல் எரிவாயுவின் விலையில் பாரிய அதிகரிப்பை எதிர்பார்க்கமுடியுமாம்

அடுத்த முறை மேற்கொள்ளப்படும் எரிவாயு விலைத்திருத்தத்தில் பாரிய அதிகரிப்பை எதிர்பார்க்க முடியும் என முன்னுரைக்கப்பட்டுள்ளது. அதாவது,  நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட VAT திருத்தச் சட்டத்தின் காரணமாக எரிவாயு விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.  எரிவாயுவுக்கு இதுவரை VAT வரி விதிக்கப்படவில்லை, ஆனால் நேற்று (11.12) முதல் எரிவாயு மீது VAT வரி விதிக்கப்பட்டுள்ளது.  அதன்படி, எரிவாயுவுக்கு அதிகபட்சமாக 18% விலை உயர்வை எதிர்பார்க்கலாம்...

திங்கள், 11 டிசம்பர், 2023

சுவிட்சர்லாந்தில் சியோனில் துப்பாக்கிச்சூடு : இருவர் பலி ஒருவர் காயம்

சுவிட்சர்லாந்தின் நகரமொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், மூன்றாவது நபர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இத்தாலி மற்றும் பிரெஞ்சு எல்லைகளுக்கு வெகு தொலைவில் உள்ள சுமார் 35,000 மக்கள் வசிக்கும் நகரமான சியோனில் இரண்டு வெவ்வேறு இடங்களில் சந்தேக நபர் பல துப்பாக்கிச் சூடு தாக்குதல்களை நடத்தியதாக பொலிஸார்  தெரிவித்துள்ளனர்.  அடையாளம் காணப்படாத ஆண் துப்பாக்கிதாரியை கைது செய்ய அதிகாரிகளை அனுப்பியுள்ளதாக...

அநுராதபுரம் போதனா வைத்தியசாலை மேல் தளத்தின் கூரையில் தொடர்ந்து தீ பரவல்

அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு சொந்தமான மெத்சிறி செவன கட்டிட வளாகத்தில் தீ பரவியுள்ளது.தீயை அணைக்க அநுராதபுரம் மாநகர சபையின் தீயணைப்பு பிரிவின் இரண்டு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.தீ விபத்து ஏற்பட்டதையடுத்து கட்டிட வளாகத்தில் இருந்த உள்நோயாளிகளை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.கட்டிடத்தின் மேல் தளத்தின் கூரையில் தொடர்ந்து தீ பரவி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. என்பது குறிப்பிடத்தக்கது   &nb...