யாழில் திருமணமாகி ஒருவருடமே ஆன இளம் குடும்பப் பெண் ஒருவர்
.13-12-2023. இன்று உயிரிழந்துள்ளார்.
உடுவில் கற்பகப் பிள்ளையார் கோவிலடியைச் சேர்ந்த சண்முகநாதன் துசிந்தினி என்ற 26 வயதுடைய யுவதியே இவ்வாறு
உயிரிழந்தார். குறித்த பெண்ணின் கணவர் புலம்பெயர் தேசத்தில் வசிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த யுவதி கடந்த 11ஆம் திகதி நோய்வாய்ப்பட்ட நிலையில், தெல்லிபாப்பா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
இந்நிலையில், மேலதிக சிகிச்சைக்காக 12-12-2023.அன்று யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அங்கு தொடர்ச்சியாக சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது..13-12-2023. இன்று சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இறப்புக்கான காரணம் தெரியவராத நிலையில், அவரது பிரேத பரிசோதனை மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பப்பட்டுள்ளன.
அத்துடன் மரணம் குறித்த விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஜெயபாலசிங்கம் மேற்கொண்டுள்ளார். குறித்த பெண்ணின் மரணம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.என்பதாகும்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக