siruppiddy

18

siruppiddy

unkal

unkal

ஞாயிறு, 17 டிசம்பர், 2023

நாட்டில் கல்முனையில் இடம்பெற்ற சிறுவர்களின் மரணம் தொடர்பில் தீவிர விசாரணை

 கல்முனை பிராந்தியத்தில் இரு சிறுவர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களினால் மரணங்களை 
எதிர்கொண்டனர்.  
இதற்கமைய இவ்விரு மரணங்கள் தொடர்பில் கிழக்கு மாகாண சிரேஸ்ட பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி அஜித் ரோகண தலைமையில் விசாரணை முன்னேற்றம் தொடர்பில் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் ஆராயப்பட்டுள்ளது.  
மேலும் கிழக்கு மாகாண சிரேஸ்ட பொலிஸ் மா அதிபரின் பணிப்புரைக்கமைய அம்பாறை பிரதி பொலிஸ் மா அதிபர் தமயந்த விஜய ஸ்ரீ உட்பட பொலிஸ் அத்தியட்சகர் ஜே.எச்.எம்.என் ஜயபத்ம கல்முனை 
உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரீ. எச். டி .எம் எல். புத்திக உட்பட மாவட்ட குற்றப்புலனாய்வு பிரிவு உயரதிகாரிகள் சம்பவ 
இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டு கிழக்கு மாகாண சிரேஸ்ட பொலிஸ் மா அதிபரிடம் பல்வேறு விசாரணை அறிக்கைகளை சமர்ப்பித்துள்ளனர்.  
மேலும் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவில் உள்ள இஸ்லாமபாத் பகுதியில் அமைந்துள்ள சிறுவர் பெண்கள் பராமரிப்பு நிலையத்தில் உயிரிழந்த சிறுவனின் மரணம் தொடர்பில் கல்முனை
 தலைமையக 
பொலிஸ் பெரும் குற்றப்புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரியும் பிரதம பொலிஸ் பரிசோதகருமான அலியார் றபீக் பல்வேறு குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரியும் பிரதம பொலிஸ் பரிசோதகருமான
 எம்.எல். அஜித் ரோகண விசாரணை முன்னெடுப்பு தொடர்பில் விளக்கமளித்தார். 
அத்துடன் அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது சந்தை வீதியில் அமைந்துள்ள 3 மாடி கட்டடம் ஒன்றில் நடாத்தப்படும் மத்ரஸாவில் கல்வி கற்று வந்த மாணவனின் மரணம் தொடர்பில் விசாரணைகளை 
முன்னெடுத்து வருகின்ற சாய்ந்தமருது பொலிஸ் 
பொறுப்பதிகாரி சம்சுதீன் தலைமையிலான 
அதிகாரிகள் விசாரணை முன்னெடுப்பு தொடர்பாக 
விளக்கமளித்துள்ளனர்.
 இவ்விரு மாணவர்களின் விசாரணை முன்னெடுப்புக்களை கவனமெடுத்த கிழக்கு மாகாண சிரேஸ்ட பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி அஜித் ரோகண மேலதிக புலன் விசாரணை மேற்கொள்வதற்காக ஆலோசனைகளை பொலிஸாருக்கு வழங்கியுள்ளமை என்பதும் குறிப்பிடத்தக்கது  





 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக