யாழ் பல்கலைக்கழக மாணவியொருவர் யாழ் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.
குணரத்தினம் சுபீனா என்ற 25 வயது மதிக்கத்தக்க மாணவியே உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தில் இறுதியாண்டில் கல்வி கற்கும் குறித்த மாணவி
காய்ச்சல் காரணமாக தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் குறித்த மாணவி சிகிச்சை பலனின்றி.23-12-2023. அன்றய தினம் உயிரிழந்துள்ளார். உயிரிழப்புக்கான காரணம் உடற்கூறு பரிசோதனைக்கு பின்னர் தெரியவரும் என காவல்துறையினர்
தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.என்பது குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக