siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வியாழன், 7 டிசம்பர், 2023

இலங்கையில் புற்றுநோயாளர்களுக்காக மக்கள் வழங்கிய பணத்தை கொள்ளையடித்தவர்கள் விளக்கமறியலில்

இலங்கையில் புற்றுநோயாளர்களுக்காக மக்கள் வழங்கிய பணத்தை கொள்ளையடித்த குற்றச்சாட்டிற்காக கைது செய்யப்பட்ட மூவர் வரும் 19 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். 
இந்த மோசடியில் ஈடுபட்ட பிரதான சந்தேகநபர் என அடையாளம் காணப்பட்ட ஆண் மற்றும் இரு பெண்களே மேற்படி  விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பு நீதவான்  பிரசன்ன அல்விஸ்  இன்று (07.12) இந்த  உத்தரவை பிறப்பித்துள்ளார்.
ஹலவத்த பிரதேசத்தில் வசிக்கும் புற்று நோயாளர் ஒருவருக்கு பெண் ஒருவர் அழைப்பு விடுத்து அவரது தகவல்களை பெற்றுக்கொண்டு இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
.என்பது குறிப்பிடத்தக்கது



இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

0 கருத்துகள்:

கருத்துரையிடுக