கனடாவுக்கு கல்வி கற்கச் சென்ற இந்திய இளைஞர் ஒருவர், ஏரி ஒன்றில் மூழ்கி பரிதாபமாக பலியாகிய விடயம் அவரது குடும்பத்தினரை மீளாத்துயரில் ஆழ்த்தியுள்ளது.
இந்தியாவின் தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவரான ப்ரனீத் என்னும் மாணவர், கனடாவில் கல்வி கற்பதற்காக சென்றுள்ளார்.
ப்ரனீத் தனது பிறந்தநாளைக் கொண்டாடிய நிலையில், ஞாயிற்றுக்கிழமை தன் நண்பர்கள் மற்றும் மூத்த சகோதரருடன் ரொரன்றோவிலுள்ள ஏரி ஒன்றிற்குச் சென்றுள்ளார் அவர்.
மற்றவர்கள் படகில் பயணிக்க, தான் மட்டும் நீந்தி வரப்போவதாக ப்ரனீத் தன் நண்பர்களுடன் பந்தயம் கட்டியதாக கூறப்படுகிறது. ஆனால், நீந்தும்போது பாதி வழியிலேயே நதியில் மூழ்கியுள்ளார் அவர்
அவருடன் சென்றவர்கள் அவரைக் காப்பாற்ற முயன்றும் முடியாமல் போயுள்ளது. மீட்புக்குழுவினரால் அவரது உயிரற்ற உடலைத்தான் மீட்க முடிந்துள்ளது.
தங்கள் இளைய மகன் உயிரிழந்த செய்தி அவரது பெற்றோருக்குக் கிடைக்க, கண்ணீரில் ஆழ்ந்துள்ளது அந்தக் குடும்பம். ப்ரனீத்தின் உடலை இந்தியா கொண்டு வருவதற்கான முயற்சிகள் துவக்கப்பட்டுள்ளன.
. என்பது குறிப்பிடத்தக்கது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக