siruppiddy

18

siruppiddy

unkal

unkal

செவ்வாய், 12 நவம்பர், 2024

மைதானம் ஒன்றுக்குள் சீனாவில் நுழைந்த கார் முப்பத்தி ஐந்து பேர் உயிரிழப்பு

சீனாவின் ஷுஹாய் நகரில் உள்ள மைதானம் ஒன்றின் முன் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த மக்கள் மீது கார் ஒன்று
 அதிவேகமாக சென்றதால் அங்கிருந்த 
ஏராளமானோர் உயிரிழந்தனர். 
இந்த சம்பவத்தில் 35 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 43 பேர் காயமடைந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் 
தெரிவித்துள்ளன. 
 உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களில் பெரியவர்கள், இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக 
தெரிவிக்கப்படுகின்றது. 
சந்தேகநபரை விவாகரத்து செய்ததன் பின்னர் ஏற்பட்ட சொத்து தீர்வின் போது ஏற்பட்ட பிரச்சினை தொடர்பான மன அழுத்தம் காரணமாகவே இந்த நபர் இவ்வாறு செய்துள்ளதாக தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 
 சந்தேக நபர் தற்போது கோமா நிலையில் உள்ளதாகவும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அதனால் அவரை விசாரிக்க கூட முடியவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
என்பது குறிப்பிடத்தக்கது.


திங்கள், 11 நவம்பர், 2024

நாட்டில் சுன்னாக சம்பவ த்தில் குற்றமிழைத்த பொலிஸார் பணியிடை நீக்கம்

யாழ் - சுன்னாகம் பகுதியில் பொலிஸாரின் அராஜக நடவடிக்கையால் குடும்பம் ஒன்று பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், குறித்த பொலிஸார் மீது சட்ட நடவடிக்கை 
எடுக்கப்பட்டுள்ளது. 
குற்றமிழைத்த  பொலிஸ் பரிசோதகர், பொலிஸ் சார்ஜன்ட் மற்றும் இரண்டு பொலிஸ் கான்ஸ்டபிள்கள்  பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் டிஐஜி சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், “ஒருவர் வாகனத்தை விபத்தை ஏற்படுத்திவிட்டு வாகனத்தை நிறுத்தாமல் 
தப்பிச் சென்றுள்ளார்.
அந்த நபரைக் கைது செய்யச் செல்லும் போது ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக பொலிஸ் உத்தியோகத்தர்களால் தாக்கப்பட்டதாக குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
அதன்படி விசாரணையின் பின்னர் இந்த 04 பொலிஸார் அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்” எனத் தெரிவித்துள்ளார்.
குறிப்பிடத்தக்கது என்பதாகும்


ஞாயிறு, 10 நவம்பர், 2024

சுன்னாகத்தில் பொலிஸாரின் அராஜக செயல் குழந்தை உள்பட குடும்பத்தினர் மீது தாக்குதல்

யாழ்ப்- சுன்னாகம் பகுதியில் பொலிஸாரின் அராஜக நடவடிக்கையால் குடும்பம் ஒன்று பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் 
வெளியாகியுள்ளன. 
குறித்த பகுதியில், 09-11-2024.அன்று  மாலை குடும்பத்தினர் பயணித்த வாகனம் ஒன்றை பொலிஸார் பயணித்த மோட்டார் சைக்களில் முந்தி செல்ல முற்பட்ட வேளை விபத்திற்குள்ளாகியுள்ளது. 
இதனையடுத்து பொலிஸார் குடும்பத்தினர் மீது மிலேச்சதனமாக தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. 
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் கூறுகையில், “நாங்கள் எமது வாகனத்தில் பயணிக்கையில், எங்களை முந்திச்சென்ற மோட்டார் சைக்கிள் கீழே விழுந்து விபத்துக்குளாகியது. 
மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் குடித்து விட்டு வாகனம் செலுத்தியதாகவும் அது எமது தவறில்லை எனவும் அருகில் இருந்தவர்கள் கூறினர்.
 அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார் எனது கணவரிடம் வாகன அனுமதிப்பத்திரத்தை கேட்டனர். போக்குவரத்து 
பொலிஸார் சம்பவ இடத்துக்கு வராததால் எனது கணவர் வாகன அனுமதி பத்திரத்தை கொடுக்கவில்லை.
 இதனையடுத்து, அவரை பொலிஸார் தாக்கினர். தடுக்க முற்பட்ட என்னையும் தாக்கினர். கீழே விழுந்த எனது 2 மாத குழந்தையை 
எடுத்து வீசினர். 
எனது சகோதரர்கள் மீதும் தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்துக்கு நீதி கிடைக்க வேண்டும். இது குறித்து ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.என்பது குறிப்பிடத்தக்கது





 

சனி, 9 நவம்பர், 2024

நாட்டில் மீகஹதென்ன பிரதேசத்தில் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து முச்சக்கரவண்டி லொறியுடன் மோதி விபத்து

மத்துகம - பெலவத்தை வீதியில் மீகஹதென்ன பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
இந்த விபத்து.09-11-2024, இன்று சனிக்கிழமை பிற்பகல் 
இடம்பெற்றுள்ளது.
சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கரவண்டி ஒன்று எதிர்த்திசையில் பயணித்த லொறி ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து 
இடம்பெற்றுள்ளது.
விபத்தின் போது முச்சக்கரவண்டியின் சாரதி படுகாயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
.என்பது குறிப்பிடத்தக்கது



வெள்ளி, 8 நவம்பர், 2024

நாட்டில் பன்னிரண்டுமணித்தியாலங்களுக்குள் எதிர்பார்க்கப்படும் பலத்த மழை

நாட்டில்  வடக்கு, மேல், மத்திய, ஊவா, சப்ரகமுவ மேல், சப்ரகமுவ, வட மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அடுத்த 12 மணித்தியாலங்களில் 150 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையில் இருந்து வீசக் கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும் என 
எதிர்பார்க்கப்படுகின்றது.
மாத்தறையில் இருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் காங்கேசந்துறையில் இருந்து மன்னார் ஊடாக புத்தளம் வரையான 
கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது 
மணித்தியாலத்துக்கு 60-65 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
திருகோணமலையில் இருந்து காங்கேசந்துறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் புத்தளத்தில் இருந்து
 கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை 
வரையான 
கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-55 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
பிரதான நகரங்களுக்கான வானிலை
 முன்னறிவித்தல்
அனுராதபுரம் - சிறிதளவில் மழை பெய்யும்
மட்டக்களப்பு - பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்
கொழும்பு - அவ்வப்போது மழைபெய்யும்
காலி - அவ்வப்போது 
மழை பெய்யும்
யாழ்ப்பாணம் - சிறிதளவில் மழை பெய்யும்
கண்டி - அடிக்கடி சிறிதளவில் மழை பெய்யும்
நுவரெலியா - அவ்வப்போது
 மழை பெய்யும்
இரத்தினபுரி - அவ்வப்போது மழை பெய்யும்
திருகோணமலை - பிரதானமாக சீரான வானிலை
மன்னார் - பிரதானமாக சீரான வானிலை
குறிப்பிடத்தக்கது என்பதாகும் 




 

வியாழன், 7 நவம்பர், 2024

நாட்டில் பல மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

இலங்கையில்  பல மாவட்டங்களுக்கு இன்று கடுமையான மின்னல் தாக்கம் ஏற்படுமென வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை 
விடுத்துள்ளது.
 இதன்படி, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் பல இடங்களில் கடுமையான மின்னலும் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
 இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் 
எச்சரித்துள்ளது.
 மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



புதன், 6 நவம்பர், 2024

நாட்டில் ஆபிரிக்க பன்றிக் காய்ச்சல் நிலைமை தொடர்பில் புதிய வர்த்தமானியை வெளியிட நடவடிக்கை

நாட்டில் ஆபிரிக்க பன்றிக் காய்ச்சல் நிலைமை காரணமாக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் விதிக்கப்பட்டிருந்த விதிகளை தளர்த்தி புதிய வர்த்தமானி அறிவித்தலை வெளியிட நடவடிக்கை 
எடுக்கப்பட்டுள்ளதாக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் 
தெரிவித்துள்ளது. 
 ஆரோக்கியமான விலங்குகளை கொண்டு செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமலி கொத்தலாவல தரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், "தொழில்துறையின் இருப்பு மற்றும் தற்போதைய நிலைக்கு 
ஏற்ப, இந்த
 வாரத்திற்குள் விரிவாக்கத்தில் சில குறைப்புக்கள் ஏற்பட்டுள்ளன. ஏனெனில் தொழில்துறையும் பாதுகாக்கப்பட வேண்டும். சில விஷயங்களில் வர்த்தமானியைத் தளர்த்தி வேறு வர்த்தமானியை 
வெளியிட்டோம். 
வர்த்தமானி அந்த வர்த்தமானியின் பிரகாரம் நவம்பர் 4 முதல் நடைமுறைக்கு வரும் வரை விலங்குகளை கொண்டு செல்ல முடியாது என்று நாங்கள் முன்னர் கூறியிருந்தோம். 
கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் துறையின் மாகாண அலுவலகத்தில் பதிவுசெய்யப்பட்ட இறைச்சிக் கூடங்களில், அங்கீகரிக்கப்பட்ட அதிகாரி மட்டுமே, இறைச்சியை சேமித்து வைக்கும் இறைச்சி 
கூடங்கள் மற்றும் இறைச்சி உணவகங்களில் விற்பனை செய்ய அனுமதிக்கப்பட வேண்டும். தொற்று இல்லை இந்த வர்த்தமானி மூலம் விற்பனையும் அனுமதிக்கப்பட்டுள்ளது." எனத் தெரிவித்துள்ளார். 
என்பது குறிப்பிடத்தக்கது 



செவ்வாய், 5 நவம்பர், 2024

அமரர் சிவப்பிரகாசம் தங்கம்மா அவர்களின் 22ம் ஆண்டு நினைவு நாள்



 யாழ். நவற்கிரி புத்தூரை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும்  கொண்ட அமரர்  சிவப்பிரகாசம்.தங்கம்மா அவர்களின் 22ம் ஆண்டு நினைவு நாள் 05-11-2024.இன்று இவர் நவற்கிரி எல்லாளன் விளையாட்டுக்கழகத்திற்காக மிகச்சிறந்த தொரு உதைபந்தாட்ட மைதானம் உருவாக்க 22 பரப்பு காணியினை நன்கொடையாக வழங்கிய  கொடைவள்ளல் ஆவர் எமது ஊரிலும் வறிய மக்களுக்கும் பணம் மற்றும் பொருள் தோட்ட்ங்களையும் பயிர் 
செய்கைக்காக வரிவழங்கியவரும்  பல்லாண்டு காலமாக எம் பெருமான் நவற்கிரி ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் 
 தலைவியாகும் இருந்து பாரிய தொண்டறியவரும் ஆவர் எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
அன்னாரின் .ஆத்மா சாந்தி அடைய 
இறைவனைப்பிராத்திக்கின்றோம் 
  ஓம் சாந்தி ! சாந்தி  சாந்தி!!!
தகவல்
குடும்பத்தினர்.




 

திங்கள், 4 நவம்பர், 2024

நாட்டில் பொல்கொடவில் பேருந்தும் முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்து: யுவதி காயம்

நாட்டில் பாணந்துறை - ஹொரனை பிரதான வீதியில் பொல்கொட பிரதேசத்தில் பேருந்தொன்றும் முச்சக்கரவண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் 25 வயதுடைய யுவதியொருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்து.04-11-2024. இன்று திங்கட்கிழமை  காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முச்சக்கரவண்டியில் பயணித்த யுவதியே இவ்வாறு காயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறிப்பிடத்தக்கது  என்பதாகும் 





 

ஞாயிறு, 3 நவம்பர், 2024

நாட்டில் ஹந்தபானாகல பிரதேசத்தில் மது போதையில் தாயையும் சகோதரியையும் தாக்கி காயப்படுத்திய மகன் கைது

நாட்டில் வெல்லவாய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹந்தபானாகல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் மது போதையில் தனது தாயையும், சகோதரியையும் கூரிய ஆயுதத்தால் தாக்கி 
காயப்படுத்தியதாகக் கூறப்படும் மகன் கைது செய்யப்பட்டுள்ளதாக வெல்லவாய பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
காயமடைந்த சகோதரி பொலன்னறுவை பிரதேசத்தில் வசித்து வந்துள்ள நிலையில் வெல்லவாய, ஹந்தபானாகல பிரதேசத்தில் உள்ள தனது தாயின் வீட்டிற்குச் சென்றுள்ளார்.
இதன்போது, சந்தேக நபர் மது போதையில் வீட்டிற்குச் சென்றுள்ள நிலையில் தனது சகோதரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
வாக்குவாதம் எல்லை மீறியதால் கோபமடைந்த சந்தேக நபர், வீட்டிலிருந்த கூரிய ஆயுதம் ஒன்றை பயன்படுத்தி தனது சகோதரியை பலமாக தாக்கியுள்ளார்.
இதனை அவதானித்த தாய், சந்தேக நபரான தனது மகனைத் தடுக்க முயன்ற போது சந்தேக நபர் தனது தாயையும் கூரிய ஆயுதத்தால் தாக்கி காயப்படுத்தியுள்ளார்.
பின்னர், காயமடைந்தவர்கள் வெல்லவாய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் தாய் மேலதிக சிகிச்சைக்காகக் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
இதனையடுத்து, சந்தேக நபரான மகன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லவாய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.என்பது குறிப்பிடத்தக்கது.






 

சனி, 2 நவம்பர், 2024

தவறியும் மழைக்காலத்தில் காளான் சாப்பிடாதீங்க ஏன் தெரியுமா

கோடை காலத்தின் பின்னர் அதன் வெப்பத்தை தணிக்க மழை காலம் வரகிறது. இந்த காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக 
இருப்பவாகளுக்கு நோய் தொற்றும். எப்போதம் போல மழைக்காலத்தில் உணவுகளை உட்கொள்ள முடியாது. இந்த பருவத்தில் பல வகையான பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுவது ஆரோக்கியத்தில் மோசமான விளைவை
 ஏற்படுத்தும்.
இந்த பருவத்தில் ஃபுட் பாய்சன் முதல் வயிற்றுப்போக்கு 
மற்றும் காய்ச்சல் வரை என பல உடல் நலப் பிரச்சினைகளை சந்திக்க
 நேரிடும். அதே போல தான் இந்த மழைக்காலத்தில் காளான் சாப்பிட கூடாது என கூறுவார்கள். அது தெற்காக என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
காளானில் பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இதில் அதிகளவில் வைட்டமின் டி காணப்படுகின்றது. இது எலும்புகளுக்கு மிகவும் நல்லது. இதில் வைட்டமின் பி யும் உள்ளது.
இதை நோய் எதிர்ப்பு மண்டலத்திற்கு நல்லதாக கருதப்படுகிறது. இது தவிர காளான் பொட்டாசியம் நார்ச்சத்து, புரதம் மற்றும் 
ஆக்ஸிஜனேற்றத்தின் மூலமாகும். இதை மழைக்காலத்தில் சாப்பிட கூடாது 
என்பதற்கான காரணம் விஞ்ஞான ரீதியாக
 கூறப்பட்டுள்ளது.
காளான் ஈரமான மண்ணில் தான் வளரும். இந்த பருவத்தில் ஏற்கனவே மழை பெய்யும் போது பாக்டீரியாக்களின் இனப்பெருக்கம் மண்ணில் அதிகம் காணப்படும். இவை காளானுக்குள் செல்கின்றன.
இந்த நிலையில் காளானை சாப்பிடும் நபர் நோய்வாய்ப்படுவதற்கான வாய்ப்புகள் பன்மடங்கு அதிகம் உள்ளன. இதன் காரணமாக தான் மழைக்காலத்தில் காளான் சாப்பிட வேண்டாம் என்று சொல்லப்படுகின்றது.
என்பது குறிப்பிடத்தக்கது 



வெள்ளி, 1 நவம்பர், 2024

கத்தொருவ பிரதேசத்தில் காட்டு யானைகளைப் புகைப்படம் எடுக்க முயன்ற மூவர் காட்டு யானை தாக்கி காயம்

நாட்டில்  கல்கமுவ - எஹெடுவெவ பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட கத்தொருவ பிரதேசத்தில் காட்டு யானைகளைப் புகைப்படம் எடுக்க முயன்ற மூவர் காட்டு யானை தாக்கி காயமடைந்துள்ளனர்.
இந்த சம்பவம் 31-10-2024.வியாழக்கிழமை அன்று  மாலை 
இடம்பெற்றுள்ளது.
அநுராதபுரம் - திரப்பனை மற்றும் கத்தொருவ ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் யுவதி ஒருவரும் இரு இளைஞர்களுமே
 காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் மீகலேவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.என்பதாகும்-