துயர் பகிர்வு-தோற்றம் 00-00--மறைவு-13-09-2026
யாழ் ஆவரங்கால் 10ம் கட்டையை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட எமது பாடசாலையின் பழைய மாணவியுமான அமரர் சுப்பிரமணியம் இராசமணி(முத்தம்மா) அவர்கள் 13.09.26 ஞாயிறு அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற சின்னத்தம்பி தம்பதியின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற கந்தையா தம்பதியின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சுப்பிரமணியம் (சுப்பண்ணை) அவர்களின்
அன்பு மனைவியும்,
பழைய மாணவர்களான ரஞ்சினி ( ரஞ்சி - கனடா) சாந்தினி, ரவீந்திரன் ( ரவி - இலண்டன்) , சுபாஜினி, காலஞ்சென்ற மகேந்திரன் (இந்திரன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
இராசம்மா, கனகரத்தினம், இராமலிங்கம், சுப்பிரமணியம் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை 16-09-2026 புதன்கிழமை காலை 7.00மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று சுமார் காலை 10 மணியளவில் அன்னாரின் பூதவுடல் தகனக்கிரியைக்காக ஆவரங்கால் கரதடி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை இணையங்களின்
கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
துயருறும் குடும்பத்தினருக்கு
ஆழ்ந்த அனுதாபங்களை
தெரிவித்து கொள்ளுகின்றோம்
தொடர்புகளுக்கு
ரவி (மகன்- இலண்டன்)
00447947 227002
https://navakkiri.blogspot.com/2026/09/140926.html








0 கருத்துகள்:
கருத்துரையிடுக