siruppiddy

18

siruppiddy

unkal

unkal

சனி, 3 அக்டோபர், 2026

மரண அறிவித்தல், பழ.நெடுமாறனின் மகன் மாணிக்கம் நெடுமாறன் காலமானார்

 

உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறனின் மகன் மாணிக்கம் நெடுமாறன் (57) அவுஸ்திரேலியாவில் காலமானார்.
இளம் வயதிலேயே உலக வாழ்க்கையைத் துறந்து பௌத்த மதத்தைத் தழுவிய மாணிக்கம் நெடுமாறன், அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ண் நகரில் பௌத்த துறவியாக வாழ்ந்து வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில காலமாக கடுமையான புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர், மெல்பேர்ணில் உள்ள வைத்தியசாலையில் சிகிச்சை
 பெற்று வந்தார். 
தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி நேற்று வெள்ளிக்கிழமை காலை இலங்கை நேரப்படி 8.45 மணியளவில் அவர் உயிரிழந்ததாக உலகத் தமிழர் பேரமைப்பு 
தெரிவித்துள்ளது. 
மாணிக்கம் நெடுமாறனின் இறுதிச்சடங்குகள் பௌத்த மத வழக்கப்படி மெல்பேர்ணிலேயே நடைபெறவுள்ளதாக 
தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகனின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக பழ.நெடுமாறனும் அவரது மனைவியும் அவுஸ்திரேலியா செல்ல தீர்மானித்திருந்ததாகவும், எனினும் பழ.நெடுமாறனின் கடவுச்சீட்டு முடக்கப்பட்டுள்ளதால் இருவராலும் இறுதிச்சடங்கில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் உலகத் தமிழர் பேரமைப்பு தெரிவித்துள்ளது.
மகனின் இறுதிச்சடங்கில் கூட நேரில் பங்கேற்க முடியாத நிலை குடும்பத்தினருக்கு பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
மாணிக்கம் நெடுமாறனின் மறைவு செய்தியைத் தொடர்ந்து தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகள் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் , நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும். 
அன்னாரின் இறுதிக் கிரிகைகள் பற்றிய விபரம் பின்னர் அறியதரப்படும். 
மது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம்
ஓம் சாந்தி சாந்தி சாந்தி 
தகவல்: குடும்பத்தினர்

https://navakkiri.blogspot.com/2026/09/blog-post_29.html


0 கருத்துகள்:

கருத்துரையிடுக