siruppiddy

18

siruppiddy

unkal

unkal

புதன், 7 அக்டோபர், 2026

நாட்டில் பகிடிவதை காரணமாக பதிஓரு மாணவர்கள் நிரந்தரமாக நீக்கம்


நாட்டில் சபரகமுவ பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற கடுமையான பகிடிவதை காரணமாக 23 வயதான மாணவர் சரித் திலீஷான் உயிரிழந்த 
சம்பவத்தை அடுத்து, தொடர்புடைய 11 மாணவர்களைப் பல்கலைக்கழகத்திலிருந்து நிரந்தரமாக நீக்க நிர்வாக 
சபை தீர்மானித்துள்ளது.
சம்பவம் தொடர்பான ஒழுக்காற்று விசாரணை 
அறிக்கை கடந்த வாரம் வெளியான நிலையில், பகிடிவதை மற்றும் கடுமையான ஒழுக்காற்று விதிமீறல்களில் ஈடுபட்டமை உறுதி செய்யப்பட்டதால் இவர்களின் பல்கலைக்கழகப் பதிவு நிரந்தரமாக இரத்து 
செய்யப்பட்டுள்ளது.
 மேலும், துணைவேந்தரின் எழுத்துமூல அனுமதியின்றி இவர்கள் பல்கலைக்கழக வளாகம் மற்றும் விடுதிகள் உட்பட எந்தவொரு பகுதிக்குள்ளும் நுழைவதற்கு முழுமையான தடையும்
 விதிக்கப்பட்டுள்ளது.
 சபரகமுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தின் இரண்டாம் ஆண்டில் பயின்று வந்த மாணவர் சரித் திலீஷான், கடந்த 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதி தனது வீட்டில் உயிரிழந்த நிலையில் 
மீட்கப்பட்டார்.
பெற்றோரின் குற்றச்சாட்டு: பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட கொடூரமான பகிடிவதை, உடல் மற்றும் உள ரீதியான சித்திரவதைகளைத் தாங்க முடியாமலேயே தனது மகன் தற்கொலை முடிவை எடுத்ததாக அவரது பெற்றோர் குற்றம் 
சுமத்தியிருந்தனர்.
சட்ட நடவடிக்கைகள்: இச்சம்பவம் தொடர்பாக காவல்துறை மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் 14 மாணவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது..என்பதும்  குறிப்பிடத்தக்கது

https://navatkirinew1.blogspot.com/2024/12/blog-post_7.html  


0 கருத்துகள்:

கருத்துரையிடுக