siruppiddy

18

siruppiddy

unkal

unkal

சனி, 10 டிசம்பர், 2016

உந்துருளி ஒன்று புகையிரதத்துடன் மோதுண்டு ஒரு பெண் பலி !

பாதுக்க – லியன்வல புகையிரத குறுக்கு வீதியில் உந்துருளி ஒன்று புகையிரதத்துடன் மோதுண்டு 48 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கொழும்பில் இருந்த அவிசாவளை நோக்கி பயணித்து கொண்டிருந்த புகையிரதத்துடன், உந்துருளி மோதுண்டுள்ளதாக காவற்துறை 
தெரிவித்தது.
இந்நிலையில் உந்துருளியின் சாரதி படுகாயமடைந்துள்ள நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு
 வருகின்றனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



ஞாயிறு, 4 டிசம்பர், 2016

அறிமுகம் செய்தது மற்றுமொரு வசதியினை யூடியூப் !

காணொளிகளை  ஒன்லைனில் பகிர்ந்துகொள்ளும் வசதியினை தரும் யூடியூப் தளமானது பல வசதிகளையும் பயனர்களுக்கு தருகின்றது.
இவற்றில் நேரடி ஒளிபரப்பினை செய்யும் வசதியும் பிரதானமாகக் காணப்படுகின்றது.
தற்போது இவ் வசதியில் 4K காணொளிகளை  நேரடி ஒளிபரப்பு செய்யக்கூடிய வகையில் மாற்றத்தினை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வசதி 360 டிகிரி வீடியோக்களுக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை காலமும் 4K காணொளிகளை  பதிவேற்றும் வசதி தரப்பட்டிருந்த நிலையில் நேரடி ஒளிபரப்பிற்கு 4K வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளமை பலத்த வரவேற்பைப் பெற்றுவருகின்றது.
இவ் வசதியானது கடந்த டிசம்பர் முதலாம் திகதியிலிருந்து அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
செக்கனுக்கு 60 பிரேம்கள் கொண்ட இந்த காணொளிகளை தொழில்நுட்பத்தின் உதவியுடன் இனிமேல் உயர்தரம் கொண்ட நேரடி ஒளிபரப்புக்களை கண்டுமகிழ முடியும்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



பூநகரியில் வெட்டி எரித்து புதைக்கப்பட்ட சடலம் மீட்பு!


கிளிநொச்சி – பூநகரி, வாடியடி பிரதேசத்தை அண்மித்த பகுதியில் துண்டுதுண்டாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்ட நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
பூநகரியைச் சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையான 62 வயதுடைய கந்தையா சபாரத்தினம் என்ற விவ சாயியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 
வவுனியா – குருமன்காடு பகுதியில் வசித்துவரும் பூநகரியைச் சொந்த இடமாகக் கொண்ட கந்தையா சபா ரத்தினம் என்ற விவசாயி, கடந்த 28 ஆம் திகதி முதல் காணாமல் போயிருந்தார்.
இந்நிலையில் பூநகரிக்கு சென்ற நிலையில் தனது கணவன் காணாமல் போயுள்ளதாக அவரது மனை வியால் பூநகரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டிருந்தது.
இதனையடுத்து சம்பவம் தொடர்பில் பூநகரி பொலிஸார் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் பிர காரம், துண்டுதுண்டாக வெட்டிக் கொலை செய்யப்பட்டு எரியூட்டப்பட்ட பின்னர் குழியொன்றில் புதை க்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இதேவேளை இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் கனேடிய குடியுரிமை உள்ள பூநகரியைச் சேர்ந்த சந்தேக நபர் ஒருவர் இந்தியாவுக்கு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் 
தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் மீட்கப்பட்ட சடலம் குறித்த விசாரணை கிளிநொச்சி நீதிமன்ற பதில் நீதவான் எஸ். சிவ பால சுப்பிரமணியம் முன்னிலையில் இடம்பெற்றதைத் தொடர்ந்து, சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளி நொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு 
எடுத்துச் செல்லப்படவுள்ளது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பூநகரி பொலிஸாருடன் இணைந்து கிளிநொச்சி குற்றத் தடயவியல் பொலிசார் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

சனி, 3 டிசம்பர், 2016

கொழும்பு தெஹிவளை ஆஞ்சநேயர் ஆலயத்தில் நடக்கும் அதிர்ச்சி சம்பவங்கள்

ஆரம்ப காலம் முதல் மனித சமூகம் இறைவழிபாட்டை தலையாய கடமையாக கடைபிடித்து வருகின்றனர். அதன் வழியில் வந்த இன்றைய சந்ததியினரும் அதனை கடைபிடித்து 
வருகின்றனர்.
வாழ்கையை நெறிப்படுத்தும் வகையிலான சிறந்த வழிகாட்டல்களையும் , சிறந்த பயணத்தையும் கொண்டமைந்த இந்து மதத்தில் பல வழிபாட்டு முறைகள் காணப்படுகின்றன.
ஆகம மற்றும் கிராமிய முறையிலான வழிபாட்டுமுறைகள் இவ்வாறு பின்பற்றப்பட்டு வருகின்றது. எனினும், நாகரிகம் என்னும் பெயரில் உலகமே ஒரு மாறுபட்ட கோணத்தில் சென்றுகொண்டிருக்க, மத கொள்கைகள் மதிப்பற்றதாக பரிணமித்துவிட்டது .
இன்று நவீனம், கணினிமயமாக்கம் என ஓடிக்கொண்டிருக்கும் எம்மவர் மத்தியில் சடங்குகள், மாந்திரீகம், பரிகாரம் என்னும் நிலைப்பாட்டில் ஒரு தரப்பினர் இருக்கத்தான்
 செய்கின்றனர்.
இவ்வாறான மதச் சடங்குகள், பரிகாரம் போன்ற நிகழ்வுகள் கொழும்பு தெஹிவளை ஸ்ரீ ஆஞ்சநேயர் ஆலயத்தில் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

புதன், 30 நவம்பர், 2016

மரண அறிவித்தல் அமரர் முத்துக்குமாரு ஆறுமுகசாமி :28:01:16

மலர்வு:12:ஜனவரி:1942: உதிர்வு : 28 நவம்பர்: 2016
யாழ். மறவன்புலவு கோவிலாக்கண்டி தச்சன்தோப்பைப்பிறப்பிடமாகவும், அச்சுவேலி தோப்பை வதிவிடமாகவும், ஜெர்மனி Böblingen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட முத்துக்குமாரு ஆறுமுகசாமி (இப்பாறிய  யாழ் ஈழநாடு பத்திரிகை  உத்தியோகத்தர்)  அவர்கள் 28-11-2016 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற முத்துக்குமாரு, கண்ணம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தம்பு, சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சின்னம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
மலர்வதனா, சந்திரவதனா, மதனராசா, சந்திரராசா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான கந்தையா, சிதம்பரம்(பூரணம்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்.
மகேந்திரராசா, சுந்தரராசா, கனிஷ்ர, சுகந்தினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சத்தியா, சிந்து, சோபி, கேதுயன், துசான், ஷாளினி, சந்துறு, சமீறா ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான தங்கமுத்து, துரைராசா, வேலுப்பிள்ளை, ஆறுமுகம், அன்னம்மா, நாகலிங்கம், மற்றும் செல்லத்துரை, முத்துப்பிள்ளை(பாலம்மா), அன்னப்பிள்ளை, சரஸ்வதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான நன்னித்தம்பி, ஐயாத்துரை, ராசமணி, தம்பிஐயா, நேசமலர், மற்றும் தவமணி, தெய்வநாயகி, வ. செல்லத்துரை ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 05-12-2016 திங்கட்கிழமை அன்று மு.ப 08:30 மணிமுதல் 11:30 மணிவரை Waldfriedhof, Maurerner weg-130, 71034 Böblingen, Germany எனும் முகவரியில் நடைபெற்று தொடர்ந்து மு.ப 11:30 மணிமுதல் 02:00 மணிவரை அனுதாப உரை நிகழ்த்தப்படும் அதற்கு பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம்
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ஆறுமுகசாமி சின்னம்மா — ஜெர்மனி
தொலைபேசி: +497031224307
மகேந்திராசா மலர்வதனா — ஜெர்மனி
தொலைபேசி: +4915221698480
சுந்தரராசா சந்திரவதனா — ஜெர்மனி
தொலைபேசி: +491739101091
மதனராசா கனிஷ்ர — கனடா
தொலைபேசி: +14169935082
சந்திரராசா சுகந்தினி — ஜெர்மனி
தொலைபேசி: +491775715939
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



முதல் முறையாக இலங்கை வரலாற்றில் அமெரிக்கா டொலரின் 151 ரூபாக்குமேல்?

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக அமெரிக்கா டொலரின் பெறுமதி நேற்றைய தினம் 151 ரூபாவை கடந்துள்ளதாக 
தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள புதிய நாணய மாற்று விகித மதிப்புகளில் இந்த விடயம்
 குறிப்பிடப்பட்டுள்ளது.
அதற்கமைய அமெரிக்கா டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 151.07 ரூபாய் என குறிப்பிடப்பட்டுள்ளது.
நேற்று முன் தினம் அமெரிக்கா டொலர் ஒன்றின் பெறுமதி 150.59 ரூபாவாக காணப்பட்டது.
இதனால் தொடர்ந்து ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைகின்றமையினால் இலங்கைக்கு கொண்டு வரும் அனைத்து பொருட்கள் மற்றும் சேவை விலைகள் உயர்வடைவதாக
 சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



செவ்வாய், 29 நவம்பர், 2016

பாரிய விபத்து முறிகண்டியில் 14 பேர் வைத்தியசாலையில் அனுமதி

முறிகண்டியில் இடம்பெற்ற இவ் வீதி விபத்தில் 14 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும்
 தெரியவருவதாவது,
அக்கரைப்பற்றில் இருந்து  யாழ். நோக்கிச் சென்று  கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தை மல்லாவியில் இருந்து கீரிமலை சென்றுகொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்று இன்று காலை ஏழு மணியளவில்  கிளிநொச்சி அறிவியல் நகர்ப் பகுதியில் வைத்து முந்திச்செல்ல எத்தனித்த  வேளையே  இவ் விபத்து 
இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்தில் தனியார் பேருந்தில்  பயணித்துக் கொண்டிருந்த  பத்து  ஆண்கள் மற்றும் நான்கு பெண்கள் அடங்கலாக பதின்நான்கு பேர் படுகாயமடைந்த  நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் இருவர் அவசர சிகிச்சைப்  பிரிவில்  அனுமதிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
குறித்த விபத்துத் தொடர்பான மேலதிக விசாரணைகளை  மாங்குளம் பொலிஸார் மேற்கொண்டு 
வருகின்றனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



திங்கள், 28 நவம்பர், 2016

மரண அறிவித்தல் அமரர் முத்துக்குமாரு ஆறுமுகசாமி:28:11:16

 மலர்வு:12:ஜனவரி:1942: உதிர்வு : 28 நவம்பர்: 2016
யாழ். மறவன்புலவு கோவிலாக்கண்டி தச்சன்தோப்பைப்பிறப்பிடமாகவும், அச்சுவேலி தோப்பை வதிவிடமாகவும், ஜெர்மனி Böblingen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட முத்துக்குமாரு ஆறுமுகசாமி (இப்பாறிய  யாழ் ஈழநாடு பத்திரிகை  உத்தியோகத்தர்)  அவர்கள் 28-11-2016 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற முத்துக்குமாரு, கண்ணம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தம்பு, சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சின்னம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
மலர்வதனா, சந்திரவதனா, மதனராசா, சந்திரராசா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான கந்தையா, சிதம்பரம்(பூரணம்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்.
மகேந்திரராசா, சுந்தரராசா, கனிஷ்ர, சுகந்தினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சத்தியா, சிந்து, சோபி, கேதுயன், துசான், ஷாளினி, சந்துறு, சமீறா ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான தங்கமுத்து, துரைராசா, வேலுப்பிள்ளை, ஆறுமுகம், அன்னம்மா, நாகலிங்கம், மற்றும் செல்லத்துரை, முத்துப்பிள்ளை(பாலம்மா), அன்னப்பிள்ளை, சரஸ்வதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான நன்னித்தம்பி, ஐயாத்துரை, ராசமணி, தம்பிஐயா, நேசமலர், மற்றும் தவமணி, தெய்வநாயகி, வ. செல்லத்துரை ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 05-12-2016 திங்கட்கிழமை அன்று மு.ப 08:30 மணிமுதல் 11:30 மணிவரை Waldfriedhof, Maurerner weg-130, 71034 Böblingen, Germany எனும் முகவரியில் நடைபெற்று தொடர்ந்து மு.ப 11:30 மணிமுதல் 02:00 மணிவரை அனுதாப உரை நிகழ்த்தப்படும் அதற்கு பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம்
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ஆறுமுகசாமி சின்னம்மா — ஜெர்மனி
தொலைபேசி: +497031224307
மகேந்திராசா மலர்வதனா — ஜெர்மனி
தொலைபேசி: +4915221698480
சுந்தரராசா சந்திரவதனா — ஜெர்மனி
தொலைபேசி: +491739101091
மதனராசா கனிஷ்ர — கனடா
தொலைபேசி: +14169935082
சந்திரராசா சுகந்தினி — ஜெர்மனி
தொலைபேசி: +491775715939
 தொர்புகளுக்கு தொலைபேசிஇலக்கம்  
00497031224307 மருமகன் சுந்தரராஜா (யேர்மன்: Böblingen)

செவ்வாய், 22 நவம்பர், 2016

யாழ் நகரை அண்டிய பகுதிகள் தொடர் மழையால் நீரில் மூழ்கியுள்ள!

யாழ்ப்பாணத்தில் கடந்த சில நாட்களாகப் பெய்துவரும் பருவ மழையைத் தொடர்ந்து வழக்கம்போல யாழ்.நகரை அண்டிய வசந்தபுரம், நித்தியவெளி, சூரியவெளி மற்றும் பொம்மைவெளி உள்ளிட்ட பகுதிகள் வெள்ளத்தில் மூழ்க ஆரம்பித்துள்ளன.
மழை வெள்ளம் இப்பகுதியில் உள்ள வீடுகளுக்குள் புகுந்துள்ளதால் பலர் இடம்பெயர்ந்துள்ளதுடன், மேலும் பலர் தங்க இடம் அற்ற நிலையில் மழை வெள்ளத்துக்கு மத்தியில் பெரும் இன்னல்களை எதிர்கொண்டு 
வருகின்றனர்.
வருடந்தோரும் பருவ மழை ஆரம்பித்ததும் இவ்வாறான இடங்கள் மழை வெள்ளத்தில் மூழ்குவது வாடிக்கையாகிவிட்ட போதும் இதற்கான நிரந்தரத் தீர்வுகாணப்படவோ அல்லது இங்கு குடியிருக்கும் மக்களுக்காக நிரந்தர மாற்று வீடுகளுகளுக்கான ஏற்பாடுகளோ
 மேற்கொள்ளப்படவில்லை.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

வெள்ளி, 18 நவம்பர், 2016

மகிழ்ச்சியான செய்தியை இலங்கை அகதிகளுக்கு 'UNHCR' கொடுத்துள்ளது ?

இலங்கை அகதிகள் 26,615 பேருக்கு மலேசியாவில் தங்கியிருப்பதற்கு ஐ.நா முகவர் அமைப்பு (UNHCR) அங்கீகாரம் அளித்திருப்பதாக மலேசிய அரசாங்கம் அறிவித்துள்ளது.
மலேசிய பிரதமர் செயலக அமைச்சர் டருக் சேரி சஹிடான் காசிம் இந்த தகவலை வெளியிட்டுள்ளார் என ஊடகம் ஒன்று செய்தி 
வெளியிட்டுள்ளது.
2010ஆம் ஆண்டு தொடக்கம், 2016ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரையான காலத்தில் உலகம் முழுவதிலும் இருந்து 888,294 அகதிகள் மலேசியாவில் தங்கியிருப்பதற்காக விண்ணப்பித்துள்ளார்கள்.
இவர்களில் 824,419 பேர் மியான்மாரைச் சேர்ந்த அகதிகளாவர். மியான்மாரை அடுத்து, இலங்கை அகதிகளுக்கே அதிகளவில் புகலிடம்
 அளிக்கப்பட்டுள்ளது.
இந்தக் காலப்பகுதியில், இலங்கையைச் சேர்ந்த 26,615 அகதிகளுக்கு மலேசியாவில் தங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதையடுத்து சோமாலியா, பாகிஸ்தான், ஈராக் மற்றும் ஏனைய நாடுகளின் அகதிகளுக்கும் மலேசியாவில் தங்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

வியாழன், 17 நவம்பர், 2016

செல்வி அர்ச்சனா செல்லத்துரை டென்மார்க் நாட்டின்விமானியானர்

டென்மார்க் நாட்டின் முதலாவது தமிழ்ப் பெண் துணை விமானியான இலங்கையைச் சேர்ந்த தமிழ்ப்பெண்ணான அர்ச்சனா செல்லத்துரை பயணிகளுடனான முதல் பயணம் குறித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் தனது பேஸ் புக் பக்கத்தில் பதிவொன்றை இட்டுள்ள அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். கனவு மெய்ப்பட்டது.
முதன்மை அதிகாரி எனும் பதிவியுடன் முதல் நாளில் பயணிகளுடன் முதல் பணி. நமது லட்சியத்தை நாம் அடையும்போது கிட்டும் மகிழ்ச்சிக்கு மாற்றே கிடையாது.
பயங்கள் எப்போதும் கடுமையாகவே இருந்தது. இந்த எல்லையை தொடுவதற்கு எனது வாழ்க்கையில் பலவற்றை நான் இழந்திருக்கிறேன்.
நண்பர்கள் விட்டகன்றனர், ஆண்டுகள் பல மறைந்தன, குடும்பத்துடன் செலவிட்ட காலங்கள் மறைந்தன, இளமையும்
 மறைந்துள்ளது.
பல முறை நனையும் கண்களை நானே துடைத்துக்கொள்ள நேர்ந்தது. இருப்பினும் நான் மகிழ்கிறேன், இதுபோன்று எனது வாழ்க்கையில் எப்போதும் நான் மகிழ்ச்சியாக இருந்ததில்லை என 
அவர் குறிப்பிட்டுள்ளார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>




புதன், 16 நவம்பர், 2016

ஈழத்தமிழர்களை அமெரிக்கா ஏற்றுக்கொள்ளும் என அறிவித்துள்ளது !

இலங்கையில் இருந்து அகதியாக புலம்பெயர்ந்து பப்புவா நியுகினி மற்றும் நவுறு போன்ற தீவுகளில் உள்ள இலங்கை உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த நியாயமான அகதிகளை அமெரிக்கா ஏற்றுக்கொள்ளும் என அந்நாடு அறிவித்துள்ளது.
இது குறித்து அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரி 
கருத்து வெளியிடுகையில்,
அவுஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவுக்கிடையில் இது தொடர்பிலான ஒப்பந்தம் ஒன்றும் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக
 தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் நிர்வாகத்தில் வைத்து மேற்கொள்ளப்பட்ட அகதிகளுக்கான திட்டத்தில் பப்புவா நியுகினி மற்றும் நவுறு போன்ற தீவுகளில் உள்ள இலங்கை உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த அகதிகளை அமெரிக்கா பொறுப்பேற்க தீர்மானித்தது என்று அவர் 
குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, தற்போது அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டிய டொனால்ட் டரம்ப இதனை ஏற்றுக்கொள்வாரா? என்ற கேள்வியெழுந்திருந்த நிலையில், குறித்த திட்டம் அமுல்படுத்தப்படும் என ஜோன் கெரி தெரிவித்துள்ளார்.
ஆனால் அமெரிக்காவில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்கள் வெளியேற்றப்படுவார்கள் என டொனால்ட் ட்ரம்ப் வெளிப்படையாக கருத்து வெளியிட்டுவருகின்றார் என்பது 
குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



வியாழன், 10 நவம்பர், 2016

யாழில் 20 வயது பெண் பகலில் கடத்தல்- தந்தை பெரும் பதற்றம்!

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில், பட்டப் பகலில் மோட்டார் சைக்கிளில் வந்து ஒருவர் பெண்ணை கடத்திச் சென்றுள்ளார். 20 வயதான அப்பெண்ணின் தந்தையார் பெரும் பதற்றத்தோடு, பொலிஸ் நிலையம் சென்று முறையிட்டுள்ளார். சில வாரங்களுக்கு முன்னர்
 தன்னை ஒரு இளைஞர் சந்தித்ததாகவும். உங்கள் மகளின் காதலன் நான் என்று தன்னை அறிமுகப்படுத்தியதாகவும் அவர் அவர் தெரிவித்துள்ளார். தனது மகளை கல்யாணம் முடித்து தருமாறும் 
அவர் கேட்டுள்ளார்.
ஆனால் தான் அதனை மறுத்துவிட்டதாக தந்தை தற்போது பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். யாழில் ஆவா குழு, கஞ்சா கடத்தல், கள்ள சாரயம் என்று பல விடையங்கள் அரங்கேறிய நிலையில். தற்போது ஆள்கடத்தல் கூட மிக சர்வசாதாரணமாக இடம்பெற்று 
வருகிறது. 
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

புதன், 9 நவம்பர், 2016

கூடுதல் விலைகளிள் மருந்துகள்விற்பனையா ? உடனே அழையுங்கள்!

விலை குறைக்கப்பட்டுள்ள மருந்துகளை கூடுதல் விலைகளில் விற்றால் அவை தொடர்பில் அறிவிக்குமாறு சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு, அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் தற்போது நடைபெற்று வரும் நிகழ்விலேயே அமைச்சர் இவ்வாறு
 தெரிவித்துள்ளார்.
கட்டுப்பாட்டு விலையை மீறி மருந்து விற்பனை செய்யும் மருந்தகங்கள் தொடர்பிலான முறைப்பாடுகளை வழங்க, சுகாதார அமைச்சினால் விசேட தொலைபேசி இலக்கங்கள் 
அறிமுகப்படுத்தப்பட்டன.
இதன்படி, 011 3071073 அல்லது 011 3092269 என்ற தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொள்வதன் மூலமோ 011 2686113 என்ற பெக்ஸ் இலக்கத்துக்குத் தகவல் அனுப்புவதன் மூலமோ, மக்கள் தமது முறைப்பாடுகளை முன்வைக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



சனி, 5 நவம்பர், 2016

அகதிகள் படகு இத்தாலி கடலில் மூழ்கி விபத்து 100க்கும் மேற்பட்டோர்பலி!

இத்தாலி கடற்பரப்பில் அகதிகள்  படகு  ஒன்று மூழ்கி  விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தின் போது 140 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இந்த படகில் பயணித்த 2 பேர் மட்டுமே பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக இத்தாலிக்கான ஐ.நா.அகதிகளுககள் துறை உறுதிப்படுத்தியுள்ளது.
இதேவேளை, பொருளாதார நெருக்கடி, உள்நாட்டு போர் மற்றும் ஸ்தீரமற்ற அரசியல் தன்மை  போன்ற காரணங்களினால் சிரியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்தவர்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு கடல்வழியாக பாதுகாப்பற்ற பயணத்தை 
மேற்கொள்கின்றனர்.
இவ்வாறு செல்லும்போது அடிக்கடி ஏற்படும் படகு விபத்துகளினால் நூற்றுக்கணக்காக அகதிகள் ஒரே நேரத்தில் உயிரிழக்கும் சோகமான சம்பவம் தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றது 
குறிப்பிடத்தக்கது.
நேற்று முன்தினம் இத்தாலியின் லம்பேடுசா தீவை அண்மித்த பகுதியில் சுமார் 150க்கும் மேற்பட்ட அகதிகள் பயணித்த படகு கடலில் மூழ்கியதில் 100க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக 
உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்தின் போது 39 பேர் மட்டுமே தப்பித்து லம்பேடுசா தீவை அடைந்துள்ளனர். இந்நிலையில் நேற்று காலை இத்தாலி கடற்பரப்பில் மற்றுமொரு படகு விபத்துக்குள்ளாகியுள்ளது.

செவ்வாய், 1 நவம்பர், 2016

மரண அறிவித்தல் அமரர் நாகலிங்கம் ஆனந்தலிங்கம்

யாழ்.  தோப்பு அச்சுவேலியை  பிறப்பிடமாகவும், வசிப்பிடமாக  கொண்ட அமரர் நாகலிங்கம் ஆனந்தலிங்கம்  (முன்னாள் லொறி சாரதி) (ஆனந்தன் ) அவர்கள் 31,10,2016  திங்கக்கிழமை  அன்று 
காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற நாகலிங்கம் தம்பதிகளின் அன்பு   மகனும் , 
திருமதி ஞானேஸ்வரி   
 அவர்களின் அன்பு கணவரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 01-10-2016 . செவ் ய்க்கிழமை அன்று  அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தோப்பு   இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்ப ட்டது .
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
தகவல்...
குடும்பத்தினர் 

 .
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

ஞாயிறு, 30 அக்டோபர், 2016

பட்டாசு வெடித்து முல்லைத்தீவு-பகுதியில்முற்றாக எரிந்த வீடு!

முல்லைத்தீவு - கைவேலிப்பகுதியில் தீபாவளிப்பண்டிகையை முன்னிட்டு கொழுத்தப்பட்ட பட்டாசு வெடித்ததில்   வீடொன்று முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது
முல்லைத்தீவில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு கொழுத்தி மக்கள் கொண்டாடிக்கொண்டிருந்த நிலையில் முல்லைத்தீவு –கைவேலிப்பகுதியில் இன்று காலை 10.45 அளவில் வீடொன்றில் விழுந்த பட்டாசால் அந்த வீடு முற்றாக எரிந்துள்ளது.
தீயை  கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டபோதிலும், வீட்டிலிருந்து எந்தவொரு பொருட்களையும் மீிட்கமுடியாது அனைத்தும் தீக்கு இரையாகியுள்ளன.
பாடசாலைக்கு செல்லும் உதயப்பிரகாஸ் ஜெகதாயினியின் இரண்டு பிள்ளைகளும், தமது பாடசாலை உபகரணங்கள் முழுவதும் எரிந்துள்ளதால் பெரும் கவலையடைந்துள்ளனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>

செவ்வாய், 25 அக்டோபர், 2016

அரசினர் பேருந்தை வழிமறித்து பேருந்து மீது யாழில் மர்ம நபர்கள் தாக்குதல்!

இன்று ஏ-9 வீதியில் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்துக்கு முன்னால்,             இன்று.25.10.2016. பாரஊர்தியில் வந்த பத்து மர்ம நபர்கள், அரசினர் பேருந்தை வழிமறித்து அதற்குள் அத்துமீறி நுழைந்துள்ளனர்.
பேருந்துள் நுழைந்த குறித்த மர்ம நபர்கள் பேருந்து நடத்துநரிடமிருந்து பணத்தினையும் ரிக்கற் புத்தகத்தையும் பறித்துச் சென்றதுடன் பேருந்தையும் தாக்கியுள்ளனர்.
யாழ்ப்பாணத்திலிருந்து, வவுனியா நோக்கி புறப்பட்ட பேருந்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் குறித்து பயணிகள் தெரிவிக்கையில் பேருந்தைச் சேதப்படுத்தியவர்கள் மதுபோதையில் இருந்ததாகவும் 
தெரிவித்துள்ளனர்.
அத்துடன் இன்று கர்த்தால் தினமாகையால் யாழ்ப்பாண நகரமெங்கும் காவல்துறையினரும், விசேட அதிரடிப்படையினரும் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>



மரணஅறிவித்தல் அமரர் வேலுப்பிள்ளை

 இறப்பு : 25 ஒக்டொபர்  2016.
யாழ்  பத்தமேனி  அச்சுவேலியை பிறப்பிடமா​வும் நவற்கிரியை   வதிவிடமாகக்கொண்டிருக்க
அமரர் வேலுப்பிள்ளை அவர்கள்  25.10.2016..செவ்வாய்க்கிழமை   அன்று காலமானார்  இவர் திருமதி அழகம்மா  
 அவர்களின் அன்பு கணவஆவர்  
அன்னாரின் இறுதிக்கிரியை   அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர்   இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
தகவல்
குடும்பத்தினர் 
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


சனி, 22 அக்டோபர், 2016

மரண அறிவித்தல் அமரர் தம்பு ஜெயரத்தினம் (நயினார் )

இறப்பு : 21 ஒக்டொபர்  2016 
யாழ்.  நவக்கிரி புத்தூரைய்  பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும்   தற்காலி  வசிப்பிடமாக கோப்பாயை  கொண்ட தம்பு ஜெயரத்தினம் (நயினார் )அவர்கள் 21-10-2016 வெள்ளிக்கிழமை  அன்று 
காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பு  மாணிக்கம் தம்பதிகளின் அன்புக்கடைசி   மகனும் , காலஞ்சென்ற .திருமதி கமலாதேவி 
 அவர்களின் அன்பு கணவரும் 
செந்தூர்செல்வன் பிறேமாவதி  காலஞ்சென்ற  கிரிதரன்   ஆகியோரின் அன்புத்தந்தையும்  
  காலஞ்சென்ற  துரைராஜா  காலஞ்சென்ற செல்வராஜா  
காலஞ்சென்ற ஞாமணி  பாலசிங்கம் சின்னமணி    வித்திலாமணி சிவலிங்கமணி  ஆகியோரின்  அன்பு  சகோதரனும் 
 ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 23-10-2016 . ஞாயிற்று க்கிழமை அன்று  அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோப்பாய்  இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின் 
 கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால்
 துயருறும் குடும்பத்தினருக்கு  
 ஆழ்ந்த அனுதாபங்களை 
தெரிவித்து கொள்ளுகின்றோம் ..
தகவல்
குடும்பத்தினர்  .




வெள்ளி, 21 அக்டோபர், 2016

தனியார் பஸ் சாரதி யாழ் அச்சுவேலியில் மது போதையில் கைது!

மது போதையில்  பயணிகள் பஸ் செலுத்திச் சென்ற பஸ் சாரதியை  புதன்கிழமை (19.10.2016)  அன்று  மாலை அச்சுவேலி பகுதியில் கைது செய்துள்ளதாக அச்வேலி பொலிஸார் தெரிவித்தனர்.
அச்சுவேலி - யாழ்ப்பாணம் சேவையில் ஈடுபடும் தனியார் பஸ்ஸின் சாரதியே இவ்வாறு கைது செய்யப்பட்டார். வீதிச் சோதனையில் நின்றிருந்த பொலிஸார், இவரிடம் சோதனை நடத்தியபோது, மதுபோதையில் இருந்தமை தெரியவந்தது.
கைதான சாரதிக்கு எதிராக மல்லாகம் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக 
பொலிஸார் கூறினர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>


செவ்வாய், 18 அக்டோபர், 2016

விளையாட்டுத்துறையில் தேசிய ரீதியில் தடம் பதித்துள்ள இந்துக் கல்லூரி!

யாழ்ப்பாணம் தென்மராட்சி பிரதேசம் சாவகச்சேரி இந்துக் கல்லூரி விளையாட்டுத் துறையிலும் தேசிய ரீதியில் தடம் பதித்துள்ளது.
கண்டி போகம்பரை மைதானத்தில் இடம்பெற்றுவரும் தேசிய மட்ட தடகளப் போட்டிகளில் முதற்தடவையாக யா/சாவகச்சேரி இந்துக் கல்லூரி மூன்று பதக்கங்களினைப் பெற்று கல்லூரிக்கும், தென்மராட்சிப் பிரதேசத்திற்கும் மட்டுமன்றி ஒட்டுமொத்த தமிழினத்திற்கும் பெருமை
 சேர்த்துள்ளது.
கோலூன்றிப் பாய்தல் (17 வயதின் கீழ்) போட்டிப் பிரிவில்...
செல்வன் புவிதரன் 1ம் இடம் (தங்கப்பதக்கம்) ஆண்கள் பிரிவு
செல்வி ச.சங்கவி 2ம் இடம் (வெள்ளிப்பதக்கம்) பெண்கள் பிரிவு
கோலூன்றிப் பாய்தல் (19 வயதின் கீழ் - பெண்கள்) போட்டிப் பிரிவில்...
செல்வி கிரிஜா 2ம் இடம் (வெண்கலப் பதக்கம்)
அண்மைக் காலத்தில் பல சவால்களிற்கு 
முகம் கொடுத்த போதும் மனந்தளராது தொழிற்படும் கல்லூரி முதல்வர் திருவாளர் ந.சர்வேஸ்வரன் அவர்களது
 சீர்மிய நெறிப்படுத்தலிலும், விளையாட்டுத் துறையின் பொறுப்பாசிரியர் மதனரூபன் அவர்களது வழிப்படுத்தலிலும், பயிற்றுவிப்பாளர் கணாதீபனது மதிநுட்பம் வாய்ந்த பயிற்சியினாலும் இவ் வெற்றி
 சாத்தியமாகி உள்ளதாக கல்லூரி சமூகத்தினர் 
தெரிவிக்கின்றனர் 
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>>



>>

ஞாயிறு, 16 அக்டோபர், 2016

வரும் வருடங்களில் இலங்கையில் பாரிய மின்சார பற்றாக்குறை ஏற்படும்?

இலங்கையில் அடுத்த வரும் வருடங்களில் பாரிய மின்சார பற்றாக்குறை நிலவும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
அண்மைகாலமாக நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக நீர்ரேந்து பகுதிகள் வற்றியுள்ளமையால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலை நீடிக்குமாயின் மின்விநியோகம் சீராக வழங்குவதில் சிக்கல் நிலை ஏற்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நுரைச்சோலை அனல் மின் நிலையம் உயர்ந்தபட்ச வினைத்திறனுடன் செயற்படுவதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இதன் நாட்டுக்கு தேவையான மொத்த மின்சார தேவையை பூர்த்தி செய்யக்கூடிய வகையில் 50 சதவீதமான மின்சாரம் கிடைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் இரண்டு வாரங்களில் மழை கிடைக்காவிட்டாலும் தடையின்றி மின்சாரத்தை வழங்க முடியும். ஆனால் எதிர்வரும் இரண்டு மாதங்களில் மழை கிடைக்காவிட்டால் எதிர்வரும் ஜனவரி மாதம் அளவில் நாடு மின்சார நெருக்கடியை எதிர்கொள்ளலாம் என சபை 
சுட்டிக்காட்டியுள்ளது.
இதனால் திட்டமிட்ட அடிப்படையில் உத்தேச புதிய மின்சார நிலையங்களை ஆரம்பிப்பது அவசியம் என சபை சுட்டிக்காட்டியுள்ளது. இதற்கமைய பாரிய எட்டு மின் நிலையங்களை அமைக்க திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் தடையின்றி மின்சாரத்தை விநியோகிக்க முடியும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
பிராந்திய மாநிலமான தமிழகத்தில் மின்சார விநியோகம் பெரும் நெருக்கடியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அங்கு சுழற்சி முறையிலான மின்சார தடை ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறான நிலையில் இலங்கையில் அப்படியானதொரு பாதகமான நிலை இல்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை எதிர்காலத்தில் இலங்கையில் பிறப்பிக்கப்படும் மேலதிக மின்சார அலகுகளை சார்க் பிராந்திய நாடுகளுக்கு விநியோகிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்படுகிறது.
தெற்காசிய நாடுகளில் மின்சார பாவனையில் தட்டுப்பாடுகளை எதிர்நோக்கும் நாடுகளுக்கு இந்த மேலதிக மின்சார அலகுகளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தீர்னிமாக்கப்பட்டது.
முழு நாட்டுக்கும் ஒளி - இருளில் இருந்து விடுதலை என்ற தொனிப்பொருளின் கீழ் மின் உற்பத்தி நடவடிக்கைகள் உயர்ந்த மட்டத்தில் மேற்கொள்ளப்படுவதாக இலங்கை அமைச்சர் ரஞ்சித் சியம்பளாபிட்டிய தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>