siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வெள்ளி, 15 டிசம்பர், 2023

முசாபர்கரில் குழந்தைகளை கொன்று சதையை உண்ட நபர் கைது

பஞ்சாபில் உள்ள முசாபர்கரில் குழந்தைகளை கொன்று அவர்களின் சதையை சாப்பிட்டதாக ஒருவரை பாகிஸ்தான் போலீசார் கைது செய்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
முசாபர்கரின் கான் கர் பகுதியில் இருந்து ஐந்து நாட்களுக்கு முன்பு மூன்று குழந்தைகள் கடத்தப்பட்டதாக உள்ளூர் காவல்துறை தெரிவித்துள்ளது. அந்த மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகளில் இருவரை 
கொடூரமாக கொன்று அவர்களின் இறைச்சியை சாப்பிட்டதாக 
கூறப்படுகிறது.
எவ்வாறாயினும், உள்ளூர்வாசிகள் வழங்கிய தகவலின் பேரில் நடவடிக்கை எடுத்த பொலிஸாரால் ஏழு வயது அலி ஹசன் மீட்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
மூன்று வயது அப்துல்லா மற்றும் அவரது ஒன்றரை வயது சகோதரி ஹஃப்சா ஆகியோரை படுகொலை செய்த பின்னர், அந்த நபர் அவர்களின் இறைச்சியை சமைத்து சாப்பிட்டதாக அலி ஹசன் கூறினார்.
மேலும், முசாபர்காவில் உள்ள ஒரு உள்ளூர் தர்காவிலும் அந்த நபர் மனித சதையை விநியோகித்ததாக தெரிவிக்கப்பட்டது. முசாபர்கர் போலீசார், அப்துல்லாவின் எச்சங்கள் மற்றும் கத்திகளை வயலில்
 இருந்து மீட்டனர், 
ஆனால் ஹஃப்சாவைக் கண்டுபிடிப்பதற்கான தேடுதல் தொடர்கிறது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தற்போது மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் உள்ளார், மேலும் அவர் சுயநினைவு திரும்பியவுடன் கொடூரமான கொலைகள் பற்றிய மேலும் வெளிப்பாடுகள் வெளியிடப்படும் என்று 
தெரிவித்துள்ளது.
 காணாமல் போன குழந்தைகளின் தந்தையின் முறைப்பாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட சந்தேகநபருக்கு எதிராக கொலை மற்றும் பயங்கரவாத குற்றங்களுக்காக வழக்கு பதிவு செய்யப்பட்டது.என்பதாகும் 





 

வியாழன், 14 டிசம்பர், 2023

கிளிநொச்சியில் உள்ள பிரபல உணவகத்திற்கு சீல் வைத்த சுகாதார பிரிவினர்

உணவுக்குள் இலையான் இருந்த காரணத்தினால் கிளிநொச்சியில் உள்ள உணவகம் ஒன்றிக்கு சுகாதார பிரிவினர் 
சீல் வைத்துள்ளனர்.
 சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய குற்றச்சாட்டில் குறித்த உணவகத்திற்கு நீதிமன்ற உத்தரவுப்படி சுகாதார பிரிவினர் சீல்வைத்து
 பூட்டிள்ளனர்.
 ஏ9 வீதி பரந்தனில் உள்ள பிரபல உணவகமே இவ்வாறு  13-12-2023.அன்று 
 சீல் வைத்து மூடப்பட்டது. சில தினங்களுக்கு முன்னர் உணவகத்தில் வழங்கிய உணவுக்குள் இலையான் இருந்துள்ளது.
 இது தொடர்பில் பாதிக்கப்பட்ட தரப்பால் பொதுச் சுகாதார பரிசோதகருக்கு தெரியப்படுத்தவே, பார்வையிட்ட பொது சுகாதார பரிசோதகர் குறித்த உணவக உரிமையாளருக்கு எதிராக கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.என்பதும் குறிப்பிடத்தக்கது   

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

புதன், 13 டிசம்பர், 2023

உடுவிலை சேர்ந்த இளம் பெண் திருமணம் முடித்து ஒருவருடதில் உயிரிழப்பு

யாழில் திருமணமாகி ஒருவருடமே ஆன இளம் குடும்பப் பெண் ஒருவர்
.13-12-2023. இன்று  உயிரிழந்துள்ளார். 
உடுவில் கற்பகப் பிள்ளையார் கோவிலடியைச் சேர்ந்த சண்முகநாதன் துசிந்தினி என்ற 26 வயதுடைய யுவதியே இவ்வாறு 
உயிரிழந்தார். குறித்த பெண்ணின் கணவர் புலம்பெயர் தேசத்தில் வசிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
குறித்த யுவதி கடந்த 11ஆம் திகதி நோய்வாய்ப்பட்ட நிலையில்,  தெல்லிபாப்பா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். 
இந்நிலையில், மேலதிக சிகிச்சைக்காக  12-12-2023.அன்று யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அங்கு தொடர்ச்சியாக சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது..13-12-2023. இன்று  சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 
இறப்புக்கான காரணம் தெரியவராத நிலையில்,  அவரது பிரேத பரிசோதனை மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பப்பட்டுள்ளன. 
அத்துடன் மரணம் குறித்த விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஜெயபாலசிங்கம் மேற்கொண்டுள்ளார்.  குறித்த பெண்ணின் மரணம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.என்பதாகும்     


இந்தியாவில் ரயில் பயணத்தின் போது இளம் வயது மருத்துவர் உயிரிழப்பு

இந்தியாவில் ரயில் பயணத்தின் போது இளம் வயது மருத்துவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 ஹரியானாவை சேர்ந்தவர் 26 வயதான மயங்க் அகர்வால். இவர் டெல்லியில்
 மருத்துவராக பணியாற்றி வந்தார். மயங்க் 
அண்மையில் 
மெட்ரோ ரயிலில் பயணித்தார். பயணத்தின் போது அவர் ரயிலிலேயே சரிந்து விழுந்தார். அருகிலிருந்தவர்கள் மயங்கை தனியார்
 மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் அவர் மாரடைப்பால்
 உயிரிழந்ததை மருத்துவர்கள் உறுதி செய்தனர். இதற்கு முன்னதாக மயங்க் எந்தவித நோயாலும் பாதிக்கப்படவில்லை என்று தெரியவந்துள்ளது.
என்பதாகும்   






 

செவ்வாய், 12 டிசம்பர், 2023

நாட்டில் சமையல் எரிவாயுவின் விலையில் பாரிய அதிகரிப்பை எதிர்பார்க்கமுடியுமாம்

அடுத்த முறை மேற்கொள்ளப்படும் எரிவாயு விலைத்திருத்தத்தில் பாரிய அதிகரிப்பை எதிர்பார்க்க முடியும் என முன்னுரைக்கப்பட்டுள்ளது. 
அதாவது,  நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட VAT 
திருத்தச் சட்டத்தின் காரணமாக எரிவாயு விலை உயரும்
 நிலை ஏற்பட்டுள்ளது. 
 எரிவாயுவுக்கு இதுவரை VAT வரி விதிக்கப்படவில்லை, ஆனால் நேற்று (11.12) முதல் எரிவாயு மீது VAT வரி விதிக்கப்பட்டுள்ளது. 
 அதன்படி, எரிவாயுவுக்கு அதிகபட்சமாக 18% விலை உயர்வை எதிர்பார்க்கலாம் என முன்னுரைக்கப்பட்டுள்ளது. என்பதாகும்

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



திங்கள், 11 டிசம்பர், 2023

சுவிட்சர்லாந்தில் சியோனில் துப்பாக்கிச்சூடு : இருவர் பலி ஒருவர் காயம்

சுவிட்சர்லாந்தின் நகரமொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், மூன்றாவது நபர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இத்தாலி மற்றும் பிரெஞ்சு எல்லைகளுக்கு வெகு தொலைவில் உள்ள சுமார் 35,000 மக்கள் வசிக்கும் நகரமான சியோனில் இரண்டு வெவ்வேறு இடங்களில் சந்தேக நபர் பல துப்பாக்கிச் சூடு தாக்குதல்களை நடத்தியதாக பொலிஸார்  தெரிவித்துள்ளனர். 

 அடையாளம் காணப்படாத ஆண் துப்பாக்கிதாரியை கைது செய்ய அதிகாரிகளை அனுப்பியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

துப்பாக்கிதாரி என நம்பப்படும் 36 வயதுடைய நபரைப் பற்றிய தகவல்கள் தெரிந்தால் மக்கள் முன்வந்து தெரிவிக்குமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர். 

உள்ளூர் வழக்குரைஞர்கள் கொலை விசாரணையைத் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இதேவேளைதனிநபர் அடிப்படையில் உலகின் பணக்கார நாடுகளில் ஒன்றான சுவிட்ஸர்லாந்தில் துப்பாக்கி வைத்திருப்பவர்கள் அதிக அளவில் உள்ளனர்.   இதன்படி, 2.3 மில்லியன் துப்பாக்கிகள் பொது மக்களிடம் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. 

சுவிட்ஸர்லாந்தில் 2001 ஆம் ஆண்டு முதல் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடைபெறாமல் இருந்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன 
உலகில் பல பாகங்களில் நடக்கும் போரும் மக்களின் வறுமையும், பலர் மன நோய்க்கு உள்ளாக்கப்பட்டதுமே இதன் காரணம் என பொது நலவாதிகள் குறிப்பிடுகிறார்கள். .என்பது குறிப்பிடத்தக்கது.


அநுராதபுரம் போதனா வைத்தியசாலை மேல் தளத்தின் கூரையில் தொடர்ந்து தீ பரவல்

அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு சொந்தமான மெத்சிறி செவன கட்டிட வளாகத்தில் தீ பரவியுள்ளது.
தீயை அணைக்க அநுராதபுரம் மாநகர சபையின் தீயணைப்பு பிரிவின் இரண்டு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
தீ விபத்து ஏற்பட்டதையடுத்து கட்டிட வளாகத்தில் இருந்த உள்நோயாளிகளை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கட்டிடத்தின் மேல் தளத்தின் கூரையில் தொடர்ந்து தீ பரவி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. என்பது குறிப்பிடத்தக்கது   




 

ஞாயிறு, 10 டிசம்பர், 2023

நோயாளியை பராமரிப்போருக்கான இலவச தங்குமிட வசதி யாழில்

யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலைக்கு இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சிகிச்சை பெறுவதற்காக வருகை தருவோர் தங்குமிட வசதிக்காக பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதை நாம் அறிகின்றோம்.
இவற்றைக் கருத்தில் கொண்டு யாழ்ப்பாணம் மர்யம் ஜும்ஆ மஸ்ஜித் நிர்வாகத்தினராகிய நாம் யாழ்ப்பாணத்தை சேர்ந்த நலன் 
விரும்பி ஒருவர் ஊடாக, தங்கி நின்று நோயாளியை பராமரிப்போருக்கான இலவச தங்குமிட வசதி ஒன்றை ஏற்பாடு
 செய்துள்ளோம்.
எனவே சிரமங்களை தவிர்த்து, நேர்த்தியான நிர்வாக நடவடிக்கைகளை வழங்க முன்கூட்டிய தொடர்பாடல்கள் வழிவகுக்கும் என நம்புகிறோம். எமது நல்லறங்கள் அனைத்தையும் வல்லவன் ரஹ்மான் ஈருலகிலும் பொருந்திக்கொள்வானாக. ஆமீன்.
தலைவர் மர்யம் ஜும்ஆ 
மஸ்ஜித் யாழ்ப்பாணம்.
அஷ்ஷைஹ்க் 
Faizer M Aliyar (Casimi Madhani)
0777155119 
 0778831938
இந்த தொலைபேசி நம்பர்  களுடன் தொடர்பு கொள்ளும் படி கூறியுள்ளனர்  
என்பது குறிப்பிடத்தக்கது.




சனி, 9 டிசம்பர், 2023

நாட்டில் இனி சிறு குற்றங்களுக்கு சிறைத்தண்டனை இல்லையாம்

வறுமை அல்லது வேறு காரணங்களால் சிறு குற்றங்களைச் செய்யும் நபர்களை சிறையில் அடைப்பதற்குப் பதிலாக வீட்டுக் காவலில் வைப்பது போன்ற தண்டனைகளை வழங்குவதில் அரசாங்கம் கவனம் 
செலுத்தியுள்ளது.

சிறு குற்றங்களைச் செய்யும் நபர்களை சிறையில் அடைப்பதற்குப் பதிலாக, அந்த நபரின் பெற்றோர் அல்லது உறவினர்களிடம் பத்திரத்தில் கையொப்பமிட்டு அவர்களை ஒப்படைக்க முடியும் என நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
சிறிய தவறு செய்தவர்களை சிறையில் அடைப்பதற்கு பதிலாக, அவர்களின் உடலில் ‘சிப்’ பொருத்தி, வெளிநாடுகளில் உள்ளதைப் போன்று தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அவர்களின் 
நடமாட்டத்தை 
கண்காணிக்க எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சர் கூறினார்.
சில நீதிமன்றங்கள் சிறு குற்றங்களை செய்தவர்களை சிறையில் அடைப்பதோடு, பிணை வழங்குவதில் நீதிமன்றங்கள் தனது விருப்புகளை காட்டி வருகிறது. 
இந்த நாட்டின் சட்டப்படி விசாரணைகள் நிறைவடையாதது, சில இளைஞர்கள் சிறையில் இருந்து விடுதலை போன்ற காரணங்களால் பிணை 
மறுக்க வாய்ப்பு உள்ளது. 
எனவே , பிணை வழங்கும் சட்டத்தில் சில திருத்தங்கள் செய்வதாக நம்புவதாக அமைச்சர் கூறினார். என்பதாகும்




 

வெள்ளி, 8 டிசம்பர், 2023

வட்டுக்கோட்டை மயான தகனமேடையிலிருந்த இருப்புத் துண்டுகள் திருட்டு

யாழில் இந்து மயானம் ஒன்றின் தகன மேடையில் இருந்த இரும்பு தூண்கள் திருடப்பட்டுள்ள சம்பவம் மக்கள் மத்தியில் அதிருப்தியை 
ஏற்படுத்தியுள்ளது.
வட்டுக்கோட்டை வழுக்கையாறு, இந்து மயானத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 
இந்நிலையில் இரும்புத் தூண்கள் இல்லாமையினால் சடலங்களை எரியூட்டுவதில் மிகுந்த சிரமம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை கடந்த சில தினங்களுக்கு முன்னர் மயானத்தில் பொருத்தியிருந்த மின் குமிழ்களையும் திருடர்கள் திருடிச் சென்றுள்ளனர் எனக்
 கூறப்படுகின்றது.
 இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் எடுத்து மயானத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.என்பது குறிப்பிடத்தக்கது.

வியாழன், 7 டிசம்பர், 2023

இலங்கையில் புற்றுநோயாளர்களுக்காக மக்கள் வழங்கிய பணத்தை கொள்ளையடித்தவர்கள் விளக்கமறியலில்

இலங்கையில் புற்றுநோயாளர்களுக்காக மக்கள் வழங்கிய பணத்தை கொள்ளையடித்த குற்றச்சாட்டிற்காக கைது செய்யப்பட்ட மூவர் வரும் 19 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். 
இந்த மோசடியில் ஈடுபட்ட பிரதான சந்தேகநபர் என அடையாளம் காணப்பட்ட ஆண் மற்றும் இரு பெண்களே மேற்படி  விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பு நீதவான்  பிரசன்ன அல்விஸ்  இன்று (07.12) இந்த  உத்தரவை பிறப்பித்துள்ளார்.
ஹலவத்த பிரதேசத்தில் வசிக்கும் புற்று நோயாளர் ஒருவருக்கு பெண் ஒருவர் அழைப்பு விடுத்து அவரது தகவல்களை பெற்றுக்கொண்டு இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
.என்பது குறிப்பிடத்தக்கது



இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

புதன், 6 டிசம்பர், 2023

சுமத்ரா தீவில் எரிமலை வெடிப்பில் பலி எண்ணிக்கை அதிகரிப்பு

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் உள்ள மவுண்ட் மராபி என்ற இடத்தில் எரிமலை வெடித்துள்ளது. இந்நிலையில் குறித்த மலைப்பகுதியில் 75 மலையேற்ற வீரர்கள் மலையேற்றத்தில் ஈடுபட்டடிருந்தாக 
தெரவிக்கப்பட்டது . 
அதில் 43 பேர் எரிமலை வெடிப்பு காரணமாக மீண்டும் இறங்கியுள்ளனர். 11 பேர் சடலமாக மீடக்கப்பட்டனர். 3 பேர் உயிருடன் மீடக்கப்பட்ட நிலையில் 12 பேரை மீட்கும் பணியில் மீட்பு குழுவினர் ஈடுப்பட்டிருந்தனர்.
தற்போது காணாமல் போயிருந்த 12 பேரும் சடலமாக
 மீட்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி 
வெளியிட்டுள்ளன. 
இதன் காரணமாக குறித்த எரிமலை வெடிப்பினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 23 ஆக உயர்வடைந்துள்ளது என்பதாகும் 

செவ்வாய், 5 டிசம்பர், 2023

நாட்டில் கல்மடு விவசாயிகளுக்கு ஏற்படும் சிக்கல் நிலை அதிகரிக்கும் நோய்த் தாக்கம்

பல்வேறு வகையான நோய் தாக்கங்கள் காரணமாக கிளிநொச்சி விவசாயிகள் பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளனர்.
 2023 ஆம் ஆண்டுக்கான பெரும் போக பயிர்ச்செய்கை கல்மடு குளத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த விவசாயிகள் மடிச்சு கட்டி மற்றும் கபில நிற தத்தி நோய் தாக்கம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். 
 குறித்த பிரதேசத்தின் பல பகுதிகளிலும் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றம் காரணமாக சடுதியாக குறித்த தாக்கம் அதிகரித்த 
வண்ணம் உள்ளது. 
 நோய்த் தாக்கத்திற்கு பல தடவைகள் கிருமி நாசினிகள் விசிறப்பட்டிருந்த போதிலும் எந்தவித பயனும் அற்ற நிலையில் பயிர்கள் வளர்ச்சி இன்றி அதே நிலையிலேயே காணப்படுவதாக கவலை 
தெரிவிக்கின்றனர்.
பல ஆயிரம் ரூபாய் செலவு செய்து கிருமிநாசினிகள் கொள்வனவு செய்து விசிறியும் உரிய பயனை பெற முடியாத நிலையில் 
விவசாயிகள் மிகவும் பதிக்கப்பட்டுவதாக கவலை தெரிவித்துள்ளனர்.
என்பது குறிப்பிடத்தக்கது   


திங்கள், 4 டிசம்பர், 2023

யாழ் மாவட்ட டெங்கு தடுப்பு உதவியாளர்கள் கடமைகளில் இருந்து விலகியுள்ளனர்

யாழ் மாவட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து டெங்கு ஒழிப்பு கடமைகளில் இருந்து டெங்கு தடுப்பு உதவியாளர்கள் 
விலகியுள்ளனர்.
 தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரை யாழ்பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் டெங்கு தடுப்பு உதவியாளர்களால் 
கையளிக்கப்பட்டது.
 நிரந்தர நியமனம் மற்றும் நிலுவை கொடுப்பனவு வழங்கப்படாமை உள்ளிட்ட பல்வேறு தொழில்சார் சிக்கல்களுக்கு தீர்வு வழங்கப்பட 
வேண்டுமென கோரி அவர்கள் இந்த நடவடிக்கையை 
மேற்கொண்டுள்ளனர்.
 குறித்த சிக்கல்களுக்கு தீர்வு வழங்குமாறு கோரி கடந்த 01 ஆம் திகதி முதல் ஆரம்பித்த பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் எதிர்வரும் 08 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
 தற்போதைய காலப்பகுதியில் டெங்கு தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.யாழ்ப்பாண மாவட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து டெங்கு ஒழிப்பு கடமைகளில் இருந்து டெங்கு தடுப்பு உதவியாளர்கள் விலகியுள்ளனர்.
 தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரை யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் டெங்கு தடுப்பு உதவியாளர்களால் கையளிக்கப்பட்டது.
 நிரந்தர நியமனம் மற்றும் நிலுவை கொடுப்பனவு வழங்கப்படாமை உள்ளிட்ட பல்வேறு தொழில்சார் சிக்கல்களுக்கு தீர்வு வழங்கப்பட
 வேண்டுமென கோரி அவர்கள் இந்த நடவடிக்கையை
 மேற்கொண்டுள்ளனர்.
 குறித்த சிக்கல்களுக்கு தீர்வு வழங்குமாறு கோரி கடந்த 01 ஆம் திகதி முதல் ஆரம்பித்த பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் எதிர்வரும் 08 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
 தற்போதைய காலப்பகுதியில் டெங்கு தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகின்றமை  என்பதும் குறிப்பிடத்தக்கது 

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



ஞாயிறு, 3 டிசம்பர், 2023

கல்முனை நன்னடத்தை பாடசாலையில் உயிரிழந்தசிறுவன் சந்தேகத்தில் பெண் மேற்பார்வையாளர் கைது

நாட்டில் கல்முனை சிறுவர் நன்னடத்தை பாடசாலையில் தங்க வைக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த சிறுவனின் மரணம் தொடர்பில் அப்பாடசாலையின் பெண் மேற்பார்வையாளர் ஒருவரை சந்தேகத்தின் பேரில் கல்முனை தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இஸ்லாமபாத் பகுதியிலுள்ள பெண்கள் சிறுவர் நன்னடத்தை பாடசாலையில் கடந்த மாதம் 17ஆம் திகதி மணி ஒன்றை களவு செய்ததாக குற்றச்சாட்டின் பெயரில் கொக்குவில் பொலிசாரால் கைது 
செய்யப்பட்டு குறித்த 
சிறுவன், நீதிமன்ற வழக்கு விசாரணையின் பின்னர் நீதிவானின் உத்தரவின் பிரகாரம் குறித்த காப்பகத்தில் பாதுகாப்பிற்காக தங்க வைக்கப்பட்டிருந்த நிலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவத்தில் மர்மமான முறையில் மரணம் அடைந்தவர் மட்டக்களப்பு கொக்குவில் பகுதியை சேர்ந்த ஆனந்ததீபன் தர்சான்ந் எனும் 17 வயது மதிக்கத்தக்க சிறுவன் என அடையாளம் 
காணப்பட்டுள்ளார்.
இச்சிறுவன் கடந்த புதன்கிழமை (29.112023)அதிகாலை 3.30 மணி அளவில் உயிரிழந்து உள்ளதாக தமக்கு அறிவிக்கப்பட்டதாகவும் சிறுவனின் உடலில் காயத் தழும்புகள் இருப்பதனால் மரணத்தில்
 சந்தேகம் இருப்பதாக
 பெற்றோர் தெரிவித்ததை அடுத்து கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்திய சாலையில் வைக்கப்பட்ட சிறுவனின் சடலம் அம்பாறை பொது வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி 
வைக்கப்பட்டிருந்தது.
அங்கு சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையின் பிரகாரம் உட்காயங்களினால் மரணம் சம்பவித்துள்ளதாக
 தெரிவிக்கப்பட்டிருந்தது.
 இதனை அடுத்து சம்பவம் தொடர்பில் கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். ரம்ஷீன் பக்கீர் வழிகாட்டலில் பொலிஸ் குழுவினர் குறித்த பாடசாலைக்கு சென்று தொடர் விசாரணைகளை மேற்கொண்டனர். இந்நிலையில் குறித்த சிறுவனை 
அன்று தாக்கியதாக சந்தேகத்தின் பெயரில் 25 வயது மதிக்கத்தக்க அப்பாடசாலையில் கடமையாற்றும் மேற்பார்வையாளரான பெண் கைது செய்யப்பட்டார்.என்பது குறிப்பிடத்தக்கது 


சனி, 2 டிசம்பர், 2023

அச்சுவேலி நாவற்காடு பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் புத்தூர் இளைஞன் பலி

யாழ் பருத்தித்துறை பிரதான வீதியில் அச்சுவேலி நாவற்காடு பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
புத்தூர் பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகிழுந்து ஒன்றும், உந்துருளி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
என்பதும் குறிப்பிடத்தக்கது   


வெள்ளி, 1 டிசம்பர், 2023

நாட்டில் முச்சக்கர வண்டி கட்டணம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

நாட்டில் பெற்றோல் விலை குறைக்கப்பட்டுள்ள போதிலும், முச்சக்கரவண்டியின் பயண கட்டணத்தில் மாற்றம் ஏற்படுத்தப்படமாட்டாது என அகில இலங்கை முச்சக்கரவண்டியாளர் சங்கம் 
அறிவித்துள்ளது.
அத்துடன், பாடசாலைகளுக்கான போக்குவரத்து 
சேவையில் ஈடுபடும் பேருந்துகள் மற்றும் வான்களின் 
 கட்டணத்திலும் மாற்றம் ஏற்படுத்தப்படமாட்டாது என 
அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், இலங்கை கனிய வள கூட்டுத்தாபனத்தின் எரிபொருட்களின் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி, ஒக்டேன் 92 ரக
 பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை, 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி, அதன் புதிய விலை 346 ரூபாவாகும் என 
அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை, 3 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை
 426 ரூபாவாகும்.
இதேவேளை, ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை, 27 ரூபாவினால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 329 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அத்துடன், சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை, 3 ரூபாவினால்; உயர்த்தப்பட்டுள்ளது.
இதன்படி சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 434 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அத்துடன், மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை, 2 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 247 ரூபாவாகும் என இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம்
 தெரிவித்துள்ளது.
இதேவேளை, கனியவள கூட்டுத்தாபனத்தின் இந்த விலைத்திருத்தத்திற்கு இணையாக, லங்கா ஐ.ஓ.சி மற்றும் சினோபெக் நிறுவனங்களும் எரிபொருள் விலையினை திருத்தம் செய்துள்ளன.என்பதும் குறிப்பிடத்தக்கது   

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



வியாழன், 30 நவம்பர், 2023

பிலிப்பைன்ஸில் உலகின் சோகமான மாலி எனப்படும் யானை உயிரிழப்பு

விலங்குகள் நல ஆர்வலர்களால் "உலகின் சோகமான" (World's 'saddest' elephant) யானை என பெயரிடப்பட்ட "மாலி" எனப்படும் யானை உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மாலி பிலிப்பைன்ஸில் உள்ள ஒரு மிருகக்காட்சிசாலையில் உயிரிழந்துள்ள நிலையில் தனது வாழ்நாளின் பெரும்பகுதியை தனியாகவே 
கழித்துள்ளதாம்.
 'மணிலா' மிருகக்காட்சிசாலையில் நான்கு தசாப்தங்களாக இருந்து வரும் மாலியை மிகவும் நேசித்தவர்களிடமிருந்து அஞ்சலிகள் தொடர்ந்து குவிந்த வண்ணம் உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் 
தெரிவிக்கின்றன..
மாலியின் மரணம் குறித்து மணிலாவின் மேயர் பேஸ்புக் காணொளியில் அறிவித்துள்ளார். மாலியைப் பார்க்க மிருகக் காட்சிசாலைக்குச் சென்றது தனது மகிழ்ச்சியான குழந்தைப் பருவ நினைவுகளில் ஒன்றாகும் எனவும் அவர் தெரிவித்தார்.என்பது குறிப்பிடத்தக்கது 

புதன், 29 நவம்பர், 2023

தெற்கு ஜப்பான் கடலில் விழுந்து நொறுங்கிய அமெரிக்க ராணுவ விமானம்

எட்டு பேரை ஏற்றிச் சென்ற அமெரிக்க ராணுவத்தின் ஆஸ்ப்ரே விமானம்.
29-11-2023. இன்று தெற்கு ஜப்பான் கடலில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது
. இதுகுறித்து தகவல் அறிந்த ஜப்பானிய கடலோரக் 
காவல்படை தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்காக விபத்து நடந்த இடத்திற்குச் சென்றுள்ளது.
அமெரிக்க ராணுவத்தின் டில்ட்ரோட்டர் விமானமான ஆஸ்ப்ரே ஹெலிகாப்டராகவும், டர்போபிராப் விமானமாகவும் 
செயல்படக்கூடியது. 
இதில் 8 பேர் பயணித்ததாக தெரியவந்துள்ளது. விமானத்தில் இருந்தவர்களுக்கு என்ன ஆனது என்பது பற்றிய விவரங்கள் குறித்து உடனடியாகத் தெரியவில்லை என்று கடலோர காவல்படை செய்தித் தொடர்பாளர் கசுவோ ஓகாவா தெரிவித்தார்.
தெற்கு பிரதான தீவான கியூஷுவில் உள்ள ககோஷிமாவுக்கு தெற்கே உள்ள யாகுஷிமா தீவில் விபத்துக்குள்ளான இடத்திற்கு அருகே கடலோர காவல்படைக்கு ஒரு மீன்பிடி படகில் இருந்து அவசர அழைப்பு வந்ததாகவும் அவர் கூறினார்.
ஆஸ்ப்ரே எந்த அமெரிக்கத் தளத்தைச் சேர்ந்தது என்பது குறித்தும் ஆனால் அந்த விமானம் இவாகுனியில் இருந்து ஒகினாவாவுக்குச் சென்றதாகவும் கூறப்படுகிறது.என்பதும் குறிப்பிடத்தக்கது


செவ்வாய், 28 நவம்பர், 2023

சாவகச்சேரி பகுதியில் மின்சாரம் தாக்கி இளைஞன் உயிரிழப்பு

யாழ் சாவகச்சேரி பகுதியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்தார்.
குறித்த பகுதியில் உள்ள நிதி நிறுவனம் ஒன்றில் பணியாற்றும், 
நுணாவிலைச் சேர்ந்த 26 வயதுடைய ஒருவரே, சம்பவத்தில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அலுவலகத்திற்கான நீர் விநியோகத்தில் ஏற்பட்ட தடையினை கண்காணிப்பதற்காக, நீர் தொட்டி வைக்கப்பட்டுள்ள இடத்திற்கு சென்ற போது, மின்சார தாக்குதலுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து அவர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
என்பதும் குறிப்பிடத்தக்கது



திங்கள், 27 நவம்பர், 2023

ரொறன்ரோவில் இடம் பெற்ற விபத்தொன்றில் ஐவர் கொல்லப்பட்டுள்ளனர்

கனடாவின் ரொறன்ரோ பெரும்பாக பகுதியில் இடம்பெற்ற கோர விபத்து சம்பவம் ஒன்றில் ஐந்து பேர் கொல்லப்பட்டுள்ளனர். நான்கு பதின்ம வயது உடையவர்களும் ஒரு பெண்ணும் இந்த சம்பவத்தில் 
உயிரிழந்துள்ளனர்.
 இரண்டு வாகனங்கள் மோதி கொண்டதில் இந்த விபத்து இடம் பெற்றுள்ளது என தெரிவிக்கப்படுகிறது. ஹிடன்வெளி பகுதியின் 60-ஆம்
 இலக்க அதிவேக நெடுஞ்சாலையில் இந்த விபத்து
 இடம்பெற்றுள்ளது.
 15 முதல் 17 வயது மதிக்கத்தக்க இளைஞர்களே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர். இவர்கள் நோர்த் யோர்க் மற்றும் ரிச்மண்டில் பகுதியைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். மேலும் 
இந்த சம்பவத்தில் சேர்ந்த 42 வயதான பெண் ஒருவரும்
 உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் படுகாயமடைந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோதும் குறித்த பெண் சிகிச்சை பலனின்றி 
உயிர் இழந்துள்ளார்.
 இந்த விபத்து காரணமாக அறுபதாம் இலக்க அதிவேக நெடுஞ்சாலை சில மணித்தியாலங்கள் மூடப்பட்டிருந்தமை 
குறிப்பிடத்தக்கத.
 இந்த விபத்து சம்பவம் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் இருந்தால் அது குறித்து அறிவிக்குமாறு பொலிஸார் கூறியுள்ளார்.
என்பதும் குறிப்பிடத்தக்கது.




ஞாயிறு, 26 நவம்பர், 2023

பண்ணை பகுதியில் மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து

யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில்.26-11-2023. இன்று நோயாளர் காவு வண்டியுடன்,  மேலும் இரண்டு வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. 
நோயாளர் காவு வண்டிக்குப் பின்னால் வந்த
 முச்சக்கரவண்டி, 
 நோயாளர் காவு வண்டியை முந்திச் செல்ல 
முற்பட்ட வேளை எதிரே வந்த வாகனத்துடன் மோதி,  நோயாளர் காவு வண்டிக்கும் எதிரே வந்த வாகனத்துக்கும் இடையில் 
சிக்கிக் கொண்டது. 
குறித்த விபத்தினால் உயிர் சேதம் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.  இச்சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். என்பதும் குறிப்பிடத்தக்கது 





 

சனி, 25 நவம்பர், 2023

கேரள மாநிலத்தில் பல்கலைக்கழக விழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி மாணவர்கள் மரணம்

இந்தியாவில் கேரள மாநிலம் கொச்சி அருகே உள்ள பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 4 மாணவர்கள்
 உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை
 ஏற்படுத்தி உள்ளது.
கொச்சி அருகே களமசேரி பகுதியில் உள்ள கொச்சி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் உள்ளது.
இங்கு நடைபெற்ற விழாவில் அதிகளவிலான மாணவர்கள் பங்கேற்றதாக தெரிகிறது. மேலும், மாணவர்கள் அல்லாதோரும்
 ஏராளமானோர் கலந்து கொண்டதாக தகவல்
 வெளியாகியுள்ளது.
அரங்கம் நிரம்பி வழிந்த நிலையில், அரங்கிற்கு வெளியேயும் அதிக அளவிலானோர் நின்று கொண்டிருந்தனர். திடீரென மழை பெய்ததால் அரங்கத்திற்கு வெளியே இருந்தவர்கள், உள்ளே நுழைந்ததால் கூட்ட நெரிசலால் விபத்து ஏற்பட்டுள்ளது.
 கூட்ட நெரிசலில் சிக்கி 4 மாணவர்கள் உயிரிழந்த நிலையில், 12 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
என்பதும் குறிப்பிடத்தக்கது.


   

வெள்ளி, 24 நவம்பர், 2023

யாழ் வட்டுக்கோட்டை பொலிஸாரின் தாக்குதலில் பலியான இளைஞனின் நீதிமன்றின் உத்தரவு

வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் வைத்து சித்தன்கேணி இளைஞன் ஒருவர் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் 
உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் அது தொடர்பான வழக்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்டது. ந்த வழக்கில் 31 சட்டத்தரணிகள் ஆஜராகி இருந்தனர். இந்நிலையில் கைது செய்யப்பட்டு 
தாக்குதலுக்கு உள்ளான மற்றுமொரு இளைஞன் அடையாளம் காட்டும் மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்களையும் கைது செய்யுமாறு நீதிவான் ஆனந்தராஜா உத்தரவிட்டார் .என்பதும் குறிப்பிடத்தக்கது