யாழ் சாவகச்சேரி பகுதியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்தார்.
குறித்த பகுதியில் உள்ள நிதி நிறுவனம் ஒன்றில் பணியாற்றும்,
நுணாவிலைச் சேர்ந்த 26 வயதுடைய ஒருவரே, சம்பவத்தில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அலுவலகத்திற்கான நீர் விநியோகத்தில் ஏற்பட்ட தடையினை கண்காணிப்பதற்காக, நீர் தொட்டி வைக்கப்பட்டுள்ள இடத்திற்கு சென்ற போது, மின்சார தாக்குதலுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து அவர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
என்பதும் குறிப்பிடத்தக்கது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக