siruppiddy

18

siruppiddy

unkal

unkal

வியாழன், 30 நவம்பர், 2023

பிலிப்பைன்ஸில் உலகின் சோகமான மாலி எனப்படும் யானை உயிரிழப்பு

விலங்குகள் நல ஆர்வலர்களால் "உலகின் சோகமான" (World's 'saddest' elephant) யானை என பெயரிடப்பட்ட "மாலி" எனப்படும் யானை உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மாலி பிலிப்பைன்ஸில் உள்ள ஒரு மிருகக்காட்சிசாலையில் உயிரிழந்துள்ள நிலையில் தனது வாழ்நாளின் பெரும்பகுதியை தனியாகவே 
கழித்துள்ளதாம்.
 'மணிலா' மிருகக்காட்சிசாலையில் நான்கு தசாப்தங்களாக இருந்து வரும் மாலியை மிகவும் நேசித்தவர்களிடமிருந்து அஞ்சலிகள் தொடர்ந்து குவிந்த வண்ணம் உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் 
தெரிவிக்கின்றன..
மாலியின் மரணம் குறித்து மணிலாவின் மேயர் பேஸ்புக் காணொளியில் அறிவித்துள்ளார். மாலியைப் பார்க்க மிருகக் காட்சிசாலைக்குச் சென்றது தனது மகிழ்ச்சியான குழந்தைப் பருவ நினைவுகளில் ஒன்றாகும் எனவும் அவர் தெரிவித்தார்.என்பது குறிப்பிடத்தக்கது 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக