கேகாலை நகரை அண்டிய கிராமொன்றில் தனது தந்தையுடன் ‘தண்ணி பார்ட்டி’ நடத்திக்கொண்டிருந்த நான்கு நண்பர்களில் ஒருவர் அவர் கேட்ட பைட்ஸை தயாரித்துக் கொடுக்கவில்லை என்ற கோபத்தில் 16 வயது மாணவனின் கன்னத்தில் அறைந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்திய கேகாலை தலைமையகப் பொலிஸார் அந்த நபரை
பொலிஸ் நிலையத்துக்கு வரவழைத்து அவரது கன்னத்தில் பலமுறை அறைந்து தண்டனையை நிறைவேற்றிய வித்தியாசமான சம்பவம் நடந்திருக்கிறது.
இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:-
கேகாலை நகரை அண்டிய கிராமொன்றில் தனது தாய், தந்தையுடன் இந்த மாணவன் வசித்துவந்தார். நேற்றுமுன்தினம்
தாய் நேர்த்திக்கடனொன்றை நிறைவேற்றுவதற்காக கதிர்காமத்துக்குச் சென்றிருந்தார்.
இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்ட வங்கியொன்றிலிருந்து ஓய்வுபெற்றிருந்த தந்தை தனது அயற்பிரதேச
நண்பர்கள் நால்வரை வீட்டுக்கு அழைத்து தண்ணி பார்ட்டி நடத்தியிருக்கிறார். தங்களுக்கு வாய்க்கு ருசியாக ஏதாவது பைட்ஸ் செய்து தருமாறு நண்பர்களில் ஒருவர் இந்தப் பையனுக்கு கட்டளையிட்டிருக்கிறார். சிறுவன் அதைச் செய்யாமல் தனது அறைக்குச் சென்று படுத்துவிட்டான்.
கேட்ட பைட்ஸ் கிடைக்காத ஆத்திரத்தில் அறைக்கு வந்த நண்பர் பையனை எழுப்பி கன்னத்தில் அறைந்திருக்கிறார். தந்தையும் அதைக் கண்டிக்காமல் நண்பருக்கு ஒத்து ஊதியிருக்கின்றார்.
தாய் வீட்டுக்குத் திரும்பியதும் சிறுவன் இந்தச் சம்பவத்தை அவரிடம் சொல்லியிருக்கிறார். ஆத்திரமடைந்த தாய் கேகாலை தலைமையகப் பொலிஸில் முறைப்பாடொன்றைச் செய்ததும்
சிறுவனின் தந்தையையும் அவரது ‘அறை’ நண்பரையும் பொலிஸ் நிலையத்துக்கு வரவழைத்த பொலிஸார்
வட்டியும் முதலுமாக அந்த நண்பருக்கு பல அறைகள் கொடுத்தபின் தந்தைக்கும் கடுமையான எச்சரிக்கையை விடுத்து விடுதலைசெய்தனர்.
பொலிஸாரின் இந்த விசித்திர தண்டனையை சிறுவனும் அவரது தாயாரும் விஷமச் சிரிப்புடன் பார்த்துக்கொண்டிருந்தது விசேடமாகும் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக