தொழிலுக்கு சென்று கொண்டிருந்த 21 வயது யுவதி ஒருவரை, முச்சக்கரவண்டியில் கடத்திச் சென்று கொண்டிருந்த போது, ரிதிமாலியத்த பொலிஸாரினால், யுவதி மீட்கப்பட்டதுடன், முச்சக்கரவண்டி சாரதியும் கைது
செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் நேற்று ரிதிமாலியத்த பகுதியின் அபயபுர என்ற இடத்தில் இடம்பெற்றுள்ளது.
அவசர பொலிஸ் இலக்கமான 119க்கு கிடைக்கப் பெற்ற தகவலையடுத்து, விரைந்த பொலிஸார், குறிப்பிட்ட முச்சக்கரவண்டியை தடுத்து நிறுத்தி சோதனையிட்ட போதே, கடத்திச் செல்லப்பட்டு கொண்டிருந்த குறித்த யுவதி மீட்கப்பட்டார். தொழிலுக்கு சென்று கொண்டிருந்த போதே, அவ் யுவதி, கடத்தப்பட்டமை ஆரம்ப விசாரணைகளிலிருந்து
தெரிய வந்துள்ளது.
கைது செய்யப்பட்ட முச்சக்கரவண்டி சாரதியை, மஹியங்கனை நீதி வான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய நடவடிக்கைகளை மேற் கொண்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>
0 கருத்துகள்:
கருத்துரையிடுக